பழனிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புலிபாணி சித்தரின் ஜீவசமாதி இது பழனிமலை அடிவாரத்தில் விடலை தேங்காய் உடைக்கும் இடத்தின் இடது புறம் பத்துபதினைந்து கடைகள் தள்ளி அமைந்துள்ளது. கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளதால். சாதாரணமாக பார்த்தால் தெரியாது. போகர் சீனாவில் வாழ்ந்த காலத்தில் பலமுறை உலகைச் சுற்றி வந்து தாம் கண்டு வந்த அதிசயங்களை சீன மக்களுக்கு கூறினார். இவரின் பேச்சில் காணப்பட்ட ஞானத்தை உணர்ந்த சீனத்து சித்தர் ஒருவர் இவரது சீடரானார். இவர் புலி ஒன்றை வசியப்படுத்தி அதன் மேல் ஏறிக் கொண்டு வனத்தின் பல பகுதிக்கு சென்று போகருக்கு உதவியாக மூலிகைகளைப் பறித்துக் கொண்டு வந்து கொடுப்பார்..
ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க புலிமேல் ஏறிச்சென்று வெறும் கையாலேயே தண்ணீர் கொண்டு வந்து குருவிடம் கொடுத்தார். புலிமேல் சென்று ''பாணி''(இந்தி) (தண்ணீர்) கொண்டு வந்ததால் இவர் ''புலிப்பாணி'' என்றழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.( அப்படின்னா புலிபாணி சித்தர் சீனாக்காரரா? ) போகரின் மாணவர்களில் இறுதி வரை அவருடன் இருந்தவர் இவரே என்று கூறப்படுகிறது.
பழனிமலை முருகன் சிலையைப் போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணி சித்தர். ''நவபாஷாண'' மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறிச் சென்று பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ''நவபாஷாண'' முருகக் கடவுளை உருவாக்கிய போகர், ஜீவசமாதி அடையும் முன் பழனி தண்டாயுதபாணி பூஜைகளைக் கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்துச் சென்றார். ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டு தற்பொழுதும் புலிபாணி சித்தரின் வாரிசுகளே பூஜை செய்துவருகிறார்கள்.
புலிப்பாணி சித்தர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர். இவர் உருவாக்கிய ஜோதிட முறையே புலிபாணி ஜோதிடமாகும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் குடும்ப ஒற்றுமை குலையும், விவசாயம் பாதிக்கும். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கும். நிலத்தகராறு, சொத்துத் தகராறு, வழக்குகள் அகன்று வெற்றி கிடைக்கும்.
சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு சொத்து வசதிகள் உண்டாகும். அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு தடைகள் நீங்கி வியாபாரம் பெருகும். கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட் செங்கல், சிமெண்ட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும்.
செவ்வாய் தோசத்தினால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடை நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். என்வே பழனி செல்லும் பொழுது அவசியம் புலிபாணி சித்தர் ஜீவசமாதியை வணங்கி அவரது அருள் பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக