இக்கோயிலில் ஆனி மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தில், இறைவனின் பெருமையை உணர்த்தும் விதமாக "திருமங்கையாழ்வார்''
திருடிய வைபவம் நடத்துகின்றனர். அன்று திருமங்கையாழ்வார் திருடுவது போல
பாவனை செய்து, காவலர்கள் அவரை பிடித்துச் சென்று சுவாமி முன்பு
நிறுத்துகின்றனர். அவ்வேளையில் அவர் திருடிய பொருட்களின் பட்டியல்
வாசிக்கப்படும், இதை "பட்டோலை வாசித்தல்'' என்கிறார்கள். அதன்பின் பெருமாள் தேவியுடன் திருமங்கையாழ்வாருக்கு காட்சி தருவார். மேலும் வைகுண்ட ஏகாதசியன்று ஒருநாள் மட்டும் சுவாமிக்கு மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர் .பெருமாளை மீசையுடன் தரிசனம் செய்வது புது அனுபவமாகும்
2 கருத்துகள்:
நன்றியுடன்-----பழனிச்சாமி!!!
நன்றி
கருத்துரையிடுக