வன்னி மரம், பிரம்மா


            இக் கோயிலில் வன்னிமரம் ஸ்தல விருட்சமாக உள்ளது இதில் பிரம்மா உள்ளதாக நம்பப்படுகிறது, என்வே இது மும்மூர்த்தி தளமாக விளங்குகிறது, ஆனால் இது பற்றி கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாருக்கும் சரி வர தெரியவில்லை, மேலும் பிரம்மா காசிவிஸ்வநாதர் சன்னதி வெளிபிரகாரத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்
                                          வன்னிமரத்தின் சிறப்புகள் 

இது முள்ளுள்ள இலையுதிர் மரம். மிகச் சிறிய கூட்டிலைகளைக் கொண்டது. சதைப்பற்றுடைய உருளைவடிவக் காய்களை உடையது. வடதமிழ் நாட்டில் கரிசல் நிலங்களில் தானே வளர்கிறது. தோட்டங்களில் ஆங்காங்கே முளைக்கும் இவ்வன்னி மரங்களைப் பொதுவாக யாரும் வெட்டுவதில்லை. அந்த அளவுக்குப் புனிதமாக கருதப்படும் மரமாகும். மரம் முழுமையும் மருத்துவக் குணமுடையது.
இம்மரம் காய்ச்சல் போக்குதல், சளியகற்றுதல், நாடிநடையையும் உடல் வெப்பத்தையும் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது. வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும். வன்னிக்காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விகிதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விகிதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும். 

கருத்துகள் இல்லை: