தேர்



வீரபாண்டி தேர். இதை காண, கண்டு வணங்க கடந்த வாரம் லட்சகணக்கானோர் கூடி முண்டியடித்து வணங்கி மகிழ்ந்தனர். இன்றும் அதே அலங்காரத்துடன் தேர் நின்றிருக்க ஏறெடுத்து பார்க்கவும் ஆளில்லாமல்...  அனாதையாய் வாழ்க்கை தத்துவம் ஒன்றை சலனமில்லாமல் உரக்க சொல்லிக்கொண்டு... 

வெற்றி..

செயல் படாதவர்கள் ஜெயிப்பதற்க்கு வாய்ப்பே இல்லை...

வெற்றி

ஒருவர், நல்லவராக அறிவாளியாக  நேர்மையாக கடுமையாக உழைப்பராக இருந்தாலும் வென்றுவிட முடியாது...  நல்ல நிர்வாகியால் மட்டுமே வெற்றி பெறமுடியும்....


மனநல மருத்துவமனையிலிருந்து மூன்று நோயாளிகள் பேசிக் கொண்டனர்:


பாலு : டேய் இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம மூணு பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்..


வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை. வெளிய சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.


பாலு : அப்டியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்; 


சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது

சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது
பாலு&வேலு: ஏன்டா...? 


சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்.வெளிய சுவரே இல்ல,நாம ஏறி குதிக்கவும் முடியாது சுவர ஓட்டபோட்டும் தப்பிக்க முடியாது;


பாலு: சரி விடுடா முதல்ல அவங்க சுவர கட்டட்டும் நாம அப்புறமா தப்பிச்சு போலாம்....

கழிசடை

தன்னை கடைந்தெடுக்க தெரியாதவன்  கடையோனே...

முட்டாள்...

தன்னை தனக்குள்ளே  கொண்டாட தெரியாதவன் முட்டாள்...

தேவை

தன் தேவைக்கு தேவைப்படும் உறவுகள் தேவை தீர்ந்த பின் தேவையில்லாமல் போகின்றன...

கொண்டாட்டம்

பிறர் கொண்டாடும் மனிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நம்மை நாம் கொண்டாட்டமானவர்களாக வைத்திருப்பது அவசியம்...

உறவு

என்ன பேசுறோம், ஏது பேசுறோம்னு தெரியாம மணிக்கணக்கா பேசுற வரைதான்  உறவு உயிர்ப்போடு இருக்கும்.
பேசுறதுக்கு காரணம்னு எப்ப தேட ஆரமிக்கிறமோ,
அப்போ அன்பு விலாசம் இல்லாம தொலைந்து,
நம்மை விட்டு வெகுதூரம் சென்றிருக்கும்.
உறவு சிதைந்திருக்கும்..

கனவு

கனவில் தான் என்றாலும்
இத்தனை
அழுத்தமாகவா தருவது
விழித்தெழுந்ததும்
கண்ணாடி பார்க்கின்றேன்
காயங்கள் ஏதும்
உள்ளதா என..

பூ

பறித்ததை விட
அதிகம் வலித்திருக்கும்
பூக்களுக்கு..உன்
கூந்தலுக்கு வராமல்
குப்பைக்கு சென்றபோது..

அன்பு

உன்னை வேண்டாமென்று விலகிப் போகிறவரிடம் மீண்டும் போய் அன்பு காட்டுவதும்....
ஓட்டை வாளியில் தண்ணீரை நிரப்ப முயற்சி செய்வதும் ஒன்று தான்..