Navakiragam

                நவகிரக துதி      
உலகெலாம் இருளகற்றி ஒளிவிடும் சோதியேஓய்விலா வலம்வரும் செங்கதிரேசூரியனே, நற்சுடரே - நீ எனக்குசுற்றம் சூழ சுகந் தருவாய்.
தருவாய் வருவாய் வான்புகழ் அனைத்தும்தினமும் வளரும் வான்மதி நீயேஆளும்கிரக ஆரம்ப முதலேஅருளும் பொருளும் அருள்வாய் எனக்கு.
என் ஏற்றமிகு சாதகத்தில் உன் ஆட்சிஓங்கார சொரூபனே செவ்வாயேஏங்கிடும் அடியாரின் குறைநீக்கிஏவல் எனைக் காத்திடுவாய் வையகத்தே
வையகம் போற்றிடும் புத்திக்கு நாயகனே புதனேவான்புகழ் கொள்வோரின் வெற்றிக்கு மூலவனேநெஞ்சுக்கு நீதி தந்து நேர்மைக்கு இடமளித்துநெடுங்காலம் வாழ அருள் புரிவாய் எனக்கு
அருங்கலையும் கல்வியும் அருளும் குருவேஅரசனும் ஆண்டியும் வேண்டிடும் துணையேகுறைகள் அகற்றி குலம் தழைக்ககருணை புரிவாய் காத்தருள்வாய்.
வயலும் வளமும் வழங்கிடும் சுக்கிரனேஉழவும் தொழிலும் சிறந்து ஓங்கவறுமை நீங்கி வளமுடன் வாழவேண்டுவன அருள விரைந்து வருக
வருக வருக வாரி வழங்கும் வள்ளலேவினை தீரத் துதிப்பேன் உன் புகழேசடுதியில் வந்தென்னைக் காத்திடுவாய்சங்கடங்கள் அகற்றிடுவாய் சனீஸ்வரனே
வரவேண்டும் தரவேண்டும் நின் அருளைஎன்வாடாத குடும்பத்தில் இராகுவேஎண்திசையும் புகழ் மணக்கஇசைந்தருள்வாய் இக்கணமே
கணப்பொழுதும் உனை மறவேன்கோலம் பலபுரியும் கேது பகவானேகாலமெலாம் வளமுடன் வாழகண்திறப்பாய் கனிந்து          ----------
பொதுவாக நவகிரகங்களை வணங்குவதற்கு ஒரு கிரகத்திற்கு ஒருமுறை என கணக்கிட்டு ஒன்பது முறை வலம் வருகிறார்கள் ஆனால் ஒருமுறை சுற்றிவந்தாலே போதும் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: