தலித் மக்களின் விரோதி

இப்போ புதுசு புதுசா சமுதாய சிந்தனையாளர்கள் என்கிற பெயரில் நிறைய சுயநலவாதிகள் தமிழகத்தில் களமிறங்கியுள்ளார்கள்.  அதில், ஒருவர் சினிமா இயக்குநர் பா.ரஞ்சித் இவரையும் சிலர் கொண்டாடிவருகிறார்கள்.

  இவர் தலித்துகளுக்காக 1) என்ன செய்திருக்கிறார்? 2) என்ன செய்து கொண்டு இருக்கிறார்? 3) என்ன செய்வார்? கொஞ்சம் யோசிப்போம்,
(இங்கு சபை நாகரீகம் கருதி மட்டுமே ரஞ்சித்தை "ர்" விகுதியோடு அழைக்கிறேன்)

 1) என்ன செய்திருக்கிறார்:
தலித்துகளுக்காவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காவும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் மலைசாதியினர்களுக்காகவும்,  மற்ற சாதியினருக்காவும்.. ஏன் உலகில் மற்றவர்களுக்காக இது நாள் வரை எதுவுமே செய்தது இல்லை..

2) என்ன செய்து கொண்டு இருக்கிறார் :
அவருடைய தொழிலான சினிமா துறையில் இயக்குநராக வேலை செய்துகொண்டு இருக்கிறார். அதன் மூலம் பணம் கோடிகோடியாய் சம்பாதித்து தன் நலத்தை,வளத்தை அதிகபடுத்தி கொண்டு இருக்கிறார்...!!!
சம்பாதிப்பதற்க்கு அவர் கைவசம் வைத்திருக்கும் விசயம்தான் தலித் விடுதலை முன்னேற்ற பேச்சுகள்..

அண்ணல்அம்பேத்கார்-க்கு மேலாக இனி ஒருவரும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செய்துவிட மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்,  சரி இப்போ இன்னுமொரு உண்மையை புரிந்து கொள்வோம்.

           ரஞ்சித்தின் பேச்சு "ஊருக்கு ஒரு சேரியும் தெருவுக்கு ஒரு சாதியும் இன்னும் இருக்கிறது" உண்மையிலேயே இந்த வார்த்தைகளை கேட்டவுடன் சமுதாய அக்கரை கொண்டவர்களுக்கும் தலித்துகளுக்கும் ஏன் எல்லோருக்குமே ஆமாம்,  உண்மைதானே இன்னும் ஏன் இந்த அவலம் என்றெல்லாம் தோன்றும் இது சகஜம்தான், ரஞ்சித் சொல்வது சரிதான் என்றெல்லாம் தோன்றினால் "நீங்கள்  ஒரு அறிவு கெட்ட முட்டாள்" என்று உங்களை நேரடியாகவே நான் குற்றம் சுமத்துகிறேன்.
காரணம்.. ???

        ஒரு சமுதாயம் தாழ்த்தப்பட்டு இருந்தால் அந்த சமுதாயம் உயர தேவையானவைகள் என்னவென்று அறிந்து அந்த தேவைகளை நிறைவேற்ற வேண்டும் அது மட்டுமே சரியான வழி என்பது உண்மை. அது இல்லாமல் சினிமாவில் சில வசனங்களை வைத்தால் பிரச்சனை சரியாகுமா? யோசியுங்கள்...

     இன்றைய சூழலில் என்ன என்ன தேவைன்னு பார்ப்போம்,
   "கல்வி" "பொருளாதாரம்" மட்டுமே, இப்போ  யார் யாரையும்  சாதிப்பேர் சொல்லியோ தரம் தாழ்த்தியோ பேச இயலாதபடியும், கல்வி வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களுக்கு  இடஒதுக்கீடும் பாதுகாப்பும் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான சட்ட வல்லுனர் குழு அனைத்துதர மக்களுடன் பாதுகாப்பாக வாழும்படி சட்டதிட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், எனவே சட்டத்தேவைகள் ஏதும் இல்லை..!!

   பிறகு, என்னதான் தேவை? "மற்ற சமுதாய மக்களும் அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் ஒன்று மட்டுமே".. அதற்கு என்ன செய்ய வேண்டும்? அந்த சமுதாயமக்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். அவ்வளவுதான் அது ஒன்றை செய்தால் மட்டுமே போதும்.. எனக்கு தெரிந்த வரையில் ஒரு 25% தலித்துகள் நல்ல வசதியான பொருளாதாரத்திலேயே உள்ளார்கள். அவர்கள் தங்களில் வசதி குறைவானவர்களுக்கு உதவுவதே இல்லை, என்பதையும் இந்த நேரத்தில் சொல்லி கொள்கிறேன்,காரணம் அவர்களின் தரம் குறைந்துவிடும் என அவர்களே நினைப்பதுதான்.

       பொருளாதாரத்தில், நல்ல பதவியில் உள்ள தலித்துகளின் திருமண வாழ்க்கையை பார்த்தீர்கள் என்றால் தெரியும், அதில் மிக பெரும்பாலானோர் சாதி மாறி திருமணம் செய்தவர்களாகவே இருப்பார்கள், இதில் மறைந்திருக்கும் உண்மையே இதுதான்.

  பொருளாதார முன்னேற்றம் அடையாத தலித்துகளுக்கு மட்டுமே இன்னும் சாதி பாகுபாடு இருக்கிறது என்பதுதான் உண்மை,  இதை ஒரு உதாரணத்துடன் சொன்னால் புரியும் என்று நினைக்கிறேன். இப்போ யாராவது பேருந்து நிலையங்களில் தள்ளு வண்டிகளில் அவித்த கடலை, மக்கா சோளம், கப்பகிழங்கு, கடலைபொறி விற்பவர்களை தரகுறைவாக பேசுகிறார்களா? அல்லது அவர்களிடம்  வாங்கி தின்ன மறுக்கிறோமா? இல்லையே ...!!! ஏன் தெரியுமா? அவர்கள் தொழில்செய்வதால்தான். இந்த தொழில் செய்பவர்களில் சுமார் 75% வியாபாரிகள் தலித்துகள்தான் என்பது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை.  இந்த மாதிரியான சிறுசிறு உதவிகள் செய்தால்கூட போதும் உழைக்கும் ம்க்கள் குறுகிய காலத்தில் முன்னேறிவிடுவார்கள், தீண்டாமை இல்லாமல் போகும், இதையெல்லாம் விட்டுபுட்டு  மற்றவரோடு எதிர்த்து போராடுன்னு சொல்லி உணர்வுகளை தூண்டி மற்றவர்களின் எதிர்ப்புக்கு தலித்துகள் ஆளாகி சாதி வேற்றுமையை பாதுகாத்துவருகிறார்.

   ### சரி, இவர்களுக்காக பா.ரஞ்சித் என்ன செய்திருக்க வேண்டும்?  ###

மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை இந்த மக்களுக்கு கிடைக்கும்படி செய்து பொருளாதாரத்தில் முன்னேறும்படியாக தொழில்களை பயிற்றுவித்து முன்னேற்றி இருக்க  வேண்டும்,  அல்லது தன்னிடம் இருக்கும் கோடிக்கனக்கான பணத்தை அவரது சமுதாய மக்களுக்கு பொருளாதார முன்னேற்றமடைய கொடுத்து உதவியிருக்க வேண்டும்...!!! எதையாவது செய்தாரா? இல்லையே.. ஏன் இல்லை? தான் சார்ந்த சமுதாயத்தின் மீது அக்கரையில்லை, ஆனால் அவர்களின் சூழலை தனக்கு சாதகமாக பயண்படுத்தி தன் நிலைமையை மட்டும் உயர்த்தி கொள்வார், பின் வரும் நாட்களில் இவரையும் தலித் ம்க்கள் தங்களின் தலைவனாக கொண்டாட வேண்டும் என்பது மட்டுமே இவரது விருப்பம், அன்புக்குரிய தலித் மக்களே புரிந்து கொள்ளுங்கள், இந்த துரோகியை....

3) என்ன செய்வார்:
பொது மக்களுக்க்காகவும் தனது சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்காககூட எதுவுமே செய்யமாட்டார்.. ஆனால் தனது வாரிசுகளுக்கும் தனது ரத்த உறவுகளுக்கு மட்டும் பிற சாதிகளில் திருமண வாழ்க்கையை அமைத்து கொடுத்து தன் நிலையை உயர்த்தி கொள்வார் என்பது மட்டுமே உண்மை..




  

கருத்துகள் இல்லை: