சந்தன மகாலிங்கம் கோயில் பகுதி

ஆகாய கங்கை தீர்த்தம் 


 இத்திருத்தலம் பஞ்சபூச லிங்கத்தலமாகும். இவற்றில் அருள்மிகு சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகும். அருள்மிகு சந்தன மகாலிங்கம் தைவிக லிங்கமாகும். அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டதும் இத்திருத்தலம். இத்திருத்தலத்திற்கு ஒரு முறை வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தால் பல நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு. 
இத்தலத்தில் அமைந்துள்ள சந்திர தீர்த்தம், கெளண்டின்ய தீர்த்தம், ஆகாய கங்கை தீர்த்தம் ஆகியவற்றில் நீராடியவர்கள் பரமானந்த வாழ்வைப் பெற்று மகிழ்வார். புத்துணர்வு பெறுவர். திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி; சிதம்பரத்தை வணங்கினால் முக்தி; திருவாரூரில் பிறக்க முக்தி கிடைக்கும். காசியில் இறக்க முக்தி. இந்த சதுரகிரி தலத்திலோ இந்த நால்வகை முக்தியும் கிடைக்கும் என்பர். இம்மலைத் தலத்தின் சஞ்சீவி மூலிகைக் காற்றினால் ஆயுள் அதிகரிப்பதோடு, நோயில்லா வாழ்வு அமையும் என்கிறார்கள்.
 சந்தன மகாலிங்க சுவாமி கோயில் கோபுரம்












கருத்துகள் இல்லை: