பக்கங்கள்

சபரிமலை ஐயப்பன் கோவில்

 பதினெட்டுபடி
 வெடி வழிபாடு நடத்துமிடம்

 காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம்






























சபரிமலை பயணத்தின் போது காணப்படும் காட்சிகள் 

ஆரியங்காவு ஐயப்பன் கோவில்





        ஆரியங்காவு ஐயப்பன் கோவில் வரலாறு 

    திருதாவிங்க்கூர்  மன்னருக்கு துணி நெய்துதரும் சௌராஷ்டிர இன வியாபாரிகள் இருந்தனர்.    அவர்களில் ஒருவர் அவ்வாறு மதுரையிலிருந்து திருவிதாங்கூருக்கு துணிவிற்கச் செல்லும்போது தனது மகள் புஷ்கலையைக் கூட்டிச் சென்றார். ஆனால் பாண்டிய நாடு தாண்டி ஆரியங்காடு சென்றதும் புஷ்கலை அடர்ந்த காட்டில் பயணம் செய்யப் பயப்பட்டாள். அதனால் வியாபாரி தன் மகளை ஆரியங்காவு ஐயப்பன் கோவில் பூசாரியின் வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். புஷ்கலை ஐயப்பன் கோவிலுக்கு வேண்டிய கைங்கரியங்கள் செய்து வர, அவள் ஐயப்பனிடம் கொண்ட பக்தி காதலாக மாறியது.

    திருவிதாங்கூரில் தன் வியாபாரத்தை முடித்துவிட்டுத் திரும்பிய வியாபாரியை ஒரு மதயானை துரத்தியது. ஒரு இளைஞன் மதயானையை விரட்டியடித்து, பயந்து ஓடிய அவரைக் காப்பாற்றினான். வியாபாரி தன்னைக் காப்பாற்றிய அவ்விளைஞனுக்குத் தான் செய்யக்கூடிய உதவி என்ன என்பதை வினவ, அவன் அவரது மகளைத் தனக்குத் திருமணம் செய்துதரும்படிக் கேட்டான். அவரும் அவ்வாறே செய்வதாக உறுதியளித்தார்.

   ஆரியங்காடு வந்த வியாபாரி தான் காட்டில் கண்ட இளைஞனின் உருவம் போன்றேயுள்ள ஐயப்பனைக் கோவிலில் கண்டு ஐயப்பனின் கருத்தை உணர்ந்து கொண்டார். திருவிதாங்கூர் மன்னரின் சம்மதத்துடன் மதுரையிலிருந்த சொந்தபந்தங்கள் சீர்வரிசை எடுத்துவர ஐயப்பனுக்கும் புஷ்கலைக்கும் திருமணம் ஏற்பாடாகியது. ஐயப்பன் நேரில் தோன்றி புஷ்கலையைக் கரம்பற்றியதாக மரபுவழிச் செய்தி கூறுகிறது.

   ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இத்திருமண விழா கொண்டாடப்படுகிறது. அவ்விழாவிற்கு இப்பொழுதும் மதுரையில் வாழும் சௌராஷ்டிர இனத்தவர் சீர் எடுத்து வரும் வழக்கம் உள்ளது.
ஆரியங்காவு ஐயப்பன் கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. இங்கு சடங்குகளும் பூசைகளும் தமிழ்நாட்டுக் கோவில் முறையில் நடைபெறுகின்றன. கருவறையில் பார்வதி, லிங்க வடிவில் சிவன், ஐயப்பனின் உருவச் சிலைகள் உள்ளன. நடுவில் பாலகனாக ஐயப்பனும் அவருக்கு இடப்புறம் அம்மனும் வலப்புறம் சிவனும் அமைந்துள்ளனர். பரசுராமரால் உருவாக்கப்பட்டத் தலங்களில் இதுவும் ஒன்று என்ற நம்பிக்கை உள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில்






மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் கல்தூண் சிற்பங்கள்

ராசி நட்சத்திர மண்டல வாஸ்து சக்கரம்

எனக்கு தெரிந்து சிலகாலத்திற்க்கு1995 முன்பு வரை வாஸ்து பகவானுக்கு உருவம் கிடையாது. தற்பொழுதுதான் வாஸ்து பகவானுக்கு உருவம் கொடுத்ததாக கூறி யார் யார்ரோ பெயர் தட்டிக்கொண்டு விட்டார்கள் ஆனால் நெடுங்காலத்திற்க்கு முன்பே இக் கோவிலில் வாஸ்து பகவானுக்கும் ராசிநட்சத்திரமண்டலத்திற்க்கும் சிலைகள் செய்து வழிபட்டு வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

வெற்றிதரும் விநாயகி


சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள்  ஏராளமாக உள்ளன. இதில் ஒன்று விநாயகர் பெண் வடிவத்தில் இருக்கின்ற சிற்பமாகும். விக்னேஸ்வரி என்ற பெயரில் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

சூரிய மண்டல ஆகாய ராசி நட்சத்திரங்கள்

         பழங்காலத்து கோவிலான திருகாளாத்தீஸ்வரர் கோவிலில் பார்ப்பவர்  அதிசயிக்கும் வண்ணம் சூரிய மண்டல ஆகாய ராசி நட்சத்திரங்கள் மூலவ்ருக்கு முன்னால் அமைந்துள்ள மகாமண்டபத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ளது.