கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கம்பராயப்பெருமாள்

இக்கோயிலில் ஆனி மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தில், இறைவனின் பெருமையை உணர்த்தும் விதமாக "திருமங்கையாழ்வார்'' திருடிய வைபவம்  நடத்துகின்றனர். அன்று திருமங்கையாழ்வார் திருடுவது போல பாவனை செய்து, காவலர்கள் அவரை பிடித்துச் சென்று சுவாமி முன்பு நிறுத்துகின்றனர். அவ்வேளையில் அவர் திருடிய பொருட்களின் பட்டியல் வாசிக்கப்படும், இதை "பட்டோலை வாசித்தல்'' என்கிறார்கள். அதன்பின் பெருமாள் தேவியுடன் திருமங்கையாழ்வாருக்கு காட்சி தருவார்.  மேலும் வைகுண்ட ஏகாதசியன்று ஒருநாள் மட்டும் சுவாமிக்கு மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர் .பெருமாளை மீசையுடன் தரிசனம் செய்வது புது அனுபவமாகும்

ராகு, கேது


லிங்கோத்பவர், நடராஜர்

 லிங்கோத்பவர்
  நடராஜர்

பைரவர் சன்னதி


சண்முகநாதர்

சண்முகநாதர் (முருகர்) இங்கு ஆறுமுகம் கொண்டவராக உள்ளார் அதிலும் வேரெங்கும் காண இயலாத வடிவில் முன்புறம் ஐந்துமுகமும் பின்புறம் ஒரு முகமும் கொண்டவராக உள்ளார்

காசிவிஸ்வநாதர்


காசிவிஸ்வநாதர் சன்னதி

ஆண்டாள் சன்னதி


கம்பராயப்பெருமாள்

மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுர விமானம் திரிதள விமானம் எனப்படும் வகையை சேர்ந்த்து

கம்பராய பெருமாள் திருக்கோவில்

கம்பராய பெருமாள் திருக்கொவில்

  கம்பராய பெருமாள் சன்னதி முன்புற எழில்மிகு தோற்றம்

வன்னி மரம், பிரம்மா


            இக் கோயிலில் வன்னிமரம் ஸ்தல விருட்சமாக உள்ளது இதில் பிரம்மா உள்ளதாக நம்பப்படுகிறது, என்வே இது மும்மூர்த்தி தளமாக விளங்குகிறது, ஆனால் இது பற்றி கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாருக்கும் சரி வர தெரியவில்லை, மேலும் பிரம்மா காசிவிஸ்வநாதர் சன்னதி வெளிபிரகாரத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்
                                          வன்னிமரத்தின் சிறப்புகள் 

இது முள்ளுள்ள இலையுதிர் மரம். மிகச் சிறிய கூட்டிலைகளைக் கொண்டது. சதைப்பற்றுடைய உருளைவடிவக் காய்களை உடையது. வடதமிழ் நாட்டில் கரிசல் நிலங்களில் தானே வளர்கிறது. தோட்டங்களில் ஆங்காங்கே முளைக்கும் இவ்வன்னி மரங்களைப் பொதுவாக யாரும் வெட்டுவதில்லை. அந்த அளவுக்குப் புனிதமாக கருதப்படும் மரமாகும். மரம் முழுமையும் மருத்துவக் குணமுடையது.
இம்மரம் காய்ச்சல் போக்குதல், சளியகற்றுதல், நாடிநடையையும் உடல் வெப்பத்தையும் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது. வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும். வன்னிக்காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விகிதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விகிதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும். 

காசிவிஸ்வநாதர், விசாலாட்சி ஆலயம்



இந்த திருக்கோயில் தேனி மாவட்டம் கம்பம் நகரத்தின் மையபகுதியான பழைய பேருந்து நிலையத்தின் மிக அருகில் அமைந்துள்ளது, இந்த காசிவிஸ்வநாத்ரின் லிங்கவடிவம் மிகவும் அபூர்வமாக உள்ளது. லிங்கத்தில் ஆவுடை சதுரவடிவில் அமைந்துள்ளது, இவர் காசியிலிருந்து கொண்டுவந்து பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளார், இங்கு காசி விசாலாட்சி தெற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார் , இவருக்கு தனி சன்னதி உள்ளது    




கம்பராயர் சன்னதி


               மேலே உள்ள கோபுரத்தில் சயனபெருமாள் வசம் மாறி சயனம் கொண்டுள்ளார் இதற்க்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா என எனக்கு தெரியவில்லை

சக்கரத்தாழ்வார், நரசிம்மர்




     சக்கரத்தாழ்வாருக்கும் தனி சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறமுள்ள நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரங்களுடன் காட்சி தருகிறார். ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு விசேஷ ஹோமத்துடன், பூஜை நடக்கிறது.இவர் மிகவும் பிரசித்தி பெற்றுவிளங்குகிறார். .

சித்தி விநாயகர்

             மனதைவசியம் செய்யும் வசீகர விநாயகர் 

சித்தி வினாயகர்


கம்பராயர் கோயில்


கம்பராயர் சன்னதியருகே அலமேலு மங்கை சன்னதி

வீர ஆஞ்சநேயர் சன்னதி


அலர்மேலு மங்கை தாயார்



     அலர்மேலு மங்கை தாயார் தனி சன்னதி கொண்டுள்ளார்