ஹல்டிகாடி Haldighati udaipur












































           மகாராணா பிரதாப்சிங் படைகளும், மொகலாய படைகளும் ஹல்டிகாடியில் இன்றைய ராஜஸ்தானில் கோகுண்ட நகரில் அருகில் சந்தித்தன. இரண்டு படைகளின் எண்ணிக்கைகள் வேறுபட்டு இருந்தாலும அதாவது, மொகலாயப் படைகள் அதிக அளவில் பிரதாப்பின் வீரர்களைக் காட்டிலும்  மூன்று மடங்கு அதிகமாக  இருந்தன. 

        ஹல்டிகாடி யுத்தம், ஒரு பெரும் வரலாற்று நிகழ்ச்சியாகும், அதுவும் நான்கு மணி நேரமே நீடித்த போர். இந்தக் குறுகிய நேரத்தில் பிரதாபின் வீரர்கள் பலதுணிகர சாகசங்களை களத்தில் நிகழ்த்திக் காட்டினார்கள். 


         மக்கள் மரபு ஆராய்ச்சியின்படி பிரதாப் தனியாக மான்சிங்கைத் தாக்கினார்: அவரது சேட்டக் குதிரை தனது முன்னங்காலை மான்சிங்கின் யானையின் மீது வைத்தது உடனே பிரதாப் தனது ஈட்டியை எறியும் சமயம் மான்சிங் திடுமெனக் குனிந்து தலைதாழ்த்தியதால், பாகன் குத்துபட்டு இறந்தார்.  


         மொகலாயப் படையின் எண்ணிக்கை அதிகம், அவர்களது பீரங்கிப்படையும் போர்க்களத்தில் மிஞ்சியது. பிரதாபின் படை தோல்விமுகம் கண்டதால், பிரதாபின் தளபதிகள போர்களத்தை விட்டு அவரை ஓடிவிட வற்புறுத்தினார்கள் (அப்பொழுது தான் அவரால் மீண்டும் போர் தொடுக்க இயலும் இது பழங்காலத்தில் ஒரு போர் நியதியாக கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது) புராணக் கதைகளின்படி, பிரதாப் தப்பிச் செல்வதை வசதிப்படுத்த, அவரது படைத்தலைவர்களில் ஒருவர், ஜ்ஹல வம்சம் சார்ந்தவர், பிரதாபின் மன்னரின் குறிப்பிடத்தக்க உடைகளை அணிந்து போர்க்களத்தில் அவர் போல் அவரது இடத்தில் அமர்ந்தார். விரைவில் அவர் போரில் இறந்தார். இதற்கிடையில், பிரதாப் மன்னர் தனது நம்பகமான குதிரை சேடக் மீது சவாரி செய்து மலை  குன்றுகளை நோக்கி தப்பிச் சென்றார். 


     ஆனால்  சேடக்  குதிரையின் இடது தொடையில் ஒரு மர்தானா மூலம் (யானைத் தும்பிக்கையில் மறைத்து வைத்துள்ள உறைவாள்) பிரதாப் மன்னர், மான்சிங்கைத் தாக்க முற்படும் போது மிக ஆபத்தான காயம் ஏற்பட்டது. அதனால் அதிக குருதி வெளிவரவே சேடக் குதிரை போர்களத்தை விட்டு அகன்று ஒரு சிற்றோடையைத் தாண்டும் பொழுது அதுவும் போர்க்களத்திலிருந்து  சில கிலோ மீட்டர் தூரத்தில் இறந்துவிட்டது.பிரதாப்பின் படைத்தலைவன் ஒருவர் அவர் போல உடையும் ஆயுதமும் தரித்து இடமாற்றம் செய்தது யுத்தத்தில் குழப்பங்களிடையே கண்டுகொள்ள முடியாமல் போனது, ஆனாலும் மொகலாயப் படையில் இரண்டு துருக்கிய வீரர்கள் மட்டும் உண்மையையைக் அறிந்துகொண்டனர். அவர்கள் குழுவில் அதை மற்றவர்களிடம் கூற முடியவில்லை, ஏனென்றால், மொழி பேசுவதில் உள்ள தடையே (பாரசீகம், மார்வாரி, அல்லது அரபி மொழிகள் மட்டுமே மொகலாயப் படையில் வழக்கத்தில் இருந்தன). ஆயினும் அவர்கள் பிரதாபைப் பிடிக்க நேரத்தை வீணாக்காமல் பின்தொடர்ந்தனர். அவர்கள் பிரதாபைப் பின்தொடர்ந்த தருணம், அவரது இளைய சகோதரர், ஷக்திசிங், அதாவது அவர் மொகலாயர் பக்கமாக இருந்து போரிடுபவர், (பிரதாப் முடிசூட்டு விழாவில் அவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அக்பர் பக்கம் கட்சி மாறியவர்) அந்த நேரம் தனது சொந்த சகோதரர் ஆபத்தில் சிக்கியுள்ளதை உணர்ந்தார். 


      பிரதாபின் படைத்தலைவர் அவருக்காக உயிர் துறந்ததை அவர் கண்டார். அவரால் உதவ முடியவில்லை எனினும் அவர் தனது சொந்த சகோதரர் ஆபத்தில் உள்ளதை அறிந்து உடனடியாகச் செயல்படத் தொடங்கினார். அவர் அந்த துருக்கியர்களுடன் ஒற்றை ஆளாகப் போரிட்டு, அவர்களைக் கொன்றார். இதற்கிடையில், சேடக் மரணமடைந்தது மற்றும் பிரதாப் தனது சகோதரர் ஷக்திசிங், அந்த இரு மொகலாய குதிரை வீரர்களைக் கொல்வதை நேரில் கண்டார். தனது அன்பிற்கினிய படைத்தலைவன் மற்றும் குதிரை இரண்டின் இழப்பால் துக்கமுற்ற பிரதாப், தனது சகோதரரைக் கண்ணீர் மல்கக் கட்டித் தழுவினார். சக்திசிங் கூவி அழுது தனது சகோதரரின் எதிரியாக மாறியதற்கு மன்னிப்பைக் கோரினார். பிரதாப் அவரை மன்னித்தருளினார் (பின்னாளில் அவருக்கு சித்தூர் அருகே ஒரு பெரிய பண்ணைத் தோட்டத்தை வழங்கினார்). சக்திசிங் அதன்பின் தனது குதிரையை சகோதரருக்கு அளித்து ஒரு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல தயவுடன் கேட்டுக்கொண்டார். ராஜஸ்தானி நாடோடிப்பாடலின்படி, ஒரு பாட்டு "ஒ நீலே கோடே ரே அஸ்வர்" ( ஒ நீலப்புரவி வீரனே!) சேடக்கிற்காக ஒரு கல்லறை மாடம் அதன் மரணமுற்ற அதே இடத்தில் அதன்நினைவாக அமைத்தது. யுத்தத்தின் விளைவு மொகலாய ராணுவத்தில் குறிப்பிடத்தக்க முறையில் பாதித்தது. எண்ணற்ற முகலாய போர் வீரர்கள் மாண்டனர். பிரதாப் பக்கம் நின்ற சுற்றுப்புற குன்றுகளில் வாழும் பில் பூர்வீக மக்கள் பலமாக அம்புகள் ஏவியதால் மொகலாயப் படையினர் அதிகம் பாதிப்படைந்தனர். அவர்களது பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், ஒரு பில் போர்வீரன் மேவாரில் உள்ள அரசகுடும்ப அணிகல வரிசையில் பிரதாபிற்கு அடுத்ததாக அமர்த்தப்பட்டார். 


         ஹல்டிகாட் யுத்தம் மொகலாயர்களிடம் ஒரு ஊடுவழி காண வாய்த்த முதல் யுத்தமாகும், 1527ஆம் ஆண்டில், இரண்டாம் கான்வா யுத்தமும் ராஜபுத்திரர்களுக்குச் சாதகமாக அமைந்தது, அந்த இரண்டாம் கான்வா யுத்தம் மஹாராணா பிரதாப்பின் பாட்டனார் ராணா சங்காவிற்கும், அக்பரின் பாட்டனார் பாபருக்கும் இடையே நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். பல ராஜபுத்திர குடும்பங்களில் இந்த யுத்தம் ஒரு குறிப்பிடத்தக்க முறையில் பெருமையாகக் கருதப்படுகிறது. 


     இந்த நிகழ்வுகளை விளக்கும் அருங்காட்சியகம், இங்கு பதினைந்து நிமிட திரைப்படமாகவும், ஒலியும், ஒளியும் காட்சிகளாகவும் விளக்கும்படி  இந்த நினைவிடம் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை: