என்ன நான் சொல்றது

   நாம்  ஆண் அதிகாரிகளையோ அல்லது சற்று வயது முதிர்ந்த ஆண்களையோ சந்திக்கும்போது மரியாதையாக அழைக்கும் பொருட்டு சார் என்றும் அய்யா (ஐயா) என்றும் அழைக்கிறோம், அதேபோல் பெண் அதிகாரிகளையும் சற்று வயது வயது முதிர்ந்த பெண்களை அம்மா என்றும் மேடம் என்றும் அழைக்கின்றோம். அதே போல் சின்ன குழந்தைகளையும் அம்மா அய்யா எனவும் அழைத்து கொஞ்கிறோம்,
      ஆனால்  ஆங்கில வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்பவர்கள் சார் (SIR)   என்பதற்கு '' Slave I Remain'' அதாவது நான் உங்களுடைய அடிமை  என்பதை நினைவூட்டுகிறேன் என்பதே என்றும்  ஒரு காலத்தில் அடிமைகள் சொன்ன வார்த்தை என்று விளக்கம் சொல்கிறார்கள்,
      தமிழர்கள் கலாச்சாரப்படி அய்யா (ஐயா) என்பது பெற்ற தகப்பனை மட்டுமே குறிக்கும் வார்த்தை, அதே போல் அம்மா என்பதும்  பெற்ற தாயை மட்டுமே குறிக்கும் வார்த்தை  எனவே அந்த வார்த்தையை மற்றவர்களுக்கு பயண்படுத்த முடியாது. எனவே மற்றவர்களை மரியாதையாக அழைப்பதற்கு ஆண் பெண் என எந்தவித பாகுபாடுமில்லாத புதுசா ஒரு வார்த்தை கண்டுபிடிக்கனும், அப்படி அழைப்பதையும் சட்டமாக்கனும் என்ன நான் சொல்றது, சரிதானா???

பெருமை

     ஒருவன் :  என்மகன் பத்தாம் வகுப்பில் பாஸாகி எனக்கு மிகப்பெரிய பெருமையை தேடித்தந்துவிட்டான்..
     மற்றவன் : அப்படியா மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள், மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேறிவிட்டானா?
    ஒருவன் : இல்லை நான் பத்தாம் வகுப்பில் 200 மார்க் வாங்கியிருந்தேன், என்மகன் 190 மார்க்குகள் வாங்கி என்னை பெறுமை படுத்திவிட்டான் என்றேன்...  

சும்மா இரு

                                           
                                                                                                                                                       ''சும்மா இரு'' அப்படின்னா எதையும் பேசாமல் இருப்பது       அல்லது எந்த ஒரு வேலையையும் செய்யாமல் இருப்பது எனவும், அல்லது மனதை அடக்குதல் அல்லது மனதை கடந்து நினைவுகள் ஏதும் இல்லாமல் இருப்பது, என கருதியும் சொல்லியும் வருகிறார்கள், ஆனால் உண்மையில் ''சும்மா'' இருப்பதுன்னா ''எந்த நேரமும் ஒன்றிலேயே செயல்படுவதுதான்''. உதாரணமா,  ஒரே விசயத்தை திரும்ப, திரும்ப சொல்பவரை அல்லது  ஒன்றையே திரும்ப திரும்ப செய்பவரை நாம் ''சும்மா சும்மா அதையே சொல்லிக்கிட்டு இருக்கிறாய் எனவும்'' ''அதையே சும்....மா.. நோண்டிக்கிட்டு'' (செய்துகிட்டு) இருக்க (இருக்கிறாய்) பேசாம கம்னு இருன்னுதான் சொல்கிறோம். அப்படினா என்ன அர்த்தம் ஒன்றிலேயே நிலைத்திருக்காதே என்றுதானே அர்த்தம். அப்ப சும்மா இருப்பதுன்னா என்னான்னு இப்போ புரிந்திருக்கும்னு நினைக்கிறேன், மாற்று கருத்து இருந்தால் மறுத்தளியுங்களேன்.