பக்கங்கள்
- முகப்பு
- கனவு
- இந்திய பழைய நாணயங்கள்
- மனம்
- வெற்றி உங்கள் கற்பனையில்
- உடனடியாக
- வெல்பவன்
- வெற்றி ரகசியம்
- சிந்தித்துபேசு
- கடவுளே !!!
- கடமை
- வென்று காட்டுவோம்
- பேசு
- பரிசு
- வழி தேடு
- தயாராகு
- எதிரி
- வாழ்க்கை
- எதிர்(ரி)காலம்
- பிரச்சனைகள் தீர
- கீதையின் சாரம்
- வாழ்க்கை வெற்றி
- நான்-கடவுள்
- வெற்றிக்கு குறுக்கு வழி
- முதல் வேலைக்காரன்
- உபதேசம்
- விட்டுக் கொடுக்காதீர்கள்
- இறையருள்
- எச்சரிக்கை
- பழக்கம்
- தாய்- தந்தை
- மயானம்-தியானம்
அத்திரி மகரிஷி மலை
கடனா நதி அணை
கடனா நதி நீர்த்தேக்கப்பகுதியில் தண்ணீர் குறைவாக ஊள்ளதால் மக்கள் அதை குறுக்கு பாதையாக பயண்படுத்துகிறார்கள்.
மலைக்குள் நடந்து செல்லும் குறுகலான பாதை கோவில் வரை பாறைகள் இல்லாத பாதை நடப்பதற்க்கு எளிதாக உள்ளது. கோவில் அருகில் செல்லும் பொழுது மட்டுமே ஒரு பதினைந்து நிமிட ஏற்றமுள்ள பாதை உள்ளது. அந்த ஏற்றமும் பாறைகள் இல்லாத மண்பாதையாகவே உள்ளது, எனவே மழை காலங்களில் வழுக்கும்படியாக உள்ளது. அதன் அருகில் பெரியபாறை ஒன்றில் குகை ஒன்று உள்ளது. அதனுள் சித்தர்கள் தவமிருப்பதாக கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் அந்த குகையுள் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.
வன துர்க்கை கோவில் முன்புறமுள்ள மைதானம் பக்தர்கள் தங்குவதற்க்கு மிகவும் வசதியாக உள்ளது. அதன் மைய பகுதியில் உள்ள விளக்கு தூண்.
கருவறையின் முன் மண்டபம், அதன் வாசல் நிலை போல் இருபுறமும் புளியமரங்கள் வளர்ந்தோங்கி நிற்கின்றன
அருள்மிகு அனுசுயாதேவி அருள்மிகு அத்திரிமகரிஷி இருவரும் கோவில் கருவறையில் லிங்கவடிவில் காட்சியளிக்கின்றனர். இங்கு அனுசூயாதேவி அம்மன் அட்டமாசித்திகளை குறிக்கும்படியாக எட்டுபட்டையான லிங்க வடிவில் உள்ளார்.அதன் முன்பக்க பட்டையில் திரிசூலமும் செதுக்கப்பட்டுள்ளது. இந்த லிங்க அமைப்பு வேறெங்கிலும் இல்லை. இதை தரிசிக்க சுவாமிகள் அலங்காரத்தில் இல்லாதபோது மட்டுமே முடியும். அனுசுயா தேவியும், அத்திரி மகரிஷியும் அருள் பாலிக்கிற கோயில், யாரிவர்கள்? புராணத்திற்குள் நுழைவுதற்கு முன், ஒரு செய்தி அவர்கள் தமிழகத்து ரிஷிகள். நமது ''சுசீந்திரம்'' அத்திரி மகரிஷியின் பூர்வீகம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கவும்
அருள்மிகு கங்காதேவி சிறிய கிணற்றினுள் அமைக்கப்பட்டுள்ளார். கிணற்று அடிபகுதியிலிருந்து நீரூற்று புனித தீர்த்தமாக உற்பத்தியாகி வருகிறது, இந்த தீர்த்தத்தில் குளிப்பதாலும், குடிப்பதாலும் உடலிலுள்ள வியாதிகள் நீங்கி குணமடைகிறார்கள்.
அகத்திய முனியும், அத்திரி முனியும்
அத்திரி மகரிஷி தியானபீடம், அத்திரி மகரிஷி, அனுசுயாதேவி புராணம். ஒரு சமயம் முப்பெரும்தேவியரான சரஸ்வதி, பராசக்தி, லட்சுமி மூவருக்கும் கற்பில் சிறந்தவர் யாறென கேள்வி எழுந்தது. சந்தேகத்தை தீர்க்க நாரதமுனியிடம் வினாவினார்கள், அதற்கு நாரதர் அனுஷயா தேவியை காட்டினார் அதனால் தேவியர் மூவருக்கும் தங்களை கூறாது அனுசுயாதேவியை கூறியதால். அனுசுயா தேவி மேல் பொறாமையும், கோபமும் கொண்டனர், அதை சோதிக்க தங்கள் நாயகர்களை, அனுஷ்யா தேவி வசித்து வந்த குடிசைக்கு அனுப்பி வைத்தார்கள். மனைவி சொல்லைத் தட்டாத மூவரும் துறவி வேடம்பூண்டு கதவைத் தட்டினர். அந்த வேளை, அத்திரி
மகரிஷி நீராடச் சென்றிருந்தார். அனுஷ்யா தேவி, வந்தவர்களை வரவேற்றார். வந்தவர்கள் பசி என்றனர். பசிப்பிணி தீர்த்தலை
கடமையாகக் கொண்டிருந்த ரிஷி பத்தினி உணவு படைக்கத் தயாரானார். சாப்பிடும் முன்பு, மூவரும் ஒரு நிபந்தனை என்றனர். ‘என்ன?’ என்றார் அனுசுயாதேவி, ஏற்ப்பாயா? ஏற்றபின் மீறக்கூடாது என்று அடுத்தடுத்துக் கேட்டனர். ‘சரி’ என்றார் ரிஷி தேவி. நிர்வாண நிலையில் உணவு படையுங்கள்’ என்றனர். தன் தவ வலிமையால் வந்தவர்
யாரெனவும், வந்த
நோக்கமும் உணர்ந்த அந்தத் தாய், கணநேரத்தில் சரியெனச் சொன்னார். ஒரு கணம் கணவனை வணங்கினார். பின்பு கணவரின் பாதங்களை கழுவிய நீரை எடுத்து அவர்கள் மீது தெளித்தார் அடுத்த நொடியே துறவிகள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாய் மாறிப்போயினர்.
பிறகென்ன, நிர்வாணமாய்
அமுது படைத்தார் அந்த உத்தமப் பெண்மணி. மூவரும் குழந்தைகள் ஆனதால் பிரபஞ்ச
இயக்கமே ஸ்தம்பித்தது. தேவியர் மூவரும் தத்தம் சக்தியை இழந்தனர். நாரதரைக் கெஞ்சி, அனுஷ்யா தேவி காலடி வந்து வணங்கி
நின்றனர். தங்கள் கணவரை மீட்க வழி கேட்டனர்.
அழுது புரண்டனர். அந்த வேளையில் அத்திரி மகரிஷியும்
வந்து சேர்ந்தார். மீண்டும் குழந்தைகள் சிவ, விஷ்ணு , பிரம்மாவாகினர். இந்தப் புராணக் கதையின் பின் கதையும்
உண்டு. மூன்று குழந்தைகளின் ஒருமித்த வடிவே, அத்திரி மகரிஷி, அனுஷ்யா தேவி
தம்பதியினரின் மகனான தத்தாத்ரேயர் எனும் யுகப் புருஷர் ஆவார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)