பக்கங்கள்
- முகப்பு
- கனவு
- இந்திய பழைய நாணயங்கள்
- மனம்
- வெற்றி உங்கள் கற்பனையில்
- உடனடியாக
- வெல்பவன்
- வெற்றி ரகசியம்
- சிந்தித்துபேசு
- கடவுளே !!!
- கடமை
- வென்று காட்டுவோம்
- பேசு
- பரிசு
- வழி தேடு
- தயாராகு
- எதிரி
- வாழ்க்கை
- எதிர்(ரி)காலம்
- பிரச்சனைகள் தீர
- கீதையின் சாரம்
- வாழ்க்கை வெற்றி
- நான்-கடவுள்
- வெற்றிக்கு குறுக்கு வழி
- முதல் வேலைக்காரன்
- உபதேசம்
- விட்டுக் கொடுக்காதீர்கள்
- இறையருள்
- எச்சரிக்கை
- பழக்கம்
- தாய்- தந்தை
- மயானம்-தியானம்
சதுரகிரி மலை - SATHURAGIRI (மகாலிங்கம் கோவில் ) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சதுரகிரி மலை - SATHURAGIRI (மகாலிங்கம் கோவில் ) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சதுரகிரி ஆனந்தவல்லியம்மன் கோவில்
சதுரகிரி மலை ஆனந்தவல்லியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுடன் சிறப்பாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். அன்று அதிகாலையில் சுந்தர மகாலிங்க சுவாமி, சந்தன மகாலிங்க சுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சங்கொலி பூஜைகள் நடக்கும், விரதமிருக்கும் பக்தர்கள் கையில் காப்புகளை கட்டிக்கொள்வார்கள். அதன்பின், ஆனந்த வல்லியம்மன் கோயிலுக்கு எழுந்தருளல் நடக்கும்.இங்கு அம்மன் லிங்க வடிவில் உள்ளார்.
சதுரகிரிமலை பயணம்
சதுரகிரி மலை பயணத்தின் போது நடக்க இயலாத பக்தர்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் காட்சி. ஐய்யப்பன் கோவிலில் ''டோலி'' கட்டி தூக்கி செல்வார்கள் அதுபோல, சதுரகிரி மலை பாதை மிக அகலம் குறைவாக உள்ளதாலும், செங்குத்தான மலை பாதை வளைவுகள் உள்ளதாலும். நாற்காலி வைத்து டோலி கட்டிநான்கு பேர் தூக்கி செல்ல இயலாமல் தொட்டில் கட்டி இருவர் மட்டுமே தூக்கி செல்கிறார்கள்.சங்கிலிபாறை
சங்கிலிபாறை
சதுரகிரி மலை பாதை, இயற்கையாக அமைந்த ஒன்று. மகாலிங்கத்தைக் தரிசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பாதை. வாகனங்கள் செல்ல முடியாது. யாவும் நடையாத்திரைதான்! குறுகலான பாதை... கரடுமுரடான வழித்தடம். சபரிமலையில் உள்ளதுபோல் இங்கு எந்த வசதியும் இங்கு கிடையாது. செல்போன், உணவு, தங்குவது, கழிப்பிடம் என்று எதற்குமே முறையான வசதியில்லை. இந்தப் பாதையில் மேடும் பள்ளமும், குண்டும் குழியும் சகஜம். சில இடங்களில் பாதையின் அகலம் வெறும் மூன்றடி மட்டுமே. அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் திரளான மக்கள் நடக்கும்போது நெரிசல் ஏற்பட்டு கால் இடரும் வாய்ப்பு நிறைய உண்டு. பாதையின் ஓரமாகக் காலை வைத்துவிட்டால், கீழே அதல பாதாளம்தான்! சில இடங்களில் பாறை மீது எந்த பிடிமானமும் இல்லாது நடக்கும்போது வழுக்கும் தன்மை கொண்டு உள்ளன. அம்மாதிரி இடங்களில் மிகுந்த கவனத்துடன் நடக்க வேண்டும்.

தீர்த்த கிணறு
பிலாவடி கருப்பசாமி கோயில் அருகில் உள்ள தீர்த்த கிணறு இந்த கிணற்றினுள் செம்பை தங்கமாக்கும் மூலிகை இருப்பதாக பரவலான ஒரு செய்தி உண்டு. பல மூலிகையின் சாற்றுடன், நவபாஷாணங்களின் சேர்கையால் செம்பை தங்கமாக உருவாக முடியும். இந்த வித்தைகளை கற்றுக்கொள்ள தங்கள் வாழ்நாளையும், பொருளையும் இழந்தவர்கள் பலர். அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். இது சாமானிய மக்களுக்கு கைவராத கலை. பொருளாசை இல்லாதவர்களுக்கு மட்டும் இது சாத்தியமாகும்.
தவசி பாறை
சதுரகிரியில் பலுணி என்றொரு மரம் உள்ளதாம், இம்மரத்தைக் குடைந்து அதனுள் பாதரசத்தைச் செலுத்தி குறிப்பிட்ட மாதங்கள் கழித்து அதனை எடுத்துப் பக்குவப்படுத்தி வாயில் அடக்கிக்கொண்டால் ஆகாய மார்க்கமாக நினைத்த இடத்திற்குச் செல்லலாமாம்.
ஓரழிஞ்சி மரம், தேவதாரு மரம் ஆகியவற்றின் பூவை முறைப்படி பக்குவப்படுத்தி திலகமாக இட்டுக்கொண்டால் யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்து விடலாமாம்.
ஓரழிஞ்சி மரம், தேவதாரு மரம் ஆகியவற்றின் பூவை முறைப்படி பக்குவப்படுத்தி திலகமாக இட்டுக்கொண்டால் யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்து விடலாமாம்.
“கனையெருமை'' என்ற மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை கத்துவது போல் கத்துமாம்.
“சுணங்க விருட்சம்’ என்றொரு மூலிகை காலாங்கி நாதர் குகைக்குச் சமீபமாக இருக்கிறதாம். இதன் வேர் கருப்பாகவும், பழம் நாய்க்குட்டி போலும் இருக்குமாம், அந்தக் கனி பழுத்துக் கீழே விழும்போது நாய்க்குட்டி குரைப்பது போல குரைத்துக்கொண்டே கீழே விழுமாம். கீழே விழுந்த கனி பத்தே வினாடிகளில் மறுபடியும் அந்த மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளுமாம்.
சதுரகிரி என்று அழைக்கப்படுவது கிழக்கில் இந்திரபுரி, மேற்கில் வருணகிரி, வடக்கில் குபேர கிரி, தெற்கில் எமகிரி இப்படி சதுரம் போல் அமைந்து மலைகளுக்கு மத்தியில் சிவகிரி, பிரம்ம கிரி, விஷ்ணு கிரி, சித்த கிரி என நான்கு மலைகள் அமைந்து இந்த மலைப்பிரதேசம் சதுரகிரி என்று அழைக்கப்பெறுகிறது. அற்புத மலையில் பிரதானமாக அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆலயங்கள் தவிர, பிலாவடி கருப்பு, ரெட்டை லிங்கம், பெரிய மகாலிங்கம் போன்ற தெய்வங்கள் குறிப்பிடத்தக்கவை. சதுரகிரியின் மையத்தில் சஞ்சீவி மலையும் இருக்கிறது.சந்தன மகாலிங்கம் கோயில் பகுதி
ஆகாய கங்கை தீர்த்தம்
இத்தலத்தில் அமைந்துள்ள சந்திர தீர்த்தம், கெளண்டின்ய தீர்த்தம், ஆகாய கங்கை தீர்த்தம் ஆகியவற்றில் நீராடியவர்கள் பரமானந்த வாழ்வைப் பெற்று மகிழ்வார். புத்துணர்வு பெறுவர். திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி; சிதம்பரத்தை வணங்கினால் முக்தி; திருவாரூரில் பிறக்க முக்தி கிடைக்கும். காசியில் இறக்க முக்தி. இந்த சதுரகிரி தலத்திலோ இந்த நால்வகை முக்தியும் கிடைக்கும் என்பர். இம்மலைத் தலத்தின் சஞ்சீவி மூலிகைக் காற்றினால் ஆயுள் அதிகரிப்பதோடு, நோயில்லா வாழ்வு அமையும் என்கிறார்கள்.
சந்தன மகாலிங்க சுவாமி கோயில் கோபுரம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)