அற்புதமான கட்டிடக்கலை பிரமாண்ட அம்சத்துடன் கம்பீரமாக நிற்க்கும் இந்த மாளிகையை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயனிகள் வருகின்றனர். ரம்மியமான புல்வெளி வளாகத்தையும், கூழாங்கல் நடைபாதையும் கொண்டு ஒரு முக்கியமான பொழுதுபோக்கு ஸ்தலமாகவும் காதலர்கள் சந்திக்குமிடமாகவும் பயணிகளை ஈர்க்கிறது,
உலகையே ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் வரலாற்றில் விக்டோரியா மகாராணியின் காலம் மிகவும் முக்கியமானது. அவர் ராணியாக இருந்த காலத்தில் ஆங்கில சாம்ராஜ்யத்தின் பரப்பு வெகுவாக விரிவடைந்தது. சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக ஏற்த்தாழ ஒரு நூற்றாண்டு காலம் உலக வல்லரசாக விளங்கியது.
இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் அவரது ஆட்சிக் காலம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனி கலைக்கப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்தியா கொண்டுவரப்பட்டது அப்போதுதான்.
அவர் உயிரோடு இருந்த காலத்தில் இந்தியாவின் தலைநகராக விளங்கிய கொல்கத்தாவில் சுமார் 64 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள விக்டோரியா மெமோரியல் ஹால் விக்டோரியா ராணியின் நினைவிடமாக மட்டும் இல்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் ஆட்சி செலுத்திய ஆதிக்கத்தின் அடையாள சின்னமாகவும் காட்சியளிக்கிறது. பல ஆங்கில கவர்னர், ஜெனரல்கள், ஆட்சியாளர்கள், அவர்களுக்கு சலாம் போட்ட இந்திய அடிவருடி மன்னர்களின்சிலைகள், படங்கள், ஓவியங்கள் நிறைதொரு அருங்காட்சியகமாகவும் திகழ்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக