ஹயக்ரீவர்

குதிரை முகமும், மனித  உடலும் கொண்ட உருவான ஹயக்ரீவரை,  விஷ்ணுவின்    வடிவாகக்  கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வி தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இவருக்கு பரிமுகன் என்ற பெயரும் உண்டு. இந்த அவதாரத்தை  தசாவதாரத்திற்குள் சேர்ப்பதில்லை,

   மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்து வேதங்களை பறித்துக் கொண்டு,  பாதாள உலகத்திற்குச் சென்று விட்டனர்.  அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான  விஷ்ணுவை  வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பின்னர் ஆவணி மாதம்  பவுர்ணமி நாளில் கற்றுக்கொடுத்தார் என புராணங்களில் சொல்லப்படுகிறது, எனவேதான் கல்வி கற்றுக்கொடுக்கும் கடவுளாக ஹயக்ரீவர் வணங்கப்படுகிறார்,

கருத்துகள் இல்லை: