பாண்டிய மன்னனின் மகளான அன்னை மீனாட்சிக்கு பிறவியிலேயே மூன்று மார்புகள் இருந்ததாகவும், ஒரு போரின் போது அவள் 'சிவனை' சந்தித்ததாகவும் அப்பொழுது அவளுக்கு மூன்றாம் மார்பு மறைந்ததாகவும், மறைந்ததும் அவள் சிவனை(இறையை) அடைந்ததாகவும், புராண கதை உள்ளது. இது அனைவரும் அறிந்ததே, சித்தர் வழிபாட்டில் உள்ளவர்கள், ஆன்மீக புராணங்கள், உடலுக்குள் நடக்கும், இருக்கும், நிகழ்வுகளைதான், உதாரணமாக ராமாயாணம், மகாபாரதம், வைணவ, சைவ புராணங்களில் பரி பாஷையாக சொல்லப்பட்டு இருக்கிறதுன்னு சொல்லி விளக்கங்களும் சொல்லி வருகிறார்கள் அது உண்மையாகவும் இருக்கிறது. அதே போல் இந்த புராணத்தையும் ஒப்பிட்டால் நாம் அனைவருமே மீனாட்சிதான் அதாவது ஆன்மாவுக்கு பெயர் மீனாட்சி, நமக்கு எல்லோருக்கும் பரிபாஷையாக சொல்லப்பட்ட மூன்றாம் மார்பு உள்ளது, அதுதான் நாம் இறைவனை அடைய தடையாக உள்ளது, அது எது? நாம் அதை எவ்வாறு அழிப்பது? எப்படி சிவனை (இறையை ) சந்திப்பது, சிவனை சந்தித்தால்தானே நாம் அவனை அடையமுடியும், எனவே நாம் எதை எதனால் அழித்து சிவனை அடைவது, ஆன்மீகவாதிகளே விளக்குவீர்களா ? ''நான்'' அறிய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக