வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கைப் பாதையை துவக்குகிறான், ஆனால் தன்னம்பிக்கையோடு உழைக்கிறானா? என்பதுதான் கேள்வி? சிலரிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுகிறது, பலரிடம் மிக குறைவாகவும், பல நேரங்களில் இல்லாமலும் இருக்கிறது. வெற்றியே வெற்றியை பின்தொடரும் என்கிறார்கள், அதே போல் தன்னம்பிக்கையோடு உழைத்து வெற்றிபெறும் போது மேலும் வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை வளர்கிறது, அந்த உந்துதலினால் தான் கடுமையாக உழைத்து மேலும் வெற்றியை பெருக்குகிறோம். எந்த சூழ் நிலையிலும் கடந்தகால துயரங்களை தொடர்ந்து மனதில் தாங்கி வாழாதீர்கள் , புது மனிதனாக, நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும், நடப்பவை நல்லவைகளாக நடக்கட்டும் என்ற மனப்பான்மையுடன் தொடர்ந்து செயலாற்றி வெற்றியை காணவேண்டும், வெற்றி வெற்றி என்ற மந்திரம் மட்டுமே மனதிலும் செயலிலும் எப்பொழுதும் செயல் படட்டும்.வாழ்க வெற்றியுடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக