மார்கழி மாதத்து பனியின் மகத்துவம் தெரியுமா? உங்களுக்கு இது ஆன்மீக பதிவு அல்ல அனுபவ பதிவு, பலருக்கு இந்த பனியை கண்டாலே... பயம், சிலருக்கு முகம், உதடு, தோல்களில் எல்லாம் சொறசொறப்பாகவும் வெடிப்பும் வரும் அதனால் யாருக்கும் பனின்னாலே எரிச்சல்தான், ஆனால் முன்பெல்லாம் விவசாயிகள் தங்களின் நிலங்களில் விளைந்த சோளம் கேப்பை துவரை பாசிப்பயறு போன்ற தானியங்களில் இருந்தே தங்களுக்கு தேவையான விதைகளை சேகரித்து வைத்துக் கொள்வார்கள், அதை வண்டுகள் துளைக்காமல் பாதுகாக்க இரவு நேரங்களில் பனியில் போட்டு வைப்பார்கள் அதனால் வண்டுகள் அதை துளைப்பதில்லை , சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற கிழங்குகளை அவித்தால் மறுநாள் கெட்டுபோய் நூல்நூலாக வரும் ஆனால் இரவில் பனியில் வைத்துவிட்டு பல நாட்கள் வைத்து சாப்பிட்டாலும் கெட்டு போகாமல் இனிப்பு சுவை அதிகரித்தும் இருக்கும், அதேபோல் வெள்ளை சோளத்தை பச்சையாக( காயாமல்) நசுக்கி அதனுடன் வெல்லம் தேங்காய் துருவல் சேர்த்து அவித்து உண்பார்கள் அதுவும் ஒரே நாளில் கெட்டு போய்விடும் அதை பனியில் வைத்துவிட்டால் கெட்டு போகாது, உணவு பொருள்களையும் விதை பொருள்களையும் இயற்கையாக ஆரோக்கியமாக பாதுகாக்கும் சக்தி இந்த பனிக்கு உண்டு.. அதனால்தானோ என்னவோ பகவான் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி ன்னு சொல்லியிருக்காரோ என்னவோ ...!!!
பக்கங்கள்
- முகப்பு
- கனவு
- இந்திய பழைய நாணயங்கள்
- மனம்
- வெற்றி உங்கள் கற்பனையில்
- உடனடியாக
- வெல்பவன்
- வெற்றி ரகசியம்
- சிந்தித்துபேசு
- கடவுளே !!!
- கடமை
- வென்று காட்டுவோம்
- பேசு
- பரிசு
- வழி தேடு
- தயாராகு
- எதிரி
- வாழ்க்கை
- எதிர்(ரி)காலம்
- பிரச்சனைகள் தீர
- கீதையின் சாரம்
- வாழ்க்கை வெற்றி
- நான்-கடவுள்
- வெற்றிக்கு குறுக்கு வழி
- முதல் வேலைக்காரன்
- உபதேசம்
- விட்டுக் கொடுக்காதீர்கள்
- இறையருள்
- எச்சரிக்கை
- பழக்கம்
- தாய்- தந்தை
- மயானம்-தியானம்
தெரியுமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெரியுமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
