"'ஸ்தல வரலாறு"" ஸ்ரீமன் நாராயணின் இராம அவதாரத்தில் இராமபிரானின் பாத,நாமங்களை தவிர வேறு எதையும் விரும்பாது, ஸ்ரீ இராமபிரானின் "ராம ராம" திரு நாமத்தை கூறியோரையும்,இராம பாதத்தை வணங்கியோரையும் காத்து,துயர்துடைத்துவரும், இன்றும் புவியில் சிரஞ்சீவியாக விளங்கும், வாயு புத்திரன்
ஸ்ரீஅனுமன்:
ஸ்ரீஅனுமன் இராமபிரனுக்காக சீதா பிராட்டியை தேடிச்சென்ற போது வைகை நதி ஓரத்தில் இத் திருத்தலம் அமைவிடத்தின் வழியாக சென்றதாக கூறப்படுகிறது, எனவே அதை நினைவூட்டும் வகையில் மகான் ஸ்ரீஸ்ரீ வியாசராயரால் பல நுறு ஆண்டுகளுக்கு முன்னால், இந்த இடத்தில் ஸ்ரீ அனுமனின் திரு உருவம் பிரதிஷ்டை யப்பட்டதாக கருதப்படுகிறது ,

இங்கு அனுமன் இலங்கை நோக்கி செல்லும் நிலையில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அனுமனின் திருஉருவம் இங்கு, ஆகாய மார்க்கமாக செல்ல இருப்பது போல் வலது கரத்தை உயர்த்தியும், இடது கரத்தில் சௌகந்தி மலரும், வாலில் மணி கட்டியும் ,ஒரு திருவடியை முன் வைத்த நிலையில் தெற்கு நோக்கியும் திருக்கண்களில் அருளும் எடுத்த காரியத்தை நிறை வேற்றி தருவேன் என்ற உறுதி காட்டும் கம்பீரதோற்றத்துடன் வேறு எங்கும் காணயிலாத அபூர்வமான கோலத்தில் விளங்குகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக