டார்வின், ஆதாம்- ஏவாள்

       
            மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்றும்,  மனித இனத்தில் ஆதாம்,  ஏவாள் தான் உலகில் முதன்முதலாக தோன்றியவர்கள் என்று பல காலமாக நம்ப வைக்கப்பட்டு  அதனால் நம்ப பட்டுவருகிறது.
              சரி அது இருக்கட்டும், நாம் சற்று சிந்திப்போம் புவியில் இன்று வரை தோன்றிய உயிரினங்களில் விலங்குகளில் அல்லது மரம், செடி கொடிகளில் ஏதேனும் ஒன்றிலாவது ஒரே ஒரு உயிர் மட்டுமே தோன்றி பல்கி பெறுகியதாக  எந்த ஆராய்ச்சியாவது அல்லது எந்த ஆராய்ச்சியாளராவது சொல்லியிருக்கிறார்களா? இல்லையே...!!!  அப்படியிருக்க மனித இனத்தில் மட்டும் முதன்முதலாக எவ்வாறு ஒரு உயிர் மட்டுமே தோன்றியிருக்க முடியும்?
              கிருத்துவமும், இசுலாமியம் போன்ற மார்க்கங்கள் தோன்றாத காலத்திலேயே வாழ்க்கை முறையிலும், புவியியல்,வான்வியல், மருத்துவ ஆராய்ச்சியிலும் விஞ்ஞானத்திலும் ஆட்சிமுறைகளிலும் மிகவும் மேம்பட்டு இருந்த இந்து கூட்டமைப்பு மதங்கள் எதுவுமே இதை சொல்லவில்லை, ஆனால் மேம்பட்ட விலங்கான மனிதன் உருவான விதத்தை மட்டும் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று டார்வின் என்பவரும், முதன் முதலாக  ஆதாம் ஏவாள்தான் தோன்றினார்கள்  என்றும் கிருத்துவமும் இசுலாமியமும் போன்ற சில மார்க்கங்கள் மட்டுமே சொல்கின்றன.
                    டார்வின் கொள்கைபடி குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று ஒரு பேச்சுக்கு ஒப்பு கொள்வோம்,  சரி இப்போ எந்த குரங்கு இனம் மனிதனாக மாறிக்கொண்டு இருக்கிறது அல்லது மாறியிருக்கிறது, ஒரு இனம் மற்றொரு இன்மாக மாறுவது என்றால் அதுவேதான் தொடர்ந்து நடக்கும், அதை விடுத்து ஒருமுறை மட்டும் மாறிவிட்டு அதன் பிறகு எப்போதும் மாறாமல் இருக்கவே இருக்காது. உதாரணமா ஒரு புழுதான் பட்டு பூச்சியாக மாறுகிறது. ஆனால் அதுவேதான் தொடர்ந்து நடைபெற்று வருகிறதே தவிர ஒரு முறை புழு பட்டு பூச்சியாக மாறிவிட்டு அதன் பிறகு பட்டுபூச்சியிலிருந்தே பட்டு பூச்சி வருவதே இல்லை, பழைய மாதிரியே புழுதான் பட்டு பூச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது. அதுபோல் இப்போதும் குரங்கே மனிதனாக மாறிக்கொண்டு இருந்தால் மட்டுமே குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது உண்மையாக இருக்க முடியும். அதை தவிர்த்து குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று சொன்ன டார்வினும், அதையும் ந்ம்புவர்களும் முட்டாள்களே... ஒரு உயிரினத்தில் வேறு ஒன்று தோன்றினால் அது மரபு குறைபாடுள்ளதாகவே இருக்கும், உதரணமாக காகம் கருப்பாகவே இருக்கும் வெள்ளைகாகம் ஒன்று இருந்தால், மனிதனில் ஆண், பெண் என இல்லாமல் இருந்தால் மரபு குறைபாடுகள்தான் அது அதிசயமும் உன்னதுமானது இல்லை,  அது போல் குரங்கில் மரபு குறைபாடு ஏற்பட்டு ஒன்று தோன்றினால் அது குறைபாடுள்ள குரங்காகவே மட்டும் இருக்கும், மனிதனாக எப்படி மாறும். மாறவே மாறாது..
                சரி, இப்போ ஆதாம் ஏவாளுக்கு வருவோம்,  உலகில் எந்த இனமும் ஒரே ஒரு உயிர் மட்டுமே தோன்றியதில்லை, அப்படி தோன்றியதற்க்கான ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் இன்று வரை எட்டபடவும் இல்லை. இப்போது கூட ஆராய்ச்சிக்காக ஒரு கிருமியை உருவாக்கினால்கூட ஒரே கணத்தில் பல்லாயிரம் கிருமிகள்தான் தோன்றுகின்றன அதுவே பல்கி பெருகுகின்றனவே தவிர ஒன்று மட்டுமே உருவாகுவதில்லை, ஆனால் அதன்பின்  ஒன்றிலிருந்து ஒன்றோ பலவோ உருவாகின்றன.. இதுதான் உண்மையும் காலம் காலமாக நடந்து கொண்டு இருப்பதும், ஏன் பூமியே கூட ஒன்றே ஒன்று மட்டும் உருவாகவில்லை, பூமியை போல் பல நூற்றுக்கனக்கான கோள்கள் ஒரே கணத்தில் உருவாகியதுன்னுதான் ஆராய்ச்சிகளின் முடிவுகள் வருகின்றன, எனவே மனித இனமும் தோன்றும் போது கூட்டமாக பலநூறோ அல்லது பல்லாயிரமாகவோதான் தோன்றியிருக்க முடியும்,  அது இல்லாமல் முதலில் ஆதாம் தோன்றி அதன்பின்   ஏவாள் தோன்றியின்னு ஒவ்வொருவராக தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை...
               இந்து கூட்டத்தில் உள்ள வைனவம் மனிதன் எவ்வாறு தோன்றியிருக்க முடியும்ன்னு தசாவதாரமாக விளக்கியிருக்கிறது, அதை இன்றைய விஞ்ஞானமும் ஆராய்ச்சியும் ஒப்புக்கொண்டுள்ளது,   ஆகவே இந்து கூட்டமே எல்லாவற்றிலும் மேம்பட்டதாக இருக்கிறது.

 பரிணாம வளர்ச்சி என்பது வேறு அதை அடுத்த பதிவுகளில் யோசிப்போம்.....


                

கருத்துகள் இல்லை: