உலகில் நாம் அனைவருமே கொலைகாரர்கள்தான் நேற்றைய நம்மை இன்றைய நாம் அழித்து விட்டிருக்கிறோம், நம்முடைய சிறுவயது உருவம் வேறு, இளமையாக இருக்கும் போது இருக்கும் உருவம் வேறு, மத்திய வயதில் உள்ள உருவம் வேறு, வயோதிகத்தில் உள்ள உருவம் வேறு, இப்படி நாம் நம்முடைய முந்தைய உருவத்தை அழித்து விடுகிறோம், இதைதான் உடல் அழியகூடியது ''ஆன்மா'' அழிவில்லாதது என்கிறதா? ஆன்மீகம், அப்படியானால் மரணம் வரை ஆன்மா உண்டு, மரணத்திற்கு பின் ஒன்றுமே இல்லைதானே? இல்லை, உண்மையிலேயே நாம் மரணமடைந்த பின் நமது ஆன்மா, நமது உடலை விட்டு வேறு இடத்துக்கு பயணம் செய்கிறது என்கிறதா? அப்படியானால் ஆன்மா எந்த இடத்திற்க்கு பயணம் செய்கிறது? அது எவ்வாறு பயணம் செய்கிறது? அறிந்தவர்கள் எனக்கு புரிய விளக்குவீர்களா? ஆன்மீகவாதிகளே!! தங்களின் எண்ணங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக