# தற்கொலை மரணங்கள் #
சமீபகாலமாக நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பிரிவினைவாதிகளின் தாக்கம் சற்று அதிகமாகி கொண்டே இருக்கிறது.. அதே வேளையில் அதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கூட்டமும் சற்று அதிகரித்தே வருகிறது.
அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பது என்பதே ஒரு கொள்கையாக குறுகிய மனநிலை வெளிப்பாடாக, மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக செயல் புரிந்து ஒரு கூட்டம் ஆதாயமடைந்து வருகிறது.
மனிதனுக்கு தேவையான எல்லாவித வளர்ச்சிக்கான நடைமுறைகளிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது, அதை கடந்து வளர்வதுதான் வளர்ச்சி.. மனித இனம் தோன்றியதிலிருந்து எல்லாவிதமான வளர்ச்சியிலும் இருக்கும் குறைகளை களையவே மறுபடியும் மறுபடியும் தொடர்ந்து வளர்ச்சியடைகிறான். அதுதான் உண்மையான வளர்ச்சி.
தற்போது மாற்று சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்கிற பெயரில் தொலைகாட்சியினால், சமூக ஊடங்கங்களினால் சிலர் பிரபலப்படுத்தப்பட்டு சமூகத்தின் மீது எந்தவித அக்கரையுமில்லாமல் அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக தேசத்திற்க்கு எதிரான சக்திகளோடு கைகோர்த்து கொண்டு செயல்பட்டு மக்களை உணர்ச்சி வயப்படுத்தி தூண்டி சில சிறுசிறு தோல்விகளைகூட தாங்க இயலாதவர்களாக மக்களை மாற்றி வருகிறார்கள்,
இதன் விளைவே தற்கொலை மரணங்கள், எந்த ஒரு மிருகமும் தற்கொலை செய்து கொள்வதில்லை ஆனால் மனித இனம் மட்டுமே மிகவும் கீழ்தரமான மனநிலைமையினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளவே இயலாது ஒன்று.
இது மாதிரியான தற்கொலை மரணங்கள் சமீப காலமாக கேடுகெட்ட அரசியல்வாதிகளாலும், நடிகர்களாலும், பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்ட ஊடங்களினாலும், அவர்களின் பொய்யான அனுதாபத்தினாலும், தியாகிகளாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாதிரியான தற்கொலைகளுக்கு நேரில் போய் ஆறுதல் சொல்வது, பண உதவி செய்வது, இந்த மாதிரியான குற்றங்களை அதிகரிக்க செய்யும், அதை ஊக்குவிக்கவும் செய்யும் என்பதையும் உணர வேண்டும், இதையே ஒரு ஆதாயமாக கொண்டு ஒரு சிலர் தங்களின் பிள்ளைகளை மன நெருக்கடிக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டவும் வாய்ப்பு உள்ளது, எனப்து மறுக்க முடியாத உண்மை.. எதிர்க்க வேண்டியது அரசு கொண்டு வரும் திட்டங்களை அல்ல அதில் குற்றம் இருப்பின் மர்ற்றம் செய்ய வேண்டியது அவசியம்தான் நான் மறுக்கவில்லை, ஆனால் ஒட்டு மொத்தமாக எந்த விதமான ஆதாரமும் இல்லாமல், மக்களின் உணர்ச்சி வசப்படுதல் ஒன்றையே மூலதனமாக கொண்டு எதிர்ப்பது என்பது ஏற்க்க கூடியதாக இல்லை.
சரி, இதற்க்கு தீர்வுதான் என்ன ? அரசு ஒரு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரும்முன் அதை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்துவது அவசியம். (ஆனால், இதில் சில கருத்துக்களுக்கு விதிவிலக்கு அவசியம் அதாவது 500, 1000 ரூபாய்கள் செல்லாது என அரசு அறிவித்தது போன்ற செயல்களை கலந்து பேச இயலாது)
இதில் மக்களின் மனநிலை முற்றிலுமாக மாற்றப்பட வேண்டியது அவசியமான ஒன்று. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் இந்த மாதிரியான தற்கொலையை கண்டு கொள்ளகூடாது.. உண்மையாகவே நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டவர்கள் என்றால் மக்களின் மனதை வலுப்படுத்தும் செயலை செய்யுங்கள்.. இல்லையெனில் அனுதாபம் காட்டுபவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுபவர்களுக்கான சட்டம் பாயவேண்டும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக