இந்த கோயில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் என்ற ஊரில் பேருந்து நிலையத்தின் மிக அருகில் அமைந்துள்ளது நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலகட்டத்தில் புகழ் பெற்ற ராணி மங்கம்மாவின், உத்தமபாளையம் பகுதி படை பொறுப்பை ஏற்று நடத்தி வந்தவர் கொண்ட ம நாயக்கர்
இவர் காளகஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது மிகுத்த பக்தி கொண்டவர்.
அவர் வயதான காரணத்தால் காளகஸ்தி செல்ல முடியாமல் அவதிபட்டார் . இவரின்
நிலையை அறிந்த காளாத்தீஸ்வரர், அவர் இருக்குமிடத்திலேயே கோவில் அமைத்து
வழிபடலாம் என்றும், இங்கு வழிபட்டால், காளகஸ்திக்கு சென்று வழிபட்ட பலன்
கிடைக்கும் என்றும் அருளினார். உடனே அவர் இப்பகுதியை ஆட்சி செய்த
பாளையக்காரர் பூஜையா நாயக்கரிடம் தெரிவித்தார். அதன் பிறகு பாளையக்காரர் ஒரு கோவில் அமைத்துக் கொடுத்தார். இந்தக் கோயில் தென் காளகஸ்தி என்று அழைக்கப்படுகிறது.
சிவனுக்கு சிலை செய்த மன்னர் அம்மனுக்கு சிலை அமைக்க பல முறை முயன்று தோல்வியுற்றார் . இதனால் அம்பிகை இல்லாத கோவிலாக சில காலம் இருந்தது . பிறகு இங்கு கொண்டம நாயக்கரின் கனவில் தோன்றிய சிவன் முல்லை ஆற்றில் அம்பிகை வருவாள் என்றார் , அதன்படி ஆற்றில் ஒரு கூடை மிதந்தது வந்தது அதனுள் அம்மனின் சிலையை கண்ட ஊர் மக்கள் மகிழ்ந்து அம்மனுக்கு ஞானாம்பிகை என்று பெயர் சூட்டினர். இவ்வம்மன் இங்கு புகழ் பெற்றவர் பலருக்கு ஞானாம்பிகை கோவில் என்றால் தான் தெரியும் என்ற அளவுக்கு புகழ் பெற்றவர் . அம்மனுக்கு பக்கத்தில் முருகன் காட்சி அளிப்பது இங்கு சிறப்பு , தாய் சேய் நலன் விரும்புவோர் இங்கு வந்து வழிபட்டால் உறவு நன்கு அமையும் .
இந்த தெப்பக்குளம் மிக புனிதமாக கருதப்படுகிறது ஆனால் பராமரிப்பு இல்லாததால் மிகவும் அசுத்தமடைந்துள்ளது.பாதுகாப்பு சுற்று சுவர் முறையாக இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக