மரணம் சுகமானதே !!

                                                           
                 சித்தர் பெருமக்களுக்கு மரணம் ஏற்படுவதில்லை, ஆனால் அவர்கள் தங்களின் சரீரத்திலிருந்து ஆன்மாவை தாங்கள் விரும்பும் போது பிரித்து கொள்கிறார்கள், அது அவர்களுக்கு மிகவும் சுகமானதாக இருக்கும், ஆனால் அவர்களுக்கு விந்து வெளியாவதில்லை எனவே அவர்களின் உடல் துர்நாற்றம் வீசுவது இல்லை  என்கிறார்கள், எனவே உயிரை பிரிக்கின்ற நேரத்தில் அவர்கள் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் என்கிறார்கள், அப்படின்னா,  சாதாரண மக்களுக்கு மரணம் வலியானதா? இல்லை சுகமானதா? மரணம் சுகமானதே! எப்படி? ஆண்களுக்கு மரணத்தின் போது விந்து வெளியாகுமுன்னு எல்லோரும் சொல்கிறார்கள் அதனால் தான் அவர்களின் உடல் நாற்றமடிக்கிறது என்கிறார்கள், பொதுவா விந்து கனவிலும், நினைவிலும், எந்த விதத்தில் வெளியேறினாலும் அது அவர்களுக்கு  வெளியேறும் போது சுகமானதாகவே இருக்கிறது. பெண்களுக்கு சுரோனிதம் வெளிப்படும் போதும் அதே போல் சுகமானதாகவே இருக்கிறது என்கிறார்கள். அதே போல் அவர்களுக்கும் மரணத்தின் போது சுரோனிதம் வெளிப்படுகிறதுன்னு சொல்கிறார்கள், அதனால்தான் அவர்களின் உடல் நாற்றமடிக்கிறதுன்னு  சொல்கிறார்கள்,  அப்படின்னா சாதாரண மக்களுக்கும் கூட மரணம் சுகமானதாகத்தானே இருக்கும், இருக்கமுடியும், இதில் மாற்றுக்கருத்து ஏதேனும் இருக்க முடியாதுதானே !! இருந்தா கருத்துக்களை தெரிவியுங்களேன்..

மூன்றாம் மார்பு

   பாண்டிய மன்னனின் மகளான அன்னை மீனாட்சிக்கு பிறவியிலேயே மூன்று மார்புகள் இருந்ததாகவும், ஒரு போரின் போது அவள் 'சிவனை' சந்தித்ததாகவும் அப்பொழுது அவளுக்கு மூன்றாம் மார்பு மறைந்ததாகவும், மறைந்ததும் அவள் சிவனை(இறையை)  அடைந்ததாகவும், புராண கதை உள்ளது. இது அனைவரும் அறிந்ததே, சித்தர் வழிபாட்டில் உள்ளவர்கள், ஆன்மீக புராணங்கள், உடலுக்குள் நடக்கும், இருக்கும், நிகழ்வுகளைதான், உதாரணமாக ராமாயாணம், மகாபாரதம், வைணவ, சைவ புராணங்களில் பரி பாஷையாக சொல்லப்பட்டு இருக்கிறதுன்னு சொல்லி விளக்கங்களும் சொல்லி வருகிறார்கள் அது உண்மையாகவும் இருக்கிறது. அதே போல் இந்த புராணத்தையும் ஒப்பிட்டால் நாம் அனைவருமே மீனாட்சிதான் அதாவது ஆன்மாவுக்கு பெயர் மீனாட்சி, நமக்கு எல்லோருக்கும் பரிபாஷையாக சொல்லப்பட்ட மூன்றாம் மார்பு உள்ளது, அதுதான் நாம் இறைவனை அடைய தடையாக உள்ளது, அது எது? நாம் அதை எவ்வாறு அழிப்பது? எப்படி சிவனை (இறையை ) சந்திப்பது, சிவனை சந்தித்தால்தானே நாம் அவனை அடையமுடியும், எனவே நாம் எதை எதனால் அழித்து சிவனை அடைவது, ஆன்மீகவாதிகளே விளக்குவீர்களா ? ''நான்'' அறிய...   

கொலைகாரர்

      உலகில் நாம் அனைவருமே கொலைகாரர்கள்தான் நேற்றைய நம்மை இன்றைய நாம் அழித்து விட்டிருக்கிறோம், நம்முடைய சிறுவயது உருவம் வேறு, இளமையாக இருக்கும் போது இருக்கும் உருவம் வேறு, மத்திய வயதில் உள்ள உருவம் வேறு, வயோதிகத்தில் உள்ள உருவம் வேறு, இப்படி நாம் நம்முடைய முந்தைய உருவத்தை அழித்து விடுகிறோம், இதைதான் உடல் அழியகூடியது ''ஆன்மா'' அழிவில்லாதது என்கிறதா?  ஆன்மீகம், அப்படியானால் மரணம் வரை ஆன்மா உண்டு, மரணத்திற்கு பின் ஒன்றுமே இல்லைதானே? இல்லை, உண்மையிலேயே நாம் மரணமடைந்த  பின் நமது ஆன்மா, நமது உடலை விட்டு வேறு இடத்துக்கு பயணம் செய்கிறது என்கிறதா? அப்படியானால் ஆன்மா எந்த இடத்திற்க்கு பயணம் செய்கிறது? அது எவ்வாறு பயணம் செய்கிறது? அறிந்தவர்கள் எனக்கு புரிய விளக்குவீர்களா? ஆன்மீகவாதிகளே!! தங்களின் எண்ணங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

ஆன்மீகம் முடமானதா?

      ஆன்மீகம் முடமானதா? கடவுளை அடைய மற்றவர்களின் (குரு) துணை உதவி தேவைதானா? ஆம் என்றால் ஆன்மீகம் முடமானதேயாகுமல்லவா? முடம் நமக்கு தேவையில்லை தானே? இல்லை, இது ஒரு வித்தை ப்யிற்றுவிக்கப்பட வேண்டிய ஒன்று, என்றால், இல்லாத ஒன்றை நமக்கு கற்பிப்பதாகதானே அர்த்தமாகிறது வாழ்க்கைக்கு அத்தியாவசியமில்லாத ஒன்றுதானே என்றாகிறது? ஆன்மீகம் முடமானது இல்லை என்றால், நமது பிறப்பின் நோக்கம் கடவுளை அடைவதுதான் என்றால், நமக்கு எப்படி பசிக்கிறதோ? எப்படி பாலுணர்வு ஏற்ப்படுகிறதோ? அதே போன்று, பசியும் பாலுணர்வும் தீரும் வரையில், நம் மனமும் நம் புலன்களும் நம்மை பாடாய்படுத்துகிறதே!! அதை அடைந்தபின் தானே நமக்கு அமைதி கிடைக்கிறது, அதே போன்று கடவுள் தேவையும்  தானாகவே தோன்றி அதை நாம் அடையும்படி நம்மை பாடாய்படுத்த வேண்டாமா? அப்படி  இல்லையே!! யாருக்கும் அப்படி ஏற்பட்டதாகவும் தெரியவில்லையே!! கடவுளை தேட நமக்கு மற்றவர்களால் பயிற்றுவிக்கப்பட்டே நாம் கடவுளை தேடிக் கொண்டிருக்கிறோமே? இது சரிதானா? உண்மையிலேயே நமது பிறப்பு கடவுளை அடைவதுதான் நோக்கமா? அப்படி என்றால், நாம் பிறப்பதற்க்கு முன்பே நாம் வாழும் சூழலை உருவாக்கி வைத்தவன்,  கடவுளை அடைவதற்க்கான ஒரு ஏற்பாட்டையும் நமக்காக செய்து வைத்திருக்க மாட்டானா?  ஐயம் தீர யாராவது விளக்குங்களேன்.... .

தாடி குடுமி

      ஆன்மீகவாதிகள் பலரும் குடுமி, தாடியுடன் இருக்கிறார்களே  ஏன்? ஆன்மீகத்திற்க்கும் சடைமுடி, குடுமி, தாடி இவைகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? கடவுளை காண இவைகள் உதவுகின்றனவா ?ஆம் உதவுகின்றது என்றால் பலர் மொட்டையடித்து மொட்டையாகவும் இருக்கிறார்களே ? அது எதற்காக அதனால் பலன் என்ன? இல்லை மொட்டையாக இருப்பதுதான் சரியானதா? அப்படியானால் ஜக்கிவாசுதேவ் போன்றோர்கள்  தாங்கள் தாடி குடுமி வைத்துக்கொண்டு தங்களின் சிஷ்யர்களை மொட்டியடித்து வைத்திருக்கிறார்களே? அது எதற்காக? இதிலும் இன்னொருவகை சாணக்கியரிலிருந்து இன்று உள்ள அய்யர்கள் வரை பாதி தலை மொட்டையாகவும் சிறிது குடுமியுடனும் இருக்கிறார்களே? அது எதற்காக?  எனது சந்தேகத்தை போக்குவீர்களா நண்பர்களே !! தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் 'நான்' தெளிவடையவே ?

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடம்ஆண்டாள் திருக்கோவில் கும்பாபிஷேக யாகசாலை
ரமணகிரி சித்தர்

எனக்கு எதுவும் 
தெரியவில்லை 

நான் 
எனபது என்ன 

எதுவுமே அறியாத 
கிறுக்கன் நான் 

எதையும் நினைக்கக் கூடாது 
என்ற நேரத்தில் 
எதையோ 
நினைக்கின்றேன்  


எனக்கு
முடிவும் 
இல்லை 
தொடக்கமும் 
இல்லை 

ஆயிரம் 
பிறப்புக்களைப் 
பற்றிய 
சிந்தனை 

அதில் 

நான் 
இங்கே 
அவன் 
இல்லை 

எங்கே அவனோ 
அங்கே நான் 
இல்லை

..
சுவாமி ரமணகிரி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில்