தீர்த்த கிணறு

பிலாவடி கருப்பசாமி கோயில் அருகில் உள்ள தீர்த்த கிணறு இந்த கிணற்றினுள்  செம்பை தங்கமாக்கும் மூலிகை இருப்பதாக பரவலான ஒரு செய்தி உண்டு. பல மூலிகையின் சாற்றுடன், நவபாஷாணங்களின்  சேர்கையால் செம்பை தங்கமாக உருவாக முடியும். இந்த வித்தைகளை கற்றுக்கொள்ள தங்கள் வாழ்நாளையும், பொருளையும் இழந்தவர்கள் பலர். அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். இது சாமானிய மக்களுக்கு கைவராத கலை. பொருளாசை இல்லாதவர்களுக்கு மட்டும் இது சாத்தியமாகும். 

தவசி பாறை



சதுரகிரியில் பலுணி என்றொரு மரம் உள்ளதாம், இம்மரத்தைக் குடைந்து அதனுள் பாதரசத்தைச் செலுத்தி குறிப்பிட்ட மாதங்கள் கழித்து அதனை எடுத்துப் பக்குவப்படுத்தி வாயில் அடக்கிக்கொண்டால் ஆகாய மார்க்கமாக நினைத்த இடத்திற்குச் செல்லலாமாம்.
ஓரழிஞ்சி மரம், தேவதாரு மரம் ஆகியவற்றின் பூவை முறைப்படி பக்குவப்படுத்தி திலகமாக இட்டுக்கொண்டால் யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்து விடலாமாம்.
“கனையெருமை'' என்ற மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை கத்துவது போல் கத்துமாம்.
“சுணங்க விருட்சம்’ என்றொரு மூலிகை காலாங்கி நாதர் குகைக்குச் சமீபமாக இருக்கிறதாம். இதன் வேர் கருப்பாகவும், பழம் நாய்க்குட்டி போலும் இருக்குமாம், அந்தக் கனி பழுத்துக் கீழே விழும்போது நாய்க்குட்டி குரைப்பது போல குரைத்துக்கொண்டே கீழே விழுமாம். கீழே விழுந்த கனி பத்தே வினாடிகளில் மறுபடியும் அந்த மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளுமாம்.
சதுரகிரி என்று அழைக்கப்படுவது   கிழக்கில் இந்திரபுரி, மேற்கில் வருணகிரி, வடக்கில் குபேர கிரி, தெற்கில் எமகிரி இப்படி சதுரம் போல் அமைந்து மலைகளுக்கு மத்தியில் சிவகிரி, பிரம்ம கிரி, விஷ்ணு கிரி, சித்த கிரி என நான்கு மலைகள் அமைந்து இந்த மலைப்பிரதேசம் சதுரகிரி என்று அழைக்கப்பெறுகிறது. அற்புத மலையில் பிரதானமாக அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆலயங்கள் தவிர, பிலாவடி கருப்பு, ரெட்டை லிங்கம், பெரிய மகாலிங்கம் போன்ற தெய்வங்கள் குறிப்பிடத்தக்கவை. சதுரகிரியின் மையத்தில் சஞ்சீவி மலையும் இருக்கிறது.

பதினெட்டு சித்தர்கள்


 சட்டநாதமுனி தவம் செய்த குகை

அருள்மிகு சந்தன முருகன்




 அருள்மிகு சந்தன மகாலிங்கம்
அருள்மிகு சந்தன விநாயகர்

சந்தன மகாலிங்கம் கோயில் பகுதி

ஆகாய கங்கை தீர்த்தம் 


 இத்திருத்தலம் பஞ்சபூச லிங்கத்தலமாகும். இவற்றில் அருள்மிகு சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகும். அருள்மிகு சந்தன மகாலிங்கம் தைவிக லிங்கமாகும். அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டதும் இத்திருத்தலம். இத்திருத்தலத்திற்கு ஒரு முறை வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தால் பல நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு. 
இத்தலத்தில் அமைந்துள்ள சந்திர தீர்த்தம், கெளண்டின்ய தீர்த்தம், ஆகாய கங்கை தீர்த்தம் ஆகியவற்றில் நீராடியவர்கள் பரமானந்த வாழ்வைப் பெற்று மகிழ்வார். புத்துணர்வு பெறுவர். திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி; சிதம்பரத்தை வணங்கினால் முக்தி; திருவாரூரில் பிறக்க முக்தி கிடைக்கும். காசியில் இறக்க முக்தி. இந்த சதுரகிரி தலத்திலோ இந்த நால்வகை முக்தியும் கிடைக்கும் என்பர். இம்மலைத் தலத்தின் சஞ்சீவி மூலிகைக் காற்றினால் ஆயுள் அதிகரிப்பதோடு, நோயில்லா வாழ்வு அமையும் என்கிறார்கள்.
 சந்தன மகாலிங்க சுவாமி கோயில் கோபுரம்












புராணம்


சுந்தர மகாலிங்கம் கோவிலும் அதன் சுற்றுபுறமும்



 சுந்தர மகாலிங்கம் கோவில் பின்புறம்




சுந்தரமூர்த்தி சுவாமி சன்னதி




பிலாவடி கருப்பசாமி கோவில்



வன துர்க்கை




தேனி, கம்பம் செல்ல வழிகாட்டும் கைகாட்டி


நாவல் ஊற்று

 

 நாவல் ஊற்றின் அருகில் உள்ள மலையேறும் பாதை
 நாவல் ஊற்றின் அருகில் உள்ள லிங்கங்கள்
 நாவல் ஊற்று இந்த ஊற்றின் குடிநீரை குடித்தால் சர்க்கரை வியாதி கட்டுப்படும்,இதன் சுவை நாவல் பழகொட்டையை தின்று பின்பு தண்ணீர் குடித்தது போல் சற்று துவர்ப்பு சுவையுடன் நன்றாக உள்ளது

இரட்டை லிங்கம்

 இரட்டை லிங்கம் இதில் ஒருவர் சிவன் மற்றொருவர் விஷ்னு

கோரக்கர் குகை





 கோரக்கர் சித்தர் தவம் செய்த குகையும் அருகில் உள்ள நீறூற்றும்
 இங்கு கூட தற்பொழுது ஆன்மீகம் வியாபாரமாக மாறிக்கொண்டிருக்கிறது, கையில் கயிறு கட்ட கயிறு ஒன்றுக்கு ரூ.10-


 சுக்குமல்லி காபி கடை