பழமுதிர்சோலை முருகன்


பழமுதிர்சோலை மதுரையிலிருந்து சுமார் 20  கி மி தொலைவில் உள்ள முருகன் திருத்தலம் ஆகும்.   "வர்ஷபத்ரி" மற்றும் " இடபகிரி" என்பதும் இதன் வேறு பெயர்கள்.  குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கேற்ப இத்திருத்தலம் அழகிய குன்றின் மேல் அமைத்துள்ளது.  இது முருகனின் அறுபடை வீடுகளுள் ஆறாவது படை வீடாகும். அவ்வையிடம் முருகப்பெருமான் சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? எனக்கேட்டு திருவிளையாடல் புரிந்த திருத்தலம். முருகன் வயோதிகனாக தோன்றி நக்கீரனுக்கு காட்சியளித்த திருத்தலம்.

பழமரங்கள் நிறைந்துள்ள பகுதியாக இருந்ததால் பழமுதிர்சோலை எனவும், இல்லை, முருகன் பழத்தை உதிர்த்ததால், பழம்+உதிர் சோலை , பழமுதிர்சோலை   எனலாயிற்று என்கிறார்கள்
பழமுதிர்சோலை முருகன் கோவிலில் ஆரம்ப காலத்தில்  வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது.முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார். இடப்புறம் உற்சவர் வீற்றிருக்கிறார், சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்குமாம். ஆனால், இத்திருதலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில்தான் பழுக்குமாம் 


கருத்துகள் இல்லை: