ஏழு கன்னிமார்










சப்தகன்னியர்:  பிராமி - மகேசுவரி - கவுமாரி - வைஷ்ணவி - வராகி - இந்திராணி - சாமுண்டி 

வெளக்கமாறு...


சிவன் பார்வதி


தேவர்களை காப்பதற்காக அந்த விஷத்தை சாப்பிட்டார் ஈசன். அன்னை சக்தி பதறிப்போனாள். உலக ரட்சகனான தன் கணவனின் உடலுக்குள் விஷம் சென்றால் அனைத்து உயிர்களும் அழிந்துவிடுமே என்று கண்டத்தில் கைவைத்தாள் அன்னை. விஷம் அன்னையின் கைபட்டு கழுத்து பகுதியில் அப்படியே நின்றது. ஈசன் திருநீலகண்டன் ஆனார். 

வரலாறு




          இதையெல்லாம் பாத்துபுட்டு இனி மேலும் வெள்ளைகாரன் தான் நமக்கு நாகரீகத்தையும் சுத்தத்தையும் சொல்லி கொடுத்தான்னு சொல்லுவீங்க....
  உலகத்துக்கே ஒன்னுக்கு ரெண்டுக்கு போறது எப்படின்னு சொல்லி கொடுத்ததே நாமதான் இப்ப புரியுதா..!!!!

ஒரே... கூட்டமா இருக்கு


குட்டை உயரமான கதை

               இன்று  ஒரு குட்டை ஒரு நெட்டைக்கு முட்டு கொடுத்த நாள்
                                                        நவம்பர் மூணு

ஆமாங்க நான் அன்னைக்கு ( அன்றைக்கு) என் அம்மாவிடம் அப்படித்தான் கேட்டேன்.

 ஏம்மா நான் இவ்வளவு வளத்தியா இருக்கேனே, அந்த பிள்ளை ரெம்ப குட்டையா இருக்கே... ன்னு

 அதுக்கு எங்கம்மா... 

 டேய் சின்னகண்ணு... குட்டையா இருக்குற பிள்ளதாண்டா வ்யசானாலும் கிழவியா தெரியாம அப்படியே இருப்பா... அதுனால இந்த பிள்ளயவே கட்டிக்கோடா பாக்கவும் நல்லாயிருக்கா, பாக்க அப்பாவியா தெரியுறா... 

எங்கம்மா எதை வச்சு பாத்துவுடன் கணிச்சாங்களோ எனக்கு தெரியாது... 

எங்கய்யா... 

என்ன? உன் சின்ன மகன் என்ன சொல்றான்...

எங்கம்மா...

அவன் என்ன சொல்லபோறான் நாம சொன்னா சரின்னு கேட்டுக்க போறான்...
எங்கய்யா...
நாம சொல்றது இருக்கட்டும் அவன் என்ன சொறான்னு கேளு...

சின்னகண்னு நீ சரின்னு சொல்லிடேன்னு அம்மா சொல்லிறட்டா...
 நான்.... அரை மனசா குட்டையா இருக்காளேன்னு நெனச்சுகிட்டே வேறெதும் குறை சொல்ல முடியாமல்.... ம்ன்னு சொல்ல எங்கம்மா பச்சை கொடிகாட்ட...
எங்கய்யா...

 நான் சொன்னா என் மகன் மீறி ஒன்னும் சொல்ல மாட்டான்... சரின்னு கேட்டுக்குவான்...ன்னு சொல்ல எல்லோருக்கும்.. ச்ந்தோசமாகியிருச்சு..

உடனே எங்கம்மா... 

 பூவும் மிட்டாயும் வாங்கிட்டு வாங்க உறுதிபூ வச்சிறுவோம் ன்னு சொல்ல ஒருத்தர் நான் போய் வாங்கி வருகிறேன்ன்னு.. கிளம்ப எனக்கே அப்போதான் கொஞ்சம் குதுகலம் ஆச்சு... அட எனக்கும் ஒரு பொண்டாட்டி வர போறான்னு எனக்கு அவ பேரு கூட தெரியலை...

பேரு என்னான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது.. யாருகிட்ட கேக்குறது... ஒன்னும் புரியலை... இருந்தாலும் யாருகிட்டேயும் கேக்கவில்லை... கம்ன்னு இருந்தேன்...

அப்போ எங்கய்யா எங்கம்மாவிடம் போய்  உன்மருகள் கூட பேசு...
எங்கம்மா...

ஏன் நான் பேசாம யாரு பேசுவான்னு அகமும் முகமும் மலர சொல்ல...

எங்கய்யா...
அந்த பிள்ளைகிட்ட ( எனக்கு அப்போ அந்த பிள்ளைதான்) உன் பேரென்னமா... 

ஆகா நம நினைச்சதை நம்ம அய்யா கேட்டுட்டாறான்னு சந்தோசத்துல  பார்த்தும் பார்க்காது மாதிரி கேட்டும் கேக்காது மாதிரி இருந்து கிட்டு என்ன பேர்ன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்த போது.. அந்த பிள்ள பேர சொல்ல எனக்கு வெறும் காத்து சத்தம் மட்டுமே கேட்க... எங்கய்யா அப்படியான்னு கேட்க...

எனக்கு அய்யோ என்னா பேருன்னு எனக்கு கேக்கலையேன்னு  சொல்லவும் முடியாம திரும்ப கேக்கவும் முடியாம... கம்ன்னு இருந்து கிட்டேன்...  அப்புறம் மறுநாள் யாருமில்லாத போது எங்கம்மா கிட்ட அந்த பிள்ள பேரு என்னமான்னு வெட்கத்தை விட்டுவிட்டு மெதுவா கேட்க எங்கம்மா நேத்து உன்முன்னாடிதானடா பெயரை சொல்லுச்சுன்னு சொல்லிட்டு போக எனக்கு என்னவோபோல் ஆகி திரும்பவும் கேக்காமல் குழப்பத்துலேயே... பல நாளாகியும் குழப்பம் தீராமல் இருந்த சந்தேகம், வீட்ல அவுங்களா பேசிகிட்டு இருக்கும் போது தற்செயலா புதுசா வந்த பேரை கவனித்து பின் புரிந்து தெரிந்து கொண்டேன் அப்புறமா பத்திரிக்கை எழுதும் போதுதான் அந்த பிள்ளையின் பேரையே உறுதி செய்து கொண்டேன்... என்ன செய்ய அப்போ இந்தபாடுதான் பட வேண்டியதிருந்தது..... 
         
    இப்படி முடிவாகித்தான்  அந்த குட்டை இந்த நெட்டைக்கு முட்டு கொடுத்தார்...

அடடே...  அதுக்குள்ள முப்பது வருசமாகி போச்சான்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு அட இத்தனை வருசத்துல ஒருநாள் கூட ஒரு சேலை வேணும் ஒரு நகைவேணும்ன்னு கூட கேட்டதே கிடையாது, ஒரு நச்சரிப்பு கிடையாது... எந்த உறவுகளையும் புண்படுத்தியதே கிடையாது...  அத்தனை உறவுகளுக்கும் அவளை பிடிக்கும். என்னுடைய கோட்டிதனத்திற்கும் கோமாளிதனத்திற்கும் மிகவும் பொறுத்தமாய் எப்படித்தான் எங்கம்மாவும் எங்கய்யாவும் தேர்ந்தெடுத்தாங்களே... அவர்களுக்குத்தான் தெரியும்... இல்லை என்னை புரிந்து கொண்டு தன்னையே முழுவதுமாக மாற்றிக்கொண்டாளோ தெரியவில்லை... இவ்வளவு காலமாக நான் கொண்டாடியளை கொண்டாடினால் மட்டும் போதாது நான் நன்றியும் செய்ய வேண்டியவனென்று...  இப்போதுதான் புரிகிறது. அது புரிந்த போதுதான்  இவள் குட்டையல்ல உயர்ந்தவள்ன்னு...தெரிகிறது..