நாகர்கோவில்- நாகராஜர் கோவில்








தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க நாகராஜர் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ளது.  இந்த நாகராஜர்கோவில் உருவானதற்கு பல செவிவழிக் கதைகள் கூறப்படுகின்றன. புல், புதர்களுடன், செடி, கொடிகள் என்று இருந்த இந்தக்காட்டில் புல் அறுக்கும் பெண் ஒருத்தி, மாட்டிற்குப்புல் அறுக்கும்போது, அவள் கையிலிருந்த அரிவாள் ஐந்து தலைநாகம் ஒன்றின் தலையில்பட்டு ரத்தம் பீறிட்டது. 

இதைக் கண்டு பயந்து நடுங்கிய அப்பெண் ஓடி சென்று பக்கத்தில் உள்ள கிராம மக்களை அழைத்து வந்தாள். அவர்கள் கூட்டமாக வந்து பார்க்கும்போது, அந்த ஐந்து தலைநாகம் சிலையாக காணப்பட்டது. உடனே கிராமமக்கள் அதை  ஒரு சிறிய தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூரைக் கோவிலாக கட்டி வழிபட்டு வந்தனர். 

நாளடைவில் அக்கம் பக்கத்து கிராமமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, நாகராஜரை தரிசித்துச் சென்றதில், ஆலயம் மிகப் பிரபலமாயிற்று. தமிழகத்துக் கோவில்களில் வேறேங்கும் காணப்படாத தனிச்சிறப்பு, ஆலயத்தின் மூலஸ்தானத்தின் மேல்கூரைத் தென்னை ஓலையால் வேயப்பட்டதாகும். 

உதய மார்த்தாண்டவர்மா மன்னர், இக்கோவிலை புதுப்பித்து கொண்டிருந்தபோது, ஒருநாள் அவர் கனவில் நாகராஜர் தோன்றி, "ஓலைக் கூரையாலான இருப்பிடத்தையே நான் மிகவும் விரும்புகிறேன். முதன் முதலில் அக்கூரையினடியில் தான் வாசம் செய்தேன். ஆதலால் அதை மாற்ற வேண்டாம்'' என்று கூறினார். 

அக்கூரையில் எப்போதுமே ஒரு நாகப்பாம்பு காவல் புரிகிறது என்றும், வருடதோறும் கூரைவேயப்படும் போது ஒரு பாம்பு வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இக்கோவிலின் அர்ச்சகர்கள் கேரளாவிலுள்ள, ''பாம்பே காட்டு இல்லம்'' என்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள். 

பரம்பரை பரம்பரையாகவே நாகத்தை வழிபடுபவர்கள். ஓலையாலான மூலஸ்தானத்தில் நாகராஜர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே இருப்பதும், அங்கிருந்து எடுக்கப்படும் மண்ணே இக்கோவிலின் முக்கிய பிரசாதமாகும். இம்மண் ஆறுமாதகாலம் கறுப்பு நிறமாக இருந்து வருகிறதாம். 

எவ்வளவோ காலமாக எடுத்தும் அம்மண் குறையாமல் இருப்பது நாகராஜனின் ஒப்பற்ற அருளைக் குறிக்கிறது என்று சொல்கிறார்கள். கூரைவேயப்பட்டிருக்கும் மூலஸ்தானத்திற்கும் பின்னால் தொழுநோய் போன்ற பதினெட்டு நோய்களை குணப்படுத்தும் `ஓடவள்ளி' என்ற ஒரு பச்சிலைக்கொடி படர்ந்திருந்ததாகவும், அதனடியில் தன் இனத்துடன் குட்டி குஞ்சுகளுடன் நாகங்கள் குடியிருந்தனவாம். 

அதனை பக்தர்களின் பயத்தினால் அகற்றி விட்டாÖர்களாம். அக்காலத்தில் பிரசாதத்தை `ஓடவள்ளி', இலையில் கொடுப்பார்களாம். ஒவ்வொரு `ஓடவள்ளி' இலையும், ஒவ்வொரு சுவையுடன் இருக்கும். இப்பொழுது பிரசாதம், புற்று மண்ணும், சந்தனமும் வாழை இலையில் கொடுத்து வருகிறார்கள். அம்மன் கோவிலில் மட்டும் குங்குமம் பிரசாதம் கொடுக்கப்படுகிறது. 

தேவைப்பட்டவர்களுக்கு கிலோ கணக்கில் புற்றுமண்னை விலைக்கு தருகிறார்கள். ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் `தை' மாதத்தில் அனந்தகிருஷ்ணன் முன்னுள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றி, பத்து நாட்கள் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள். ஆவணி மாதம் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பாகத் திருவிழா நடைபெறுகிறது. 

என்றாலும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் திருவிழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகின்றனர். அதுசமயம் பக்தர்கள் கூடி, உப்பு, மிளகு, பசும்பால், மரத்தினாலான மரப்பொம்மைகள் என காணிக்கைகளை செலுத்தி, நாகராஜனை தரிசித்து அருள் பெறுவதற்கு வழிபடுகின்றனர். 

நாகதோஷங்களை ஒழிக்க இது ஒரு புண்ணியதலமாக விளங்குகிறது. பிள்ளைப்பேறு வேண்டுவோர் நாகச்சிலைகளால் சூழப்பட்ட இந்த அரச மரங்களைச்சுற்றி வலம் வந்தால் பலனடைவர் என்ற நம்பிக்கையும் உள்ளது.

Matrimony





அன்புடையீர் வணக்கம்,
                  எமது  "அலங்காரம்'' திருமணதகவல் மையத்திலும், இணையதளத்திலும் பதிவு செய்வதும் பார்வையிடுவதும் ''முற்றிலும் இலவசம்''
  இணைய தளத்தில் இணைந்திட இந்த இணைப்பை கிளிக் செய்யவும் http://www.alangarammatrimony.com/


      தாங்களாகவே ஆன்லைன்   மூலமாக பதிவு செய்தால் நாங்கள் தங்களின் பதிவை சரிபார்த்த பின்பு, தங்களின் பதிவு எண்ணும், கடவுச்சொல்லும் தாங்கள் பதிவு செய்துள்ள இ-மெயில் மூலமாகவும், தங்களின் மொபைல் எண்ணுக்கு SMS மூலமாகவும் தங்களை வந்தடையும், நேரடியாக வந்து பதிவு செய்தால் பதிவு எண்ணை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.
             பதிவு செய்பவர்கள் வரன்களின் போட்டோ, வீடியோ வை அவசியம் பதிவேற்றுங்கள், அது அவர்களின் திருமணம் விரைந்து நடைபெற மிகவும் உதவும். 
    பதிவு எண் கிடைத்தவுடன் உங்களுக்கு பிடித்தமான வரனை   தேர்வு செய்யலாம். எமது இணையதளத்தின் மூலமாக வரன்களை தேடுவதும் தேர்வு செய்வதும் மிகவும் எளிது, தேர்வு செய்தவுடன் தங்களின் பதிவு எண்ணையும், தாங்கள் தேர்வு செய்த வரனின் பதிவு எண்ணையும் எங்களுக்கு தெரியப்படுத்தி நீங்கள் தேர்வு செய்த ஒவ்வொரு புரோபைலுக்கும் ரூ- 50 /- மட்டுமே செலுத்தி முழு விபரங்களையும் பெறலாம்.
      தாங்கள் தேர்வு செய்த வரன்களின் முகவரியை நேரடியாகவோ, அல்லது தாங்கள் பதிவு செய்துள்ள இ-மெயில் மூலமாகவோ பெறலாம். பணம் வங்கி கணக்கில் செலுத்தினால், செலுத்திய பின் Membership ல் login ஆகி பணம் செலுத்திய விதம் பேங்க் கிளையின் பெயர், DD, Cheque எண் போன்றவைகளை பதிவு செய்து எமக்கு தெரியப்படுத்தவும்.

    ஆன்லைன் மூலமாக தாங்களாகவே வரன்களின் போன் நம்பர் முகவரிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் மேம்பட்ட வசதிகள் நிறைந்த Membership Schemes ஐ பயண்படுத்துங்கள்.


 ''வேறு எந்தவிதமான கட்டணமோ, கமிசனோ கிடையாது''
         
              எம்முடைய சேவை அனைத்து மதத்தவருக்கும், இனத்தவர்களுக்குமானது.
  மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை தாங்களே நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல் மட்டுமே.
 நேரில் தொடர்பு கொள்ள :
அலங்காரம் மேட்ரிமோனி
158/A எடமால் தெரு 
அர்விந்த் மார்க்கெட்டிங் மேல்மாடி 
நாடார் பெண்கள் பள்ளி எதிர்புறம்
தேனி-625531, தமிழ்நாடு, 
கைபேசி : +91 860 80 99 676, +91 860 80 99 717 

கோடிலிங்கம், ஸ்ரீ கைலாசலிங்க பர்வதவர்தினி கோவில் சுருளிமலை

















இந்த குகைகோவில் செயற்கையாக ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது இந்த குகைகோவில் இதனுள் பன்னிரண்டு ராசிகளின் படங்களும் பெயர்களும் எழுதப்பட்டுள்ளது, அதன் கருவறையில் அஷ்டலிங்கம் கம்பிகளின் மேல் அமைக்கப்பட்டுள்ளது, அதில் மேலே உள்ள படத்தில் ஒருவர் லிங்க அமைப்பிற்குள் அமர்ந்து உள்ளது போல் அமரவைத்து பூஜை செய்வார்கலாம், அப்படி செய்தால் அவர்களின் ராசிக்கு உள்ள தோசங்கள் விலகிவிடும் என்கிறார்கள். (புதுசா இருக்கே?)
 72 அடி உயர தியானலிங்கம் அமைக்க ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டு நன்கொடையை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதை ஒரு தனியார் அறக்கட்டளை நடத்த திட்டமிட்டுள்ளது.
      முன்பெல்லாம்  சுருளிமலையில் பிச்சைகார சாமியார்கள் மட்டுமே இருந்து வந்தார்கள், திதி செய்பவர்கள் அவர்களாகவே சாமியை கும்பிட்டுவிட்டு பிச்சைகாரர்களுக்கு  அன்னதானம் செய்துவிட்டு நிம்மதியாக சென்று கொண்டிருந்தார்கள், ஆனால் தற்பொழுது புதிது புதிதாக மடாதிபதிகள் உருவாகி வருகிறார்கள், அதே போல் திதி கொடுப்பதற்க்கும் புதிது புதிதாக அமைப்புகளும் உருவாகி வருகின்றன. இனி சுருளிமலை என்னாவாகப்போகிறதோ!!!  

பாண்டவமலை சமணர் மலை கொங்கர் புளியங்குளம்











புளியங்குளம் வாழ்மக்களுக்கு அவர்கள் வாழும் பகுதியில் உள்ள சமணர்கள் வாழ்ந்த மலையை பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதையறிந்து கொள்ள அந்த ஊர்வாசி ஒருவரிடம் பேச்சு கொடுத்த பொழுது ,மலையேறி சென்றவுடன் இடது புறத்தில், மேலே உள்ள இந்த சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது,  நாம் நின்றால் தொடமுடியாத சுமார்10அடிக்கு மேலான  உயரத்தில் அமைந்துள்ள இந்த சிற்பத்திற்கு ''எட்டுகல்சாமி'' என்று பெயராம், அதுஎன்ன? எட்டுகல் சாமி என விளக்கம் கேட்டதற்கு அவர் கூறிய விளக்கம்,  இந்த சிற்பத்தின் மேல் பகுதியில் சிறிய எட்டு செவ்வக குழிகள் செதுக்கப்பட்டுள ன அதன் கீழே நின்று கொண்டு கற்களை எடுத்து அந்த செவ்வக குழிகளில் எறிய வேண்டுமாம் அப்பொழுது அந்த கற்கள் கீழே விழுந்துவிடாமல் அந்த குழிகளில் பொறுந்தி கொண்டால் எட்டுகல்லும் பொருந்தி கொண்டவுடன், அந்த மலையானது பிளந்து கொண்டு நாம் வேண்டும் அளவிற்கு தங்கத்தை வாரிவாரி வழங்கும் என்றார். இந்தமலையை பாண்டவமலை என்கிறார்கள். சமணர்கள் வாழ்ந்த இந்த இடங்களில் எல்லாம் அவர்களின் படுக்கைகள் மட்டுமே உள்ளன, அவர்கள் வாழ்ந்ததற்க்கான வேறு அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை, 

பெருமாள் மலை மதுரை,