சங்கிலிபாறை
சதுரகிரி மலை பாதை, இயற்கையாக அமைந்த ஒன்று. மகாலிங்கத்தைக் தரிசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பாதை. வாகனங்கள் செல்ல முடியாது. யாவும் நடையாத்திரைதான்! குறுகலான பாதை... கரடுமுரடான வழித்தடம். சபரிமலையில் உள்ளதுபோல் இங்கு எந்த வசதியும் இங்கு கிடையாது. செல்போன், உணவு, தங்குவது, கழிப்பிடம் என்று எதற்குமே முறையான வசதியில்லை. இந்தப் பாதையில் மேடும் பள்ளமும், குண்டும் குழியும் சகஜம். சில இடங்களில் பாதையின் அகலம் வெறும் மூன்றடி மட்டுமே. அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் திரளான மக்கள் நடக்கும்போது நெரிசல் ஏற்பட்டு கால் இடரும் வாய்ப்பு நிறைய உண்டு. பாதையின் ஓரமாகக் காலை வைத்துவிட்டால், கீழே அதல பாதாளம்தான்! சில இடங்களில் பாறை மீது எந்த பிடிமானமும் இல்லாது நடக்கும்போது வழுக்கும் தன்மை கொண்டு உள்ளன. அம்மாதிரி இடங்களில் மிகுந்த கவனத்துடன் நடக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக