தவசி பாறை



சதுரகிரியில் பலுணி என்றொரு மரம் உள்ளதாம், இம்மரத்தைக் குடைந்து அதனுள் பாதரசத்தைச் செலுத்தி குறிப்பிட்ட மாதங்கள் கழித்து அதனை எடுத்துப் பக்குவப்படுத்தி வாயில் அடக்கிக்கொண்டால் ஆகாய மார்க்கமாக நினைத்த இடத்திற்குச் செல்லலாமாம்.
ஓரழிஞ்சி மரம், தேவதாரு மரம் ஆகியவற்றின் பூவை முறைப்படி பக்குவப்படுத்தி திலகமாக இட்டுக்கொண்டால் யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்து விடலாமாம்.
“கனையெருமை'' என்ற மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை கத்துவது போல் கத்துமாம்.
“சுணங்க விருட்சம்’ என்றொரு மூலிகை காலாங்கி நாதர் குகைக்குச் சமீபமாக இருக்கிறதாம். இதன் வேர் கருப்பாகவும், பழம் நாய்க்குட்டி போலும் இருக்குமாம், அந்தக் கனி பழுத்துக் கீழே விழும்போது நாய்க்குட்டி குரைப்பது போல குரைத்துக்கொண்டே கீழே விழுமாம். கீழே விழுந்த கனி பத்தே வினாடிகளில் மறுபடியும் அந்த மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளுமாம்.
சதுரகிரி என்று அழைக்கப்படுவது   கிழக்கில் இந்திரபுரி, மேற்கில் வருணகிரி, வடக்கில் குபேர கிரி, தெற்கில் எமகிரி இப்படி சதுரம் போல் அமைந்து மலைகளுக்கு மத்தியில் சிவகிரி, பிரம்ம கிரி, விஷ்ணு கிரி, சித்த கிரி என நான்கு மலைகள் அமைந்து இந்த மலைப்பிரதேசம் சதுரகிரி என்று அழைக்கப்பெறுகிறது. அற்புத மலையில் பிரதானமாக அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆலயங்கள் தவிர, பிலாவடி கருப்பு, ரெட்டை லிங்கம், பெரிய மகாலிங்கம் போன்ற தெய்வங்கள் குறிப்பிடத்தக்கவை. சதுரகிரியின் மையத்தில் சஞ்சீவி மலையும் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: