காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ராசி நட்சத்திர மண்டல வாஸ்து சக்கரம்

எனக்கு தெரிந்து சிலகாலத்திற்க்கு1995 முன்பு வரை வாஸ்து பகவானுக்கு உருவம் கிடையாது. தற்பொழுதுதான் வாஸ்து பகவானுக்கு உருவம் கொடுத்ததாக கூறி யார் யார்ரோ பெயர் தட்டிக்கொண்டு விட்டார்கள் ஆனால் நெடுங்காலத்திற்க்கு முன்பே இக் கோவிலில் வாஸ்து பகவானுக்கும் ராசிநட்சத்திரமண்டலத்திற்க்கும் சிலைகள் செய்து வழிபட்டு வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

சூரிய மண்டல ஆகாய ராசி நட்சத்திரங்கள்

         பழங்காலத்து கோவிலான திருகாளாத்தீஸ்வரர் கோவிலில் பார்ப்பவர்  அதிசயிக்கும் வண்ணம் சூரிய மண்டல ஆகாய ராசி நட்சத்திரங்கள் மூலவ்ருக்கு முன்னால் அமைந்துள்ள மகாமண்டபத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ளது.

கண்ணப்பநாயனார்


காளாத்தீஸ்வரர் கோவில் அற்புதங்கள்

உலகில் காணகிடைக்காத கல்மரம் இல்லாத வீனைதட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் தனிசன்னதி
 
 நவசக்தி நாயகர்கள்

 ஒரே லிங்கத்தில் 1008 லிங்கம் அமைந்துள்ள ''சகஸ்ரலிங்கம்''
 குபேரன் மகாலட்சுமி
 கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண் கொடுத்தபோது லிங்கத்திலிருந்து சிவன் ஒரு கையை நீட்டி கண்ணப்பரை ஆட்கொண்ட காட்சி.  இது போல்  காட்சிதரும் விக்ரகம்  வெறெங்கும் இல்லை

 ராகு பகவான் தன் தேவியான ''சிம்ஹிகை''யுடன்
கேதுபகவான் தன் தேவியான'' சித்ரலேகா'' தேவியுடன்

காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவில் தெப்பகுளம்


காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவில்

இங்கு ராகு கேது பரிகார பூஜைகள் நடத்தப்படுகிறது . திருமண தடை உள்ளவர்கள் தடை நீங்கி பலன் பெற்று செல்கிறார்கள். ராகு கேது பூஜையின் போது மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கிறார்கள் 

காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவில்

        இந்த கோயில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் என்ற ஊரில் பேருந்து நிலையத்தின் மிக அருகில் அமைந்துள்ளது   நாயக்க மன்னர்கள்  ஆட்சிக் காலகட்டத்தில் புகழ் பெற்ற ராணி மங்கம்மாவின், உத்தமபாளையம் பகுதி     படை பொறுப்பை ஏற்று நடத்தி வந்தவர்  கொண்ட ம நாயக்கர்   இவர் காளகஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது மிகுத்த பக்தி கொண்டவர். அவர் வயதான காரணத்தால் காளகஸ்தி செல்ல முடியாமல் அவதிபட்டார் . இவரின் நிலையை அறிந்த காளாத்தீஸ்வரர், அவர் இருக்குமிடத்திலேயே கோவில் அமைத்து வழிபடலாம் என்றும், இங்கு வழிபட்டால், காளகஸ்திக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்றும் அருளினார். உடனே அவர் இப்பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர் பூஜையா நாயக்கரிடம்  தெரிவித்தார். அதன் பிறகு பாளையக்காரர் ஒரு கோவில் அமைத்துக் கொடுத்தார். இந்தக் கோயில் தென் காளகஸ்தி என்று அழைக்கப்படுகிறது.
சிவனுக்கு சிலை செய்த மன்னர் அம்மனுக்கு சிலை அமைக்க பல முறை முயன்று தோல்வியுற்றார் . இதனால் அம்பிகை இல்லாத கோவிலாக சில காலம் இருந்தது . பிறகு இங்கு கொண்டம நாயக்கரின் கனவில் தோன்றிய சிவன் முல்லை ஆற்றில் அம்பிகை வருவாள் என்றார் , அதன்படி ஆற்றில் ஒரு கூடை மிதந்தது வந்தது அதனுள் அம்மனின் சிலையை கண்ட ஊர் மக்கள் மகிழ்ந்து அம்மனுக்கு ஞானாம்பிகை என்று பெயர் சூட்டினர். இவ்வம்மன் இங்கு புகழ் பெற்றவர் பலருக்கு ஞானாம்பிகை கோவில் என்றால் தான் தெரியும் என்ற அளவுக்கு புகழ் பெற்றவர் . அம்மனுக்கு பக்கத்தில் முருகன் காட்சி அளிப்பது இங்கு சிறப்பு , தாய் சேய்  நலன் விரும்புவோர் இங்கு வந்து வழிபட்டால் உறவு நன்கு அமையும் .
இந்த தெப்பக்குளம் மிக புனிதமாக கருதப்படுகிறது ஆனால் பராமரிப்பு இல்லாததால் மிகவும் அசுத்தமடைந்துள்ளது.பாதுகாப்பு சுற்று சுவர் முறையாக இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது