மார்கழி மாதத்து பனியின் மகத்துவம் தெரியுமா? உங்களுக்கு இது ஆன்மீக பதிவு அல்ல அனுபவ பதிவு, பலருக்கு இந்த பனியை கண்டாலே... பயம், சிலருக்கு முகம், உதடு, தோல்களில் எல்லாம் சொறசொறப்பாகவும் வெடிப்பும் வரும் அதனால் யாருக்கும் பனின்னாலே எரிச்சல்தான், ஆனால் முன்பெல்லாம் விவசாயிகள் தங்களின் நிலங்களில் விளைந்த சோளம் கேப்பை துவரை பாசிப்பயறு போன்ற தானியங்களில் இருந்தே தங்களுக்கு தேவையான விதைகளை சேகரித்து வைத்துக் கொள்வார்கள், அதை வண்டுகள் துளைக்காமல் பாதுகாக்க இரவு நேரங்களில் பனியில் போட்டு வைப்பார்கள் அதனால் வண்டுகள் அதை துளைப்பதில்லை , சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற கிழங்குகளை அவித்தால் மறுநாள் கெட்டுபோய் நூல்நூலாக வரும் ஆனால் இரவில் பனியில் வைத்துவிட்டு பல நாட்கள் வைத்து சாப்பிட்டாலும் கெட்டு போகாமல் இனிப்பு சுவை அதிகரித்தும் இருக்கும், அதேபோல் வெள்ளை சோளத்தை பச்சையாக( காயாமல்) நசுக்கி அதனுடன் வெல்லம் தேங்காய் துருவல் சேர்த்து அவித்து உண்பார்கள் அதுவும் ஒரே நாளில் கெட்டு போய்விடும் அதை பனியில் வைத்துவிட்டால் கெட்டு போகாது, உணவு பொருள்களையும் விதை பொருள்களையும் இயற்கையாக ஆரோக்கியமாக பாதுகாக்கும் சக்தி இந்த பனிக்கு உண்டு.. அதனால்தானோ என்னவோ பகவான் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி ன்னு சொல்லியிருக்காரோ என்னவோ ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக