பயம்

                                               
 
  யாராவது நம்மை பார்த்து என்ன பயமா? பயந்துட்டீங்களா? அப்படின்னு கேட்டா நாம், பயமா? எனக்கா? அப்படின்னா என்னா? அப்படின்னு நாம் தைரியமானவர்களாக இருந்தாலும் கூட நம்மை தைரியமானவர்களாக காட்டிக் கொண்டால் நமக்கு  குழந்தை மனசுன்னு அர்த்தம் ( குழந்தை பயமறியாது) அதாவது, நாம் இன்னும் அனுபவபடவில்லை, பக்குவபடவில்லைன்னு அர்த்தம், இன்னும் மூளை வளர்ச்சியடையவில்லைன்னு அர்த்தம். நாம் இன்னும் விபரம் அறியாதவர்களாகவே இருக்கிறோம்ன்னு அர்த்தம். நாம் இன்னும் முட்டாளாகவே இருக்கிறோம்ன்னு அர்த்தம்.
      உலகில்  பயமில்லாத மனிதர்கள் யாராவது உண்டா? இல்லவே இல்லை, மனிதனுக்கு இயற்கையிலேயே பய உணர்ச்சி உண்டு, உலகையே மிரட்டி அடக்கியாண்ட கொடுங்கோலர்களுக்கும், மாபெரும் குற்றங்கள் கொலைகள் செய்த கொலையாளிகளுக்கும், மக்களை நல் வழிபடுத்த வந்த தேவ தூதர்களுக்கும், குருமார்களுக்கும்,  தேசம் காக்க அனைத்தையும் தியாகம் செய்த தியாகிகளுக்கும், உறவுகளை நேசிப்பவர்களுக்கும், மிரண்டு போனவர்களுக்கும் 'பய' உணர்ச்சி இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொருவரும்  நாம் விரும்பாதபடி எதுவும் நடந்து விடக்கூடாதுன்னு பயப்படுகிறார்கள், அது நடந்து விடாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக செய்யும் செயல்களும் நகர்வுகளுமே அனைத்தும். அவர்களின் பயம் எதுவோ அதற்க்கு தக்கவாறு நல்ல செயல்களாகவும், கெட்ட செயல்களாகவும் வெளிப்படுகிறன. எனவே நல்ல செயல்கள் நடைபெற நாமும் பயப்படுவோம், இது வரை பயப்படாதவர்கள் யாராவது இருக்கீங்களா? 

உருவ வழிபாடு

                                                       
 உருவ வழிபாடு சரியா? தவறா? 
        ஆன்மீகத்தின் ஆரம்ப காலத்தில் உள்ளவர்களுக்கு (வயது எத்தனை ஆனாலும்) சிலை வழிபாடு தவறில்லைதான், எப்படி? நமக்கு பசியின் போது எச்சில் ஊறுவதில்லை,  ஆனால் உணவை கண்டபோதும் உண்டபோதும் அதை பற்றிய நினைவுகளின் போதும் மட்டுமே ஆர்வம் மிகும் எச்சில் ஊறும், அதேபோல் ஆணோ, பெண்ணோ ஒருவர் எதிர்பாலினத்தவர் ஒருவரை பார்க்கும்போதோ அல்லது பார்த்தவர்களை நினைக்கும் போதோ ஆர்வம் மிகும், நாம் எதையும் பார்த்ததே இல்லையெனில் நமக்கு அதை தெரிவதற்க்கு வாய்ப்பில்லாமல் போகும், அதை பற்றிய ஞானமும் நமக்கு இல்லாமல் போகும். எதையும் காணாது நாம் கடவுளை உணர முடியாது விலங்குகளாய் இருப்போம், எனவே கடவுளை நமக்கு அறிமுகம் செய்யவும் ஒரு உருவகம் தேவைபடுகிறது. அப்பொழுதுதான் நமக்கு கடவுள் பற்றிய ஞானம் ஏற்ப்படும். அதனால்தான் இந்த சிலைவழிபாடு ஆனால் ஆன்மிகத்தில் முழுமையடைய அதையும் (சிலை வழிபாட்டையும்) கடந்து செல்வது அவசியமாகிறது. 

யாகம்

      'யாகம்'னா என்னா? அதனால் பலன் உண்டா? யாகம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?

            யாகம் என்ற சொல்லுக்கு ''உயரிய அர்ப்பணிப்பு'' என்று அர்த்தம், அதாவது இறைவன் படைத்தவைகளை இறைவனுக்கே படைப்பது, அதனால் பலனடைவது, உதாரணமா அம்மா சமைத்த உணவை குழந்தை எடுத்து அம்மாவுக்கே ஊட்டி விடுவது போன்றது, குழந்தை தனக்கு ஊட்டினால் உண்மையிலேயே அம்மா மிகவும் ஆனந்தம் கொள்வாள், குழந்தையை வாரியனைத்து கொஞ்சுவாள் குழந்தை மீது அதிக பாசம் கொண்டு அதனை நன்கு கவணித்துக் கொள்வாள், அதை போல இறைவனும் யாகம் செய்பவர்களை கனிவுடன் கவணித்து காத்தருள்வான் என்பதுதான் யாகத்தின் நோக்கம். சரி இப்போ யாகம் எப்படி செய்கிறார்கள், நெருப்பை வளர்த்து அதனுள் பால், பழங்கள், தேங்காய், இளநீர், தேன், நெய், சர்க்கரை பொங்கல், மருத்துவ குணமுடைய மரகுச்சிகள், ஆடைகள் என பலவற்றையும் அக்கினிக்குள் போட்டு எரிக்கிறார்கள் அவ்வளவும் விரையமாகிறது,

     யார்தான்  பழக்கப்படுத்தினார்களோ நல்ல பொருட்களை நாசப்படுத்துவதற்க்கு , நன்றாக கவணித்தீர்களானால் புரியும், ஒரு அளவான யாகத்தில் செய்வதே நடப்பான ஒரு திருமணத்திற்க்கு உரிய பொருட்களாகும், பொருட்களை வைத்து சாமி கும்பிட்டுவிட்டு யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கே கொடுத்து சாப்பிட செய்திருக்கலாம், யாகத்தில் போட்ட பொருட்கள் வீணாக போயிருக்காது, ஏழ்மையானவர்களுக்கு ஆடைகளை உடுத்தச் சொல்லி கொடுத்திருக்கலாம், ஆனால் நடப்பது என்ன அவ்வளவு பொருட்களும் உதவாமல் போகிறதே, இது சாதாரணமா பார்ப்பவர்களுக்கே புரியும், அதாவது அம்மா சமைத்த உணவை, சிறிய குழந்தையாக இருந்தாலும் சிந்தி வீணாக்கினால் கண்டிப்பாக அம்மாவின் கோபத்துடன் கூடிய அதட்டலும் அடியும் அவசியம் கிடைக்கதானே செய்யும் நீங்களே இதையும் பார்த்திருப்பீர்கள்தானே, அனுபவித்தும் இருப்பீர்கள், அப்படியிருக்க இறைவன், உயிர்கள் அனுபவித்து, பயண்படுத்த படைத்தவைகளை மணிதன் வீணாக்கினால் கண்டிப்பாக அதட்டலும் அடியும் கிடைக்கத்தானே செய்யும். நன்கு யோசித்து பாருங்கள் இறைவன் படைத்தவைகளை படைப்பின் நோக்கம் அறிந்து பயண்படுத்தி பலன் பெறுங்கள், இறைவனின் அருள் பெறுங்கள். 

ஆத்திகம்

   கோவில்களுக்கு திருவிழாக்களுக்கு நன்கொடை கொடுப்பது பற்றி:

பணம் எத்தனையோ வழிகளில் விரையமாகின்றது, அதிலே இதுவும் ஒரு விதம் என்றெண்ணிக் கொள்ள வேண்டியது தான் நாம்.


"உடலுண்டு குடலுண்டு மனையுண்டு என்றாயிரம் கதை கட்டி

நீவீர் தரும் தானமதை சிலையது ஏற்கும் என்று சொல்லி

நீர் இட்ட பிச்சைதனில் கோவில் வளர்ப்பார்

கோவதன் இல் அது அகமே என்றுணராது

ஆத்திகம் எனும் பெயரில் மதம்தனைப் பரப்பிடுவோர்

நீர் இட்ட பிச்சை தனில் கடவுள் வாழ்கையில்

பிச்சையிட்ட நீரே கடவுள் அதற்க்கு என்றாவீர் அன்றோ?

சிந்திப்பீர், செயல் படுவீர், ஆத்திகம் பிழைக்கட்டும்"