ஹயக்ரீவர்

குதிரை முகமும், மனித  உடலும் கொண்ட உருவான ஹயக்ரீவரை,  விஷ்ணுவின்    வடிவாகக்  கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வி தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இவருக்கு பரிமுகன் என்ற பெயரும் உண்டு. இந்த அவதாரத்தை  தசாவதாரத்திற்குள் சேர்ப்பதில்லை,

   மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்து வேதங்களை பறித்துக் கொண்டு,  பாதாள உலகத்திற்குச் சென்று விட்டனர்.  அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான  விஷ்ணுவை  வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பின்னர் ஆவணி மாதம்  பவுர்ணமி நாளில் கற்றுக்கொடுத்தார் என புராணங்களில் சொல்லப்படுகிறது, எனவேதான் கல்வி கற்றுக்கொடுக்கும் கடவுளாக ஹயக்ரீவர் வணங்கப்படுகிறார்,

முதுகில் தூக்கி கட்டுங்கள்


ஒரு  நாட்டில் ஒரு அமெரிக்கன், ஒரு சீனன், ஒரு இந்தியன் மூவரும்
 ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ஆளுக்கு   50
 சவுக்கடிகள்,தண்டனையாக  அளிக்கப்பட்டது,  ஆனால், அதற்கு முன்,
 அவர்கள் வேண்டும்  'இரண்டு'  கோரிக்கைகள் செய்யப்படும் என 
சொல்லப்பட்டது..!


முதலில்  அமெரிக்கன்,

"எனக்கு  50 சவுக்கடிகளில் பாதியாக குறைத்து 25 ஆக கொடுங்கள்
என்றான். ஒப்புக்கொள்ளப்பட்டது. இரண்டாவது என்ன? என்று
 கேட்டனர், 
"என் முதுகில்  ஒரு பெரிய தலையணை ஒன்றை கட்டுங்கள்

என்றான், அவ்வாறே செய்யப்பட்டது பத்து சவுக்கடியில்  தலையணை 
கிழிந்து அவன்  பலமான காயத்துக்குஆளானான்.
அடுத்து  சீனன்.

"எனக்கும் 50 சவுக்கடியில் பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்
 என்றான்,ஒப்புக்கொள்ளப்பட்டது,  இரண்டாவது என் முதுகில் இரண்டு
 தலையணைகளை கட்டுங்கள் என்றான் அவ்வாறே செய்யப்பட்டது.
15 சவுக்கடிகளில்  தலையணைகள் கிழிந்து அவன் முதுகு பிளந்தது. 
அடுத்து  இந்தியன்.
அமைதியாக சொன்னான்.எனக்கு 50 சவுக்கடியை, 100ஆக உயர்த்துங்கள்
 என்றான். அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன்  அவனை பார்த்தனர்
ஒப்புக்கொள்ளப்பட்டது, இரண்டாவது என்ன?

என்று  கேட்கப்பட்டது,  சொன்னான் "எனக்கு தண்டனை கொடுத்த

 நீதிபதியை  என் முதுகில் தூக்கி கட்டுங்கள் ! என்றான்!!!

சதுரகிரி மலை அருவிகள்


சிவலிங்கம் தினைமாவில்


சதுரகிரி மலை அருவி

  தாணிப்பாறை அருகே
 தாணிப்பாறை



தினைமாவில் பக்தர்கள் சிவலிங்கம் செய்கிறார்கள் 


கோரக்கர் குகை அருகில் தினைமாவு, வெல்லம், தேன், நெய் கலந்து லிங்கம் செய்து வழிபடுகிறார்கள். பின்பு தினைமாவில் செய்த லிங்கத்தையே பிரசாதமாக வழங்குகிறார்கள் 

இன்டர்வியூ

ஒரு இன்டர்வியூ. மேனேஜர், வேலை கேட்டு வந்தவரிடம், இங்க பாருங்க.. நான் இப்ப உங்க கிட்ட சொல்லும் வார்த்தைகளுக்கு ஆப்போசிட் வார்த்தையைச் சொல்லனும்.. ஓகேவா?
வேலை கேட்டு வந்தவர்: சரி முயற்சிக்கிறேன் சார்.!!
மேனேஜர்: நல்லது..
வே.கே.வ: கெட்டது..! 
மேனேஜர்: நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை..!
வே.கே.வ நான் இப்பொழுது தான் ஆரம்பித்தேன்..!
மேனேஜர்: இல்லைங்க..
வே.கே.வ ஆமாங்க..!
மேனேஜர்: நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க..! 
வே.கே.வ நீங்க சரியா புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க..! 
மேனேஜர்: நிறுத்து உன் பேச்சை..! 
வே.கே.வ: தொடங்கு உன் பேச்சை..! 
மேனேஜர்: இப்போ.. வாயை மூடுறியா..? இல்லையா..? 
வே.கே.வ: இப்போ வாயை திறக்கிறியா.? இல்லையா..? 
மேனேஜர்: நிறுத்துடா! 
வே.கே.வ: தொடங்குடா! 
மேனேஜர்: கெட் அவுட்! 
வே.கே.வ: கம் இன்! 
மேனேஜர்: ஐயோ ஆண்டவா.! 
வே.கே.வ: ஆஹா பிசாசே..! 
மேனேஜர்: யு ஆர்.. ரிஜெக்டட்..! 
வே.கே.வ: ஹய்யா !!! ஐ ஆம் செலக்டட்..

உன்னைக் காதலிப்பாள்


உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி ஒருவன் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

 கடவுளே!! என்  மனைவியை ஏன்  இத்தனை அழகோடு படைத்தாய் ?

வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ?

திரும்பவும் இவன் கேட்டான் -   நன்றாக  சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய் ?

நீ அவளைக் காதலிக்கத்தான். ..

பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் நல்ல குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ?

அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.

எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?- என லேசான நகைப்போடு இவன் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -

அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்.

பொய் சொன்னா பளார்



அது ஒரு லை டிடெக்டர் ரோபோட். யார் பொய் சொன்னாலும் சப்புன்னு கன்னத்தில் அறைந்து விடும். அந்த ரோபோட் மெஷினை வாங்கி வந்தார் ''அப்பா''.

பிறகு அன்று அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடந்த ஒரு உரையாடல்.


அப்பா - மகனே பள்ளி நேரத்தில் எங்கே போயிருந்தே...?

மகன் - அப்பா நான் பள்ளியில்தான் இருந்தேன் அப்பா.

ரோபோட்(மகனுக்கு) - "பளார்"

மகன் - இல்லை அப்பா, நான் எனது நண்பனின் வீட்டில் டிவிடி பார்த்தேன்.

அப்பா - என்ன பார்த்தே...?


மகன் - குங்பூ பாண்டா

ரோபோட்(மகனுக்கு) - "பளார்"

மகன் - சரி. சரி.. ஆபாசப் படம் பார்த்தேன்.

அப்பா - என்னது ஆபாசப் படமா.. உன் வயசுல. ஆபாசப் படம்னா என்ன என்றே எனக்குத் தெரியாது தெரியுமா...?

ரோபோட் (அப்பாவுக்கு) - "பளார்"

அம்மா - ஹாஹாஹாஹா.. அவன் உங்க பிள்ளைதானே. பின்ன எப்படி இருப்பான்.?

ரோபோட் (அம்மாவுக்கு) - "பளார்"

