தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகி ஓடி வரும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணை 1955 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ( சென்னை மாகாண ) திரு கே. காம்ராஜர் அவர்களால் துவங்கப்பட்டு 1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணை 111அடி உயரம் உடையது. இந்த அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 71அடி நீரைத் தேக்கி சேமித்து வைக்க முடியும்.
வைகை அணையின் இருபுறமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல வசதியாக அழகிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணையின் முன்புறமுள்ள சிறிய பாலத்தின் வழியே இரு புறமும் உள்ள பூங்காக்களுக்குச் செல்ல முடியும். இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு பூங்காவில் தண்ணீர் ஆறு போல் மேலிருந்து கீழ் வரை வரும்படி செயற்கை
அமைப்பும் செய்யப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் சில மீட்டர் தூரம் வரை பாய்ந்து
இறுதியில் சின்ன அணை போன்ற அமைப்பின் வழியாக வெளிவந்து ஒரு அரக்கன் வாயின்
வழியே வெளியேறும்படி செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கை வடிவமைப்பில்
ஞாயிற்றுக்கிழமை மற்றும் முக்கிய விடுமுறை நாட்களில் மட்டும் தண்ணீர்
திறந்த விடப்படுகிறது.
இந்த அணை பெருந்தலைவர் கே காமராஜர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது
இரவு நேரத்தில் காட்டப்படும் இசை நடன மின்விளக்கு நீர் ஊற்றுக்கள்
1 கருத்து:
நல்லமுறையில் ஆட்சி செய்த பெருந்தலைவர் புகழ் ஓங்குக!
கருத்துரையிடுக