தேனி மேலபேட்டை முருகர்

தேனி நகரத்தின் மிகவும் மகத்துவம் நிறைந்த திருவிழா

தேனி மேலபேட்டை முருகர்

 ரத ஊர்வலத்தின் காட்சி

முருகர்

       தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முருகர் 27/11/2012 அன்று கார்த்திகை திருநாள் நகர்வலத்தின் போது மக்களை அருள்பாலிக்கும் காட்சி

காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவில் தெப்பகுளம்


காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவில்

இங்கு ராகு கேது பரிகார பூஜைகள் நடத்தப்படுகிறது . திருமண தடை உள்ளவர்கள் தடை நீங்கி பலன் பெற்று செல்கிறார்கள். ராகு கேது பூஜையின் போது மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கிறார்கள் 

காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவில்

        இந்த கோயில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் என்ற ஊரில் பேருந்து நிலையத்தின் மிக அருகில் அமைந்துள்ளது   நாயக்க மன்னர்கள்  ஆட்சிக் காலகட்டத்தில் புகழ் பெற்ற ராணி மங்கம்மாவின், உத்தமபாளையம் பகுதி     படை பொறுப்பை ஏற்று நடத்தி வந்தவர்  கொண்ட ம நாயக்கர்   இவர் காளகஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது மிகுத்த பக்தி கொண்டவர். அவர் வயதான காரணத்தால் காளகஸ்தி செல்ல முடியாமல் அவதிபட்டார் . இவரின் நிலையை அறிந்த காளாத்தீஸ்வரர், அவர் இருக்குமிடத்திலேயே கோவில் அமைத்து வழிபடலாம் என்றும், இங்கு வழிபட்டால், காளகஸ்திக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்றும் அருளினார். உடனே அவர் இப்பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர் பூஜையா நாயக்கரிடம்  தெரிவித்தார். அதன் பிறகு பாளையக்காரர் ஒரு கோவில் அமைத்துக் கொடுத்தார். இந்தக் கோயில் தென் காளகஸ்தி என்று அழைக்கப்படுகிறது.
சிவனுக்கு சிலை செய்த மன்னர் அம்மனுக்கு சிலை அமைக்க பல முறை முயன்று தோல்வியுற்றார் . இதனால் அம்பிகை இல்லாத கோவிலாக சில காலம் இருந்தது . பிறகு இங்கு கொண்டம நாயக்கரின் கனவில் தோன்றிய சிவன் முல்லை ஆற்றில் அம்பிகை வருவாள் என்றார் , அதன்படி ஆற்றில் ஒரு கூடை மிதந்தது வந்தது அதனுள் அம்மனின் சிலையை கண்ட ஊர் மக்கள் மகிழ்ந்து அம்மனுக்கு ஞானாம்பிகை என்று பெயர் சூட்டினர். இவ்வம்மன் இங்கு புகழ் பெற்றவர் பலருக்கு ஞானாம்பிகை கோவில் என்றால் தான் தெரியும் என்ற அளவுக்கு புகழ் பெற்றவர் . அம்மனுக்கு பக்கத்தில் முருகன் காட்சி அளிப்பது இங்கு சிறப்பு , தாய் சேய்  நலன் விரும்புவோர் இங்கு வந்து வழிபட்டால் உறவு நன்கு அமையும் .
இந்த தெப்பக்குளம் மிக புனிதமாக கருதப்படுகிறது ஆனால் பராமரிப்பு இல்லாததால் மிகவும் அசுத்தமடைந்துள்ளது.பாதுகாப்பு சுற்று சுவர் முறையாக இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது 

வைகை அணை


வைகை அணை


வைகை அணை (Vaigai Dam)


வைகை அணை (Vaigai Dam)



வைகை அணை (Vaigai Dam)


வைகை அணை இசை நடன நீருற்று


வைகை அணை (Vaigai Dam


வைகை அணை


வைகை அணை ( Vaigai Dam )

மனதையும் கண்ணையும் கவரும் இசை நடன நீருற்று 

வைகை அணை (Vaigai Dam )


தேனி மாவட்டம் வருசநாடு  மலைப்பகுதியில் உருவாகி ஓடி வரும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணை 1955 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ( சென்னை மாகாண ) திரு கே. காம்ராஜர் அவர்களால் துவங்கப்பட்டு 1959   ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணை 111அடி உயரம் உடையது. இந்த அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 71அடி நீரைத் தேக்கி சேமித்து வைக்க முடியும்.























வைகை அணையின் இருபுறமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல வசதியாக அழகிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணையின் முன்புறமுள்ள சிறிய பாலத்தின் வழியே இரு புறமும் உள்ள பூங்காக்களுக்குச் செல்ல முடியும். இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு பூங்காவில் தண்ணீர் ஆறு போல் மேலிருந்து கீழ் வரை வரும்படி செயற்கை அமைப்பும் செய்யப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் சில மீட்டர் தூரம் வரை பாய்ந்து இறுதியில் சின்ன அணை போன்ற அமைப்பின் வழியாக வெளிவந்து ஒரு அரக்கன் வாயின் வழியே வெளியேறும்படி செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கை வடிவமைப்பில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் முக்கிய விடுமுறை நாட்களில் மட்டும் தண்ணீர் திறந்த விடப்படுகிறது.




















வைகை அணையின் கீழ் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் விசை மூலம் மின் உற்பத்தி செய்யும் வைகை நீர்மின் சக்தி திட்டம் ஒன்று தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் செய்யப்பட்டு வருகிறது. இந்த நீர்மின் உற்பத்தி நிலையத்திற்குள் சென்று பார்வையிட அனுமதி இல்லை.









இந்த  அணை பெருந்தலைவர் கே காமராஜர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது 



















    இரவு நேரத்தில் காட்டப்படும் இசை நடன மின்விளக்கு நீர் ஊற்றுக்கள்