சிட்டு குருவி



சிறிது நேரத்துக்கு முன்பு ஒருவர் என்னோடு பேசிகொண்டு இருந்தார், இப்போதான்2.ஓபடம் பார்த்திருப்பார் போல சிட்டு குருவி ஒன்றை பாக்க முடியலை இந்த போன்  சிக்னல்டவரினால்தான் இல்லாம போயிருச்சுன்னு இயக்குநர் ஷங்கர் ரஜினி போலவே ரெம்பவே ஆதங்கபட்டார்... 
அவரிடம் சொன்னேன், இப்போ இல்லை கரண்டு நம்ம பயண்பாட்டுக்கு முழுசா வருவதற்கு முன்பே சிட்டுகுருவியெல்லாம் அழிய துவங்கியிருச்சு ஆனா இப்போதான் எல்லோரும் சும்மா வெத்து கூப்பாடு போடுறீங்கன்னு சொன்னேன், அவ்ர் எனனை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு எல்லோருமே இப்போத்தான் ஆராய்ந்து கண்டு பிடிச்சிருக்காங்க, நீங்க என்ன இப்படி சொல்றீங்கன்னு, சற்று எகத்தாளமாகவே கேட்பது போல் பேசினார்...


நான் கேட்டேன், உங்க வீட்ல குருவி கூட கட்டுனா கலைப்பீங்களான்னு... அவர் அது குