ஜைன கோவில்




ஜைனக்கோவில் முற்றிலும் மஞ்சள் நிற சலவைக் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோவிலாக உள்ளது. கலை அம்சத்தோடு செதுக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகளும், நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள குவிந்த மேற்கூரைகளும் வேலைப்பாடுகளும்  பிரமிப்பூட்டும் வகையில் இருக்கின்றன. சிற்ப வேலைப்பாட்டிலும், அழகிலும் தாஜ்மஹா லுக்கு இணையாக உள்ளது

தார் பாலைவனம்









தார் பாலைவனத்து காட்சிகள்

கலை பொருட்கள்




ஜெய்சல்மீர் கடை வீதியில் விற்பனைக்கு காத்திருக்கும் கலை பொருட்கள்

ஜெய்சல்மீர் கோட்டை ( Jaisalmer Fort )

   ராஜஸ்தான் பாலைவனத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட கோட்டை தான் ஜெய்சல்மீர் கோட்டை. ஜெய்சல்மீர் நகரின் மையப் பகுதியில் இந்த கோட்டை அமைந்துள்ளது. இப்பகுதியை ஆண்ட ரஜபுத்திர மன்னரான ராஜா ராவல் ஜெய்சால இந்த நகரை உருவாக்கியதாகக் கூறுகிறார்கள். ஈசால் என்ற துறவியின் கட்டளைப் படி, ராஜா ஜெய்சால் இந்த நகரை உருவாக்கியதாகவும் சில கதைகள் உள்ளன.
   ராஜஸ்தான் மாநிலத்திலேயே இரண்டாவது மிகப் பழமையான கோட்டை ஜெய்சல்மீர் கோட்டை தான். இதனை சோலார் கில்லா (சூரியக் கோட்டை) என இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். சுமார் 250 அடி உயரமான இந்த கோட்டையைச் சுற்றி 30 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பி கோட்டையைப் பலப்படுத்தியுள்ளனர். இதற்குள் மொத்தம் 99 அரண்மனைகள் உள்ளன.



இன்றைக்கும் ஜெய்சல்மீர் நகரின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இந்த கோட்டைக்குள் தான் வசிக்கிறார்கள். அதேபோல இந்த கோட்டைக்குள் உள்ள கிணறுகளில் இன்றும் தொடர்ந்து தண்ணீர் கிடைக்கிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடைபெறும் பாலைவனத் திருவிழாவைக் காணவும், ஒட்டக சவாரி செய்யவும் ஏராளமான வெளிநாட்டினர் ஜெய்சல்மீர் வருகின்றனர்.
எகிப்து. அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் இந்தியாவிற்குள் வரும் முக்கியப் பாதை யாக விளங்கியதால் ஒரு காலத்தில் ஜெய்சல்மீர் செல்வம் கொழிக்கும் நகராக இருந்தது. ஆனால் 19-ம் நூற்றாண்டில் பம்பாய் போன்ற துறைமுகங்களின் வழியாக வணிகர்கள் வரத் தொடங்கியதும், ஜெய்சல்மீர் தனது பழைய பொலிவை இழந்துவிட்டது. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இந்தியாவின் பாதுகாப்பு கருதி இந்த பாலைவனப் பகுதி ராணுவத்தினரின் கூடாரமாக மாற்றப்பட்டுவிட்டது.

 






     கோட்டைகளும், மதில்சுவர்களும், குறுகிய வீதிகளுமாய், செல்வச் செருக்கோடு வாழ்ந்த ராஜபுத்திர மன்னர்களின் பெருமையை சொல்லும் தங்க நகரம். இதை நிர்மாணித்த ராஜபுத்திர மன்னன் ஜெய்சல் என்பவரது மலைக்கோட்டை என்று பொருள்படும்படியாக இதற்கு ஜெய்சல்மீர் என்று பெயர் வந்தது. சுற்றிலும் இருக்கும் மணல் மேடுகள் தங்க நிறத்தில் காட்சியளிப்பதால் இது தங்க நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.



 காலம் காட்டும் கருவி


 மலைக்கோட்டையின் மாடல்
 மன்னரின் இருக்கை





 ராஜபுத்திரர்களின் நுண்ணிய கட்டிடக் கலையை பறை சாற்றும் அநேக நினைவுச்சின்னங்கள் இன்னும் இருந்த போதிலும், ஜைன மத தாக்கமும் வெகுவாக இருந்ததற்கு சாட்சியாக ஜைனக் கோவில்கள் மூலைக்கு மூலை நிறைந்திருக்கின்றன.







 அரண்மனையில் பயண்படுத்தப்பட்ட பொருட்கள்













 ராஜ புத்திரர்கள் ஆண்ட நாட்களிலெல்லாம், ஆட்சி செய்தார்களோ இல்லையோ, சின்ன சின்ன சில்லரை விஷயத்துக்கெல்லாம் வாளை உருவிக் கொண்டு போர்க்களம் புகுந்திருக்கிறார்கள். மற்ற இரண்டு ராஜபுத்திர ராஜ்யங்களாயிருந்த ஜோத்பூர், மற்றும் பிகானேருடன் இவர்கள் நல்லுறவு கொண்டிருந்ததாக சரித்திரமே இல்லை. மண், பெண், மற்றும் பொன்னுக்காக எப்பொழுதும் அடித்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு சில சமயங்களில் ஒரு சிறிய நீரூற்றுக்காகவும் இந்த பாலைவன மண்ணில் தலைகளை வெட்டி சீவப்பட்டிருக்கிறார்கள்.