காதல் காமம்

                                           
     

                ''காதல் பலவகை'' ஆனால் ''காமம் ஒன்றே ஒன்று''
காதல் ஒவ்வொரு உறவிலும் ஒவ்வொருவகையானது, அதாவது

தந்தையின் மீது ஒருவகை 
தாயின் மீது ஒரு வகை
தாத்தா பாட்டி  மீது ஒருவகை
மகன் மீது ஒருவகை
மருமகள் மீது ஒருவகை
மகள் மீது ஒருவகை
மருமகன் மீது ஒருவகை
மாமா அத்தை மீது ஒருவகை 
அத்தை மாமா மகன் மீது ஒருவகை
அத்தை மாமா மகள் மீது ஒருவகை
சித்தப்பா சித்தி மீது ஒருவகை
சித்தப்பா சித்தி மகன் மகள் மீது ஒருவகை
பெரியப்பா பெரியம்மா மீது ஒருவகை 
பெரியப்பா பெரியம்மா மகன் மகள் மீது ஒருவகை
அக்காள் தங்கை மீது ஒருவகை
மச்சான் மாப்பிள்ளை மீது ஒருவகை
அக்காள் தங்கை மகன் மகள் மீது ஒருவகை
மதினி கொளுந்தியாள் மீது ஒருவகை
காதலன் காதலி மீது ஒருவகை
ஏன் நண்பன் நண்பி மீது கூட ஒருவகையான காதல்தான்!! 
 இப்படி நாம் பலவிதமாக காதல் கொள்கிறோம். அதே மாதிரி அத்தனை உறவுகளும் நம் மீது ஒவ்வொரு வகையாகவே காதல் கொள்கிறார்கள், அதாவது காதல் என்பது உள்ளம் உள்ளத்தை நேசிக்கும் அன்பு. அவர்கள் அருகில் இருப்பதை விரும்பும்,  ஆனால் காமம் என்பது ''அடைய'' நினைத்து விருப்பம் கொள்வது, எனவே நாம் உறவுகளின் மேல் ''காதல்'' கொள்வோம், நம்மை படைத்தது எதுவோ அதன்மீது  ''காமம்'' கொள்வோம்,
     ஆனால், இவர்கள் அனைத்தையும் விட கணவன் மீது அல்லது மனைவி மீது மட்டும் ''காதலும் காமமும்'' கொள்வோம், உலகில் கடவுளும் அத்தனை உறவுகளும் இணைந்த ஒரு உறவு உண்டு என்றால் அது ''கணவன் மனைவி'' உறவு மட்டுமே. என்ன? சரியா நீங்க என்ன நினைக்கிறீங்க!?

கருத்துகள் இல்லை: