சபரிமலை யாத்திரை


சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ‎இறைவன் சுவாமி ஐயப்பன் மண்ணுலகத்தில் பந்தள ‎மகாராஜாவின் மகனாக வாழ்ந்து வந்தார்.அதனால் பக்தர்கள் சபரிமலைக்கு வரும் காலங்களில், ‎பந்தளத்தில், பந்தள மகாராஜாவின் அரண்மனைக்கு அருகே ‎குடிகொண்டிருக்கும் வலியகோயிக்கல் ஆலயத்திற்கு பெரும் ‎அளவில் வருகை தந்து, அங்கே இருக்கும் இறைவனை ‎பக்தியுடன் வணங்குகின்றனர். இந்த ஆலயமானது அச்சன்கோவில் ‎ஆற்றோரத்தில் குடிகொண்டுள்ளது. மகரவிளக்கு திருவிழா ‎நடைபெறுவதற்கு மூன்று நாள் இருக்கும் பொழுது, சுவாமி ‎அய்யப்பனுக்கு சொந்தமான புனிதமான ஆபரணங்களை ‎‎(திருவாபரணம்) பந்தளத்தில் இருந்து ‎சபரிமலைக்கு கொண்டு செல்லும் வழக்கம் இன்றும் இருந்து ‎வருகிறது. ‎



இந்த அரண்மனையில் மதுரை பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படும் பந்தளம் அரச பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர். பந்தளம் அரச பரம்பரையில் பிறந்தவராகவே சுவாமி ஐயப்பன் புராணங்களில் போற்றப்படுகிறார். அதோடு அச்சன்கோயில் நதியோரத்தில் ஐயப்பன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலுக்கு நீங்கள் வரும்பொழுது இதற்கும் சபரி மலை கோயிலுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கண்டுணர்வீர்கள். 





திருஆபரணப்பெட்டியை மலைக்கு கொண்டு போகும்போது பகவான் விஷ்ணு கருடன் வடிவில் பெட்டிக்கு காவலாக வருவதாக ஐதீகம். பெட்டியை மலைக்கு கொண்டு செல்ல அந்த குறிப்பிட்ட நாள் அன்று அனைத்தும தயாராக இருந்தாலும் வானத்தில் கருடன் தெரிந்த உடன் தான் அவர்கள் மலைக்கு கிளம்புகிறார்கள். இது வரை ஒரு ஆண்டு கூட கருடன் வராமல் இருந்ததில்லை. பெட்டியை மலைக்கு கொண்டு செல்வது நிற்கவில்லை என்று பக்தர்கள் சொல்கிறார்கள். பெட்டியை மலைக்கு கொண்டு சென்று திரும்பும் வரை மூன்று ஆபரணப்பெட்டிகளுக்கும் காவலாக கருடன் வானத்தை சுற்றியபடி வந்து கொண்டே இருக்கிறது.







சபரிமலையில் நெய்காய் (நெய் தேங்காய்) எரியுமிடம்






























கண்ணீஸ்வரமுடையார் கோயில் வீரபாண்டி



பாண்டிய நாட்டை வீரபாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். பார்வையோடு இருந்த அவனுக்கு முன்வினைப் பயனால் பார்வை பறி போனது. அவன் வருத்தத்துக்கு அளவே இல்லை. கஷ்டம் வரும் போது கடவுளை நினைக்காதவர்  இல்லை. வீரபாண்டியனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவன் சிவபெருமானை உணர்ச்சிப் பெருக்குடன் வணங்கினான். அவரது அறிவுரைப்படி முல்லையாற்றங்கரையிலுள்ள கவுமாரியை வணங்கச் சென்றான். கருணைத்தாயான அவள், அவனுக்கு ஒரு கண் பார்வையைக் கொடுத்தாள். மறுகண் ஒளி பெற தான் வணங்கும் சிவலிங்கத்தை வணங்கும்படி அறிவுறுத்தினாள். வீரபாண்டியனும் அவ்வாறே செய்தான். சிவன் அவனிடம் தனக்கொரு கோயிலை எழுப்பும்படி கூறினார். அவ்வாறு எழுந்ததே கண்ணீஸ்வரமுடையார் கோயில். பின்னர் வீரபாண்டியனின் மற்றொரு கண்ணும் ஒளி பெற்றது.