இறந்து விட்டார்

 அவர் #இறந்து விட்டார், அடக்கம் செய்யணும் சொல்லிக் கொண்டே  சென்றார்கள்..!

மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை, ஆனால் இப்போதுதான் #இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!

இருபது வருடங்கள் முன்னாடி, அவர் மனைவி இறந்த பிறகு  சாப்பிட்டாயா..? என்று யாரும் கேட்காத நேரத்தில் அவர் #இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!

பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே,  என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் #இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை...!!

தாய்க்குப் பின் தாரம் தாரத்துக்குப் பின்.. வீட்டின் ஓரம் ...!!! என்று வாழ்ந்த போத, அவர்

#இறந்திருந்தார். யாருமே கவனிக்கவில்லை..!

காசு இங்கே மரத்திலேயா காய்க்குது,  என்று மகன் அமில வார்த்தையை வீசிய போது..!

அவர் #இறந்திருந்தார் யாருமே கவனிக்கவில்லை...!!

என்னங்க...! ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டு தலை முழுகிட்டு வந்திடுங்க...! என்று காதிலே விழுந்த போதும் அவர் #இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!

உனக்கென்னப்பா..! பொண்டாட்டி தொல்லை இல்லை என்று வாழ்த்துவது போல கிண்டலடிக்கப் பட்ட போது, அவர் #இறந்திருந்தார்..! அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .

இப்போதுதான் #இறந்தாராம் என்கிறார்கள்..! எப்படி நான் நம்புவது..? நீங்கள் செல்லும் வழியில்

இப்படி யாராவது #இறந்து கொண்டிருப்பார்கள்... ஒரு வினாடியாவது நின்று பேசி விட்டுச் செல்லுங்கள்..!

இல்லையேல்...! உங்கள் அருகிலேயே #இறந்து கொண்டிருப்பார்கள்; புரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது #வாழ்வது மட்டுமல்ல...; #வாழ வைப்பதும்தான்..!

பலர் #இறந்து விடுகிறார்கள்,  புதைக்கத்தான் சில ஆண்டுகள் ஆகிறது...

கணபதி தாசர் சித்தர்

  கணபதி தாசர் (Ganapathi Dasar) என்பவர் பதினெண் சித்தர்கள் பட்டியலில் இடம்பெறாவிட்டாலும், 108 சித்தர்கள் மரபில் போற்றப்படும் ஒரு ஞானியாவார். இவரது பெயர் குறிப்பிடுவது போல, இவர் யானை முகக் கடவுளான விநாயகப் பெருமானை (கணபதியை) தனது இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபட்டு, அவருடைய அருளால் ஞானத்தைப் பெற்றவர் என்று நம்பப்படுகிறது.

​இவரைப் பற்றி அறியப்படும் முக்கியத் தகவல்கள் மற்றும் படைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

​முக்கியப் படைப்பு: நெஞ்சறி விளக்கம்

​கணபதி தாசரின் புகழ்பெற்ற ஒரே நூலாகக் கருதப்படுவது "நெஞ்சறி விளக்கம்" (Neñcari Vilakkam) ஆகும்.

  • நூலின் அமைப்பு: இது விநாயகர் காப்புச் செய்யுள் ஒன்று, நெஞ்சறிய வேண்டிய நீதிகளை விளக்கும் 100 பாடல்கள், மற்றும் நூற்பயன் கூறும் 3 பாடல்கள் என மொத்தம் 104 பாடல்களைக் கொண்டது.
  • பாடல் வடிவம்: இந்தப் பாடல்கள் அனைத்தும் விருத்தம் என்னும் யாப்பு வகையைச் சேர்ந்தவை.
  • கருத்து: இந்த நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும், ஆசிரியர் தனது நெஞ்சைத் தானே விளித்துப் பேசும் பாணியில் அமைந்துள்ளன. சித்தி (ஞானம்) தரும் அரிய கருத்துக்கள் எளிய உவமைகளோடு இதில் உணர்த்தப்படுகின்றன.
  • தத்துவம்: கணபதி தாசர் உறுதியான வேதாந்தியாக (Vēdāntin) அறியப்படுகிறார். நிலையற்ற உலகப் பற்றுகளை நீக்கி, மெய்ஞ்ஞானத்தைத் தேடும்படி இந்நூல் வலியுறுத்துகிறது.
  • இறைத்தொடர்பு: ஒவ்வொரு பாடலின் முடிவிலும், நாகப்பட்டினம் (நாகை) தலத்தின் தலைவரான நாகை நாதரை வணங்குமாறு தனது நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறார். "சுந்தர நாகை நாதர் துணையடி நிசம்பார் நெஞ்சே!" போன்ற வரிகள் இத்தொடர்பை உறுதி செய்கின்றன.

​போதனையின் சுருக்கம்

​நெஞ்சறி விளக்கத்தில் உள்ள சில முக்கியமான போதனைகள்:

  1. நிலையற்ற வாழ்வு: தந்தை, தாய், மனைவி, மக்கள், செல்வம் என உலகில் நாம் காணும் எதுவும் நிரந்தரம் அல்ல என்றும், அழியாத உண்மையானது நாகை நாதரின் திருவடிகளே என்றும் வலியுறுத்துகிறார்.
  2. ஆசைப் பாசங்கள்: மனமெனும் பேயினால் மாயையாகிய இருள் மூட, ஆசைப் பாசம் என்னும் சுமையை ஏற்றிக்கொண்டு கவலையுறாமல், இறைவனின் திருவடியைப் பணிய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
  3. மெய்ஞானத் தேடல்: வீண் பொழுதைக் கழிக்காமல், அழியாத மெய்ப் பொருளாகிய ஞானத்தைத் தேடி, குருவின் உபதேசத்தைப் பெற்று, குண்டலினி மார்க்கத்தில் சென்று உண்மையை உணருமாறு தனது நெஞ்சுக்கு கட்டளையிடுகிறார்.

​கணபதி தாசரின் பாடல்கள், ஒரு சராசரி மனிதன் உலக இன்பங்களில் இருந்து விடுபட்டு, நிலையான பேரின்பத்தை அடையத் தேவையான ஞான மார்க்கத்தை எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கின்றன.

​இங்கே, இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நெஞ்சறி விளக்கப் பாடல்களில் ஒன்று காணப்படுகிறது.

துவாரகதீஸ்

படத்தில் இருப்பது உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீ துவாரகாதீஷ் மஹாராஜ் மந்திர் ஆகும். இந்த கோவில் பற்றிய சில தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
 * வரலாறு: துவாரகாதீஷ் கோவில் 1814-ஆம் ஆண்டில், குவாலியரின் அரச குடும்பத்தினரால் கட்டப்பட்டது. மதுராவில் உள்ள பழமையான மற்றும் பெரிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
 * மூலவர்: இக்கோவிலின் மூலவர் கிருஷ்ண பகவான், இங்கு அவர் 'துவாரகாதீஷ்' (துவாரகையின் அரசர்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். மூலவர் சிலை கருப்பு பளிங்கு கற்களால் ஆனது.
 * சிறப்பு: இக்கோயில் அதன் கலைநயமிக்க கட்டிடக்கலை மற்றும் அழகிய ஓவியங்களுக்காகப் பிரபலமானது. குறிப்பாக, கூரையில் உள்ள ஓவியங்கள் கிருஷ்ணரின் வாழ்க்கைக் கதைகளைச் சித்தரிக்கின்றன.
 * அமைவிடம்: விஷ்ராம் பஜார், மதுரா, உத்தரப் பிரதேசம்.
 * திறந்திருக்கும் நேரம்: பொதுவாக காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். ஆரத்தி மற்றும் பூஜை நேரங்களில் இந்த நேரங்கள் மாறுபடலாம்.
 * முக்கிய விழாக்கள்: இங்கு கிருஷ்ண ஜெயந்தி, ஹோலி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

சூனியகாரி

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.

”நான் கேட்கும் ஒரு கேள்விக்கு, சரியான பதிலைச் சொன்னால், உன் நாடு உனக்கே”

கேள்வி

ஒரு பெண், தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்... (வென்ற மன்னனின் காதலி, அவனிடம் இக்கேள்வியை கேட்டு விட்டு, விடை சாென்னால்தான், நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).

தோற்ற மன்னன், பலரிடம் கேட்டான். விடை கிடைக்கவில்லை.

கடைசியாக சிலர் சொன்னதால், ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.

அவள் சொன்னாள்.

விடை சொல்கிறேன். அதனால், அந்த மன்னனுக்குத், திருமணம் ஆகும். உனக்கு உன் நாடு கிடைக்கும். ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?

அவன் சொன்னான்.என்ன கேட்டாலும் தருகிறேன்.

சூனியக்காரக்கிழவி, விடையைச் சொன்னாள்.

தன் சம்பந்தப்பட்ட முடிவுகளை, தானே எடுக்க வேண்டும் என்பதே, ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.

இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது.

அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான். வேண்டியதைக் கேள் என்றான்.

அவள் கேட்டாள் "நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான். உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.

அவள் சொன்னாள்.

"நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்.

ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது, கிழவியாக இருந்தால், வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.

இதில் எது உன் விருப்பம் ?” என்றாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான். "இது உன் சம்பந்தப்பட்ட விஷயம், முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று அவள் சொன்னாள். "முடிவை என்னிடம் விட்டு விட்டதால், நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்.

ஆம்...

பெண்,
அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது, தேவதையாக இருக்கிறாள்.

முடிவுகள், அவள் மீது திணிக்கப்படும் போது, சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

அனைவரும் புரிந்து செயல்படுங்கள்.

படித்ததில் பிடித்தது.!

மனைவியை இழந்தவன்

கணவனை இழந்த மனைவியை விடவும்
மனைவியை இழந்த கணவன் தான் அதிகம் நொடிந்து போகிறான்.

காரணம் கணவனை இழந்த மனைவி அவளது கணவனை மட்டுமே இழக்கிறாள்.

ஆனால்
மனைவியை இழந்த கணவன்...

தனக்கு ஆடையாய் இருந்த மனைவியை
தோளுக்குத் தோளாய் இருந்த தோழியை
நோய்படும் போது தானும் நோகும் தாயை
இழக்கிறான்.

ஒரு மனைவி எத்தனை உருவம் எடுக்கிறாள்?

கணவனுக்காக தன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
அவனுடைய சொந்தங்களை தன்னுடையதாக்கிக் கொள்கிறாள்.

ஊர் , பெயர் , முகவரி , வீடு முதற்கொண்டு தன் தாயிடம் குடித்த பால் மற்றும் தந்தை தந்த கல்வி தவிர அனைத்தையும் மாற்றிக்கொள்ள முன் வருகிறாள்.

தான் கண்ட கனவுகள் அனைத்தையும்
கொண்டவனுக்காக மறைக்கிறாள். மறக்கிறாள்.

வீட்டின் வேலைக்காரியாக ,
சலவைக்காரியாக,
சமையல்செய்பவளாக,
கணக்குப்பிள்ளையாக
பல வேலைகளை எதிர்பார்ப்பின்றி செய்கிறாள்...

அவள் இருக்கும் வரை
இத்தனை வேலைகள் யார் செய்தார் என்று குடும்பத்தில் யாருக்கும் உணர்ச்சி வருவதேயில்லை.

பொன்னின் அருமை அதை தொலைத்த பின் தான் தெரியும்.

பெண்ணின் அருமை அவள் மறைந்த பின் தான் தெரியும் .
" காதலி அருமை பிரிவில்
மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை கோடையிலே"...

ஆம்.. மனைவியின் அருமையை அவளது மறைவில் தான் ஆடவன் உணர்கிறான்.

மனைவியை இழந்து தவிக்கும் கணவர்களையும்...

கணவர்களை இழந்து வாடும் மனைவிகளையும் தினந்தோறும் சந்திக்கிறோம்.

கணவனை இழந்த மனைவியர் நினைவுகளை அசை போடுவார்கள். நல்ல நினைவுகளை கூறுவார்கள்.

மனைவியை இழந்த கணவர்கள் தங்கள் மனைவிகளின் தியாகங்களை எடுத்துக்கூறி புலம்புவார்கள். "இன்னும் நல்லா கவனிச்சி இருக்கலாம் சார் அவள.. இப்டி சரியா பாக்காம விட்டுட்டேனே சார்". என்று அழுது புலம்புவார்கள்.

கணவனை இழந்த மனைவிகளுக்கு பிள்ளைகள் மூலம் நிவாரணமும் மனவலிமையும் கிடைத்து விடுகிறது.

ஆனால் மனைவியை இழந்த கணவர்களுக்கு அனைத்தும் இருந்தும் அனாதை ஆனதை போன்று தான் இருக்கிறார்கள்.

தனது சுக துக்கம்
இன்ப துன்பம்
தோல்வி வெற்றி
அனைத்திலும் கூடவே இருந்து தன்னை சகித்து வாழ்ந்த தனது மனைவி இறக்கும் போது ஒவ்வொரு ஆடவனும்
இறந்தே தான் விடுகிறான்.

அதற்குப்பிறகு அவனுக்கென்று எதையும் பெரிதாய் அவன் யோசிப்பதில்லை.

அவரவர் மனைவியை அவள் உயிரோடு இருக்கும் போதே முடிந்தவரை நேசிப்போம்.

பகிர்வு பதிவு.