மாரியம்மன்

தேனி மேலப்பேட்டை நாடார் உறவின்முறை பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள மாரியம்மன பங்குனி திருவிழா ஊர்வலத்தின் போது அருள் பாலித்த காட்சி 

சதுரகிரிமலை பயணம்




                                                                                                                                                          சதுரகிரி மலை பயணத்தின் போது நடக்க இயலாத பக்தர்களை  தொட்டில் கட்டி தூக்கி செல்லும் காட்சி. ஐய்யப்பன் கோவிலில் ''டோலி'' கட்டி தூக்கி செல்வார்கள் அதுபோல,  சதுரகிரி மலை பாதை மிக அகலம் குறைவாக உள்ளதாலும், செங்குத்தான மலை பாதை வளைவுகள் உள்ளதாலும். நாற்காலி வைத்து டோலி கட்டிநான்கு பேர் தூக்கி செல்ல இயலாமல் தொட்டில் கட்டி இருவர் மட்டுமே தூக்கி செல்கிறார்கள்.

பலவகை உணவுகள்












                 









இப்போ கல்யாண வீட்டுல எல்லாம் சுயமா எடுத்து சாப்பிடும் முறை வந்த பிறகு சாப்பாட்டுடன் ( சாப்பாடு இல்லீங்க ) சாப்பிடுவதும் சாப்பிட்ட பின் சாப்பிடும் உணவுகளும். போட்டோ எடுக்கும் போது  எல்லோரும் ஒருமாதிரி என்னை பார்த்ததால் இன்னும் ஐஸ்கிரீம், பழங்கள், பானங்கள், சாப்பாடு என   நிறைய உணவுகளை போட்டோ எடுக்கவில்லை. மொத்தம் 64 வகைகள் சாப்பாடு எண்ணத்தான் முடிந்தது. சாப்பிட ம்ஹூம் ...

அம்பாஜி கோயில் Ambaji temple







இந்தியாவில்  குஜராத் மாநிலத்தில் பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் அம்பாஜி ஆகும். இது பார்வதி தேவியின் பெயராகவும் விளங்குகிறது. இது புகழ் பெற்ற சக்திஸ்தலங்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்த இடமாகவும் உள்ளது. அம்பாஜி என்று அழைக்கப்படும் ''அம்மே பவானி'' கோவிலாகும்.
இத்திருக்கோவிலின் கருவறையில் இறைவியின் திரு உருவம் எதுவும் இல்லை ஆனால் பீடம் மட்டுமே உள்ளது. அந்த பீடத்தின்மேல் அம்பாள் பவானியின் ஆடை ஆபரணங்களும் அவர் உருவம் இருப்பது போன்றே வைக்கப்பட்டு ஆராதனைகளும், பூஜைகளும்   நடைபெறுகின்றன.  அதுவே அம்பாவின் காட்சியாகாவும் தரிசிக்கப்படுகிறது, இங்கு வரும் பக்தர்கள் ''ஜெய் அம்பே'' என்று கோசம் போட்டு பக்தியுடன் வழிபடுகிறார்கள். அம்மன் சன்னதியின் எதிரில ஒரு சிறிய பள்ளமான இடத்தில் நாகேஸ்வரர், அனுமான், நாகராஜர் சிலைகள் உள்ளன. இதற்கு நாமே தீர்த்தம் ஊற்றி, பூத்தூவி அர்ச்சனைகள்  செய்யலாம். அம்பாஜி கோயில் சுமார்  5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.  எப்படின்னா, கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் கண்ணனாக விளையாடி மகிழ்ந்த போது, அவரது மூன்றாவது வயதில் அவருக்கு இங்கு தான் முடி காணிக்கை தரப்பட்டுள்ளது என வரலாறு உள்ளது . நந்தகோபனும், யசோதை தாயும் அவரை இக்கோயிலுக்கு கூட்டி வந்து மொட்டை போட்டுள்ளனர். அன்று முதல் இன்று வரை இக்கோயிலில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே மொட்டையடிக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இங்கு மொட்டை போடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
 பிறந்த நாளுக்கு மறுநாள் இங்கு வந்து ஆண் குழந்தைகளுக்கு மொட்டை போட்டால், காலமெல்லாம் அக்குழந்தை செல்வச் செழிப்புடனும், கிருஷ்ணனைப் போல் விவேகத்திலும் சிறந்து விளங்கும் என்பது நம்பிக்கை.
கோயில் கோபுரத்தின் உச்சியில் 103 அடி உயரத்தில் மார்பிளால் ஆன கலசம் ஒன்று வைக்கப்பட்டு, 3 டன் எடையில் தங்கக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது. இந்த கோவில் அவசியம் பார்த்து வழிபடவேண்டிய கோவிலாகும்.இங்கு கோவில் பிரசாதமாக ''லட்டு'' வை உருண்டை பிடிக்காமல் புட்டு போல் சிறிய டப்பாவில் விற்பனை செய்கிறார்கள். அம்பாஜியின் அருள் நம் செய்து  அனைவருக்கும் கிடைக்கட்டும் .

ரணக்பூரிலிருந்து உதய்பூர்










ரணக்பூர்-ல் இருந்து  உதய்பூர் செல்லும் நான்கு வழி சாலைகளும் குகைகளும்