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருபட்டூர்






















திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ  தொலைவில்   உள்ளது திருபட்டூர்.திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில, சமயபுரம் வழியாக சென்று திருபட்டூர் அடையலாம், வியாழகிழமைகள் தோறும் விசேசமாக வணங்கப்பட்டு வருகிறது, வியாழக்கிழமைகள் மற்றும் திருவிழா காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  பிரம்மபுரீஸ்வரர்     கோவில்  ஒருவரது தலைஎழுத்தை மாற்றும் கோவில் என்று சொல்லபடுகிறது. மேலும் தலையில் எழுதியிருந்தால் மட்டுமே ஒருவர் இந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்று நம்பப்படுகிறது .பிரம்மனுக்கு அருள் புரிந்ததால் சிவன் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.  பிரம்மபுரீஸ்வரர் ஒரு சுயம்பு மூர்த்தி. கிழக்கு நோக்கிய மூலவர் போலவே,  சன்னதியின்  வெளி பிரகாரத்தில் தெற்கில், கிழக்கு நோக்கி தனி பிரம்மன் சன்னதி உள்ளது. தமிழகத்தில் (வட இந்தியாவில் பிரம்மனுக்கு மட்டும் தனியாக சன்னதிகள் உள்ளன) திருபட்டூரில்  மட்டுமே பிரம்மன் தனி சன்னதியுடன் காணபடுகிறார். திருபட்டூரில் உள்ள பிரம்மன் தலை எழுத்தை மாற்றும் சக்தி உடையவராக விளங்குகிறார். படைப்பாற்றல் உள்ள பிரம்மன் ஒரு முறை தனக்கும் ஐந்து தலை ஈசனுக்கும்   ஐந்து தலை என்று அகங்காரத்தில் இருந்தாராம். அதனால் ஈசனை மதிக்காமல்  இருந்தார்.    ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழிக்க நினைத்து ஐந்து தலைகளில் ஒரு தலையை கொய்து    விடுகிறார். அன்றிலிருந்துதான் பிரம்மன் நான்குமுகன் என அழைக்கப்படுகிறார், இதனால் பிரம்மன் படைப்பாற்றலை இழக்கிறார். அதனால் ஈசனிடம் சாப விமோசனம் வேண்டி பிரம்மன் திருபட்டூரில் ''பன்னிரு'' சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து ஈசனை வழிபட்டு வேண்டுகிறார்.  அது கண்டு மகிழ்ந்த  ஈசன் பிரம்மனுக்கு மீண்டும் படைப்பாற்றலை மீண்டும்  வழங்குகிறார்.   மேலும், ஈசன் இங்கு வந்து பிரம்மனை வணங்குபவர்களுக்கு அவர்களது தலை எழுத்தை மாற்றி மங்களகரகமாக்கும்  ஆற்றலை வழங்குகிறார்.  திருபட்டூரில் உள்ள பிரம்மனின் பார்வை பட்டாலே போதும் சகல தோஷங்களும் விலகி நல்வாழ்வு அமையும்.   ஆனால் விதி இருப்பவர்கள் மட்டுமே இந்த தலத்திற்கு வர முடியும் என்றும் நம்பபடுகிறது.இந்த கோவிலில் முதலில் ஈசன்,பின்பு பிரம்மன், அம்பாள் என்று வணங்கிவிட்டு 36 நெய் தீபங்கள் ஏற்றி 9 முறை ஆலயத்தை வலம் வந்தால் சகல வித தோஷங்களும் விலகி விடும் என்று நம்பபடுகிறது. ஏழாம் எண்  ஆதிக்கத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கோவிலில் வழிபட்டால் விசேஷ பலன்கள் உண்டாகும் என்று நம்பபடுகிறது. இங்கு ஜாதகங்களை கொண்டு வந்து பிரம்மன் காலடியில் வைத்து வணங்கி எடுத்து செல்கிறார்கள், இது பற்றி ஆலயத்துள்ளோரிடம் கேட்டதற்கு ஜாதகம் இல்லாவிட்டாலும் ராசி நட்சத்திரங்களை கூறி அர்ச்சனை செய்துகொள்ளலாம் என்று கூறினார்கள்,  கொடிமரத்தின் அருகில் உள்ள நந்திக்கு மேல் உத்திராட்சத்தினால் ஆன பந்தல் அமைத்துள்ளார்கள்.  ஈசன்  அம்பாளுடன் காட்சி தந்து பிரம்மனுக்கு இழந்த சம்பத்தை  மீட்டு  கொடுத்ததினால்  அம்பாளுக்கு  பிரம்மசம்பத் கௌரி என்று பெயர். மங்கள நாயகி என்று அம்பாளுக்கு மற்றொரு பெயரும் உண்டு .பிரம்மன் இங்கு தாமரை மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.பிரம்மனுக்கு இங்கு எப்பொழுதும் மஞ்சள் அலங்காரம் மட்டுமே செய்கிறார்கள்.  பிரம்மன் வணங்கிய 12 லிங்கங்களில் பிரம்மபுரீஸ்வரர் தான் மூலவர் . இன்னும் 3 லிங்கங்கள் மூலவரின் வெளி  பிராகரத்தில் உள்ளது .அவை பழமலை நாதர் ,பாதாள லிங்கம் ( பள்ளத்தில் உள்ளது ) மற்றும் சுத்ததாநேஸ்வரர்.ஐந்தாவது லிங்கம் தாயுமானவர் ,அம்பாள் சன்னதிக்கு வெளியில் உள்ளது .அம்பாள் சன்னதிக்கு பக்கத்தில் வெளியில் நந்தவனம்  உள்ளது அங்கு தான் மீதம் உள்ள ஏழு லிங்கங்கள் உள்ளது.அவை மண்டூக நாதர் ஏகாம்பரேஸ்வரர் அருணாச்சலேஸ்வரர்,ஜம்புகேஸ்வர,காளத்தி நாதர், சப்த்ரிஷீஸ்வர்ர் என்பதாகும் .இங்கு தான் பிரம்ம தீர்த்தம் உள்ளது  இங்கு முருகன் வந்து வழிபட்ட ஈசன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் உள்ளார்.முருகன் அசுரர்களை அழிக்க செல்லும் முன் இங்கு லிங்க ப்ரிதஷ்டை செய்து ஈசனை வழிபட்டு படை திரட்டி சென்றதாக வரலாறு.இதனால் திருபடையூர் என்ற பெயர் பின்பு மருவி திருபட்டூர்  ஆனது என்கிறார்கள் .இந்த கோவிலின் சிறப்புகளில் ஓன்று பங்குனி மாதம் 3 நாட்களில் சூரிய ஒளி சரியாக ஏழு நிமிடத்திற்கு சிவ லிங்கம் மேல் விழுகிறது. இங்கு மூலவரை தரிசிக்க ஏழு நிலைகளை கடந்து செல்லவேண்டும்    அப்பொழுதுகூட   இறைவனை   இயற்கையான வெளிச்சத்தில்  நன்றாக காணுமாறு உள்ளது.. வியாழ கிழமைகள் பௌர்ணமி நாட்கள் மற்றும் சதய நட்சத்திர தினங்களில் இங்கு மக்கள் அதிக அளவில் வருகிறார்கள். திருபட்டூரின் இன்னொரு சிறப்பு பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி உள்ளது. இங்கு பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்கிறார்கள், பிரம்மன் பிரசாதமாக நீரில் நனைக்கப்பட்ட மஞ்சள் வழங்கப்படுகிறது.

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

விபூதி விநாயகர்

பிரம்மா

மகா விஷ்ணு


 நவகிரக நாயகர்கள் தங்களின் தேவியருடன் காட்சியளிக்கும் அற்புத காட்சி