தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் கோவில்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து 13 கிலோமீட்டரில் உள்ளது காயாமொழி என்னும் ஊர். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் குதிரைமொழி என்னும் ஊர் உள்ளது. அந்த ஊரருகில் கற்குவேல் அய்யனார்,  பூரணா, புஷ்கலா ஆகிய இரு தேவியரோடு கோவில் கொண்டுள்ளார்
 இங்கு மேலும் பேச்சியம்மன், பெரியாண்டவர், சுடலை மாடன், கருப்பன், பட்டவராயன், வன்னிய ராஜா, பலவேசக்காரன், முன்னடியான், பின்னடியான், தளவை நல்ல மாடசாமி, உதிர மாடன், ஐவர் ராஜா, பிரம்ம சக்தி, இசக்கியம்மன், சங்கிலி மாடன், பகைடைச் சாமி, சொல்கேளா வீரன், சிவனனைந்த பெருமாள், நாகரிக சிவனனைந்த பெருமாள், செருக்கன், சூர்யர் பீடம், இலாட சன்னியாசி,ஆளியப்பர், பொங்கத்த அய்யனார் முதலிய பரிவாரத் தெய்வங்களும் எழுந்தருளி மக்களுக்கு அருள்மழை பொழிந்து வருகின்றனர்.



செம்மணல் பாலைவனம்


கற்குவேல் அய்யனார் கோயிலின் பின்புறம்  அரணாக அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செம்மண் குன்றுகள் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சி.

கருத்துகள் இல்லை: