ஆன்மீகம் முடமானதா?

      ஆன்மீகம் முடமானதா? கடவுளை அடைய மற்றவர்களின் (குரு) துணை உதவி தேவைதானா? ஆம் என்றால் ஆன்மீகம் முடமானதேயாகுமல்லவா? முடம் நமக்கு தேவையில்லை தானே? இல்லை, இது ஒரு வித்தை ப்யிற்றுவிக்கப்பட வேண்டிய ஒன்று, என்றால், இல்லாத ஒன்றை நமக்கு கற்பிப்பதாகதானே அர்த்தமாகிறது வாழ்க்கைக்கு அத்தியாவசியமில்லாத ஒன்றுதானே என்றாகிறது? ஆன்மீகம் முடமானது இல்லை என்றால், நமது பிறப்பின் நோக்கம் கடவுளை அடைவதுதான் என்றால், நமக்கு எப்படி பசிக்கிறதோ? எப்படி பாலுணர்வு ஏற்ப்படுகிறதோ? அதே போன்று, பசியும் பாலுணர்வும் தீரும் வரையில், நம் மனமும் நம் புலன்களும் நம்மை பாடாய்படுத்துகிறதே!! அதை அடைந்தபின் தானே நமக்கு அமைதி கிடைக்கிறது, அதே போன்று கடவுள் தேவையும்  தானாகவே தோன்றி அதை நாம் அடையும்படி நம்மை பாடாய்படுத்த வேண்டாமா? அப்படி  இல்லையே!! யாருக்கும் அப்படி ஏற்பட்டதாகவும் தெரியவில்லையே!! கடவுளை தேட நமக்கு மற்றவர்களால் பயிற்றுவிக்கப்பட்டே நாம் கடவுளை தேடிக் கொண்டிருக்கிறோமே? இது சரிதானா? உண்மையிலேயே நமது பிறப்பு கடவுளை அடைவதுதான் நோக்கமா? அப்படி என்றால், நாம் பிறப்பதற்க்கு முன்பே நாம் வாழும் சூழலை உருவாக்கி வைத்தவன்,  கடவுளை அடைவதற்க்கான ஒரு ஏற்பாட்டையும் நமக்காக செய்து வைத்திருக்க மாட்டானா?  ஐயம் தீர யாராவது விளக்குங்களேன்.... .

கருத்துகள் இல்லை: