அழகர் கோவில் மற்றும் மலையை சுற்றி இருந்த ஊர் அழகாபுரி என்ற பெயரைக்கொண்டு இருந்தது. இந்த அழகர் கோவில் அழகாபுரி கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. கோட்டையின் மிஞ்சிய பாகங்களை இன்றும் கோவிலைச்சுற்றிக் காணலாம். இங்கே மூலவராக இருக்கும் பெருமாளின் மற்றொரு பெயர் பரமஸ்வாமி என்னும் சிவனின் பெயர். சைவ, வைணவ மத ஒற்றுமைக்காக இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிரசாதமாக அழகர் கோவில் புகழ் தோசை தருகிறார்கள். இங்கே இருக்கும் விநாயகரின் பெயர் தும்பிக்கை ஆழ்வார். இங்கே ஆண்டாளின் சன்னதிகூட உண்டு. ஆண்டாள் இங்கே பெரியாழ்வாருடன் வந்ததாக வரலாறு உண்டு. கள்ளழகர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. வைணவத் திருத் தலங்களிலேயே ராஜகோபுரத்தில் தங்கக் கலசம் கொண்ட ஒரே கோவில். கோபுரம் முழுவதும் அழகான சிற்பங்களைக் கொண்டுள்ளது.
இந்த கோவில் எக்காலத்தில் தோன்றியது என்ற சொல்ல முடியாத பழமை உடையது இக்கோவில். மிகவும் பழைய தமிழ் நூல்களிலும், வடமொழிப் புராணங்களிலும் கூட இதன் பெருமை சொல்லப்பட்டு இருக்கிறது. இங்கே உள்ள மூர்த்தி, தலம்,தீர்த்தம், ஆகியவை பற்றிய வராக புராணம், பிரம்மாண்டமான புராணம், வாமன புராணம், முதலியவற்றிலும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றை தொகுத்து ஒன்று சேர்த்து "விருஷ பாத்திரி மகாத்மியம்" என்ற ஸ்தல புராணத்தில் இத்தலத்தின் புராணப் பெருமைகளை விரிவாக எடுத்து சொல்லப்பட்டுள்ளது. இங்குக் கோயில் கொண்டுள்ள இறைவன் அழகர் என்று சொல்லபடுகிறார். இவரே வடமொழியில் சுந்தர ராஜன் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு பதினெட்டாம்படி கருப்பசாமி மிகவும் பிரபலமானவர்
கட்டிமுடிக்கப்படாத ராஜகோபுரம் ''மொட்டை கோபுரம்''
மிகவும் பிரபலமான மதுரை அழகர் கோவில் தோசை பிரசாதம் இது சாப்பிடுவதற்கு தோசை மாதிரியாகவும் இல்லை, பனியாரத்தை தோசை அளவிற்கு செய்தது போல், மந்தமாக வெளியில் சற்று பூரி போல் மொறுமொறுப்பாகவும் உள்ளே சற்று மிருதுவாகவும், தோசை சட்டியில் சற்று அதிகமாக எண்ணெய் விட்டு சுட்டது போல் இருக்கிறது, மிளகு ருசி சற்று தூக்கலாக சாப்பிடுவதற்கு நன்றாக உள்ளது. கோவிலுக்கு சென்று வரும் போது அவசியம் தோசை பிரசாதம் வாங்கி சாப்பிடுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக