உருவ வழிபாடு சரியா? தவறா?
ஆன்மீகத்தின் ஆரம்ப காலத்தில் உள்ளவர்களுக்கு (வயது எத்தனை ஆனாலும்) சிலை வழிபாடு தவறில்லைதான், எப்படி? நமக்கு பசியின் போது எச்சில் ஊறுவதில்லை, ஆனால் உணவை கண்டபோதும் உண்டபோதும் அதை பற்றிய நினைவுகளின் போதும் மட்டுமே ஆர்வம் மிகும் எச்சில் ஊறும், அதேபோல் ஆணோ, பெண்ணோ ஒருவர் எதிர்பாலினத்தவர் ஒருவரை பார்க்கும்போதோ அல்லது பார்த்தவர்களை நினைக்கும் போதோ ஆர்வம் மிகும், நாம் எதையும் பார்த்ததே இல்லையெனில் நமக்கு அதை தெரிவதற்க்கு வாய்ப்பில்லாமல் போகும், அதை பற்றிய ஞானமும் நமக்கு இல்லாமல் போகும். எதையும் காணாது நாம் கடவுளை உணர முடியாது விலங்குகளாய் இருப்போம், எனவே கடவுளை நமக்கு அறிமுகம் செய்யவும் ஒரு உருவகம் தேவைபடுகிறது. அப்பொழுதுதான் நமக்கு கடவுள் பற்றிய ஞானம் ஏற்ப்படும். அதனால்தான் இந்த சிலைவழிபாடு ஆனால் ஆன்மிகத்தில் முழுமையடைய அதையும் (சிலை வழிபாட்டையும்) கடந்து செல்வது அவசியமாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக