பயம்

                                               
 
  யாராவது நம்மை பார்த்து என்ன பயமா? பயந்துட்டீங்களா? அப்படின்னு கேட்டா நாம், பயமா? எனக்கா? அப்படின்னா என்னா? அப்படின்னு நாம் தைரியமானவர்களாக இருந்தாலும் கூட நம்மை தைரியமானவர்களாக காட்டிக் கொண்டால் நமக்கு  குழந்தை மனசுன்னு அர்த்தம் ( குழந்தை பயமறியாது) அதாவது, நாம் இன்னும் அனுபவபடவில்லை, பக்குவபடவில்லைன்னு அர்த்தம், இன்னும் மூளை வளர்ச்சியடையவில்லைன்னு அர்த்தம். நாம் இன்னும் விபரம் அறியாதவர்களாகவே இருக்கிறோம்ன்னு அர்த்தம். நாம் இன்னும் முட்டாளாகவே இருக்கிறோம்ன்னு அர்த்தம்.
      உலகில்  பயமில்லாத மனிதர்கள் யாராவது உண்டா? இல்லவே இல்லை, மனிதனுக்கு இயற்கையிலேயே பய உணர்ச்சி உண்டு, உலகையே மிரட்டி அடக்கியாண்ட கொடுங்கோலர்களுக்கும், மாபெரும் குற்றங்கள் கொலைகள் செய்த கொலையாளிகளுக்கும், மக்களை நல் வழிபடுத்த வந்த தேவ தூதர்களுக்கும், குருமார்களுக்கும்,  தேசம் காக்க அனைத்தையும் தியாகம் செய்த தியாகிகளுக்கும், உறவுகளை நேசிப்பவர்களுக்கும், மிரண்டு போனவர்களுக்கும் 'பய' உணர்ச்சி இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொருவரும்  நாம் விரும்பாதபடி எதுவும் நடந்து விடக்கூடாதுன்னு பயப்படுகிறார்கள், அது நடந்து விடாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக செய்யும் செயல்களும் நகர்வுகளுமே அனைத்தும். அவர்களின் பயம் எதுவோ அதற்க்கு தக்கவாறு நல்ல செயல்களாகவும், கெட்ட செயல்களாகவும் வெளிப்படுகிறன. எனவே நல்ல செயல்கள் நடைபெற நாமும் பயப்படுவோம், இது வரை பயப்படாதவர்கள் யாராவது இருக்கீங்களா? 

கருத்துகள் இல்லை: