பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்தை பிடித்ததாக மாற்றிக் கொள்ளுங்கள். விரைவில் நீங்களே ஒரு பெரிய மாற்றத்தை காண்பீர்கள்.
வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள். வேலை பாதுகாப்பு என நினைத்து ஒரே இடத்தில் தேங்கி விடாதீர்கள். புதிய முயற்சிகளால் மட்டுமே ஒருவர் முன்னேற்றத்தை அடைய முடியும்.
மற்றவர்களையும் உங்களுக்காக உழைக்க வைக்கும் புத்திசாலித்தனமும் இருந்தால் மட்டுமே நல்ல ஒரு முன்னோடியாக விளங்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அலெக்சாண்டர் போரில் முன்னோடியாக இருந்து முதல் ஆளாக போர் புரிந்தது போல் விளங்குபவர்களால் மட்டுமே குறுகிய காலத்தில் வெற்றி பெறமுடியும்
முடியாது, கஷ்டம், நடக்காது என்பது போன்ற வார்த்தைகளை உங்களிடமிருந்து தூக்கி எறியுங்கள்.
எதையும் நாளை பார்க்கலாம் என்று தள்ளிப் போடாதீர்கள். அது நடக்காமலே கூட போய்விடக்கூடும்.துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய தைரியம் வேண்டும்.
வெற்றி உடனடியாக கிடைத்து விடாது. ஒவ்வொரு படியாக, மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள்.தொழிலில் பல சிக்கல்களும் இடையூறுகலும் வரும், என்றாலும் கூட நீங்கள் அஞ்சாமல் மன தைரியத்துடன் அவற்றை எதிர்கொள்ளுங்கள் பிரச்சணை உங்களிடம் தோற்றுப்போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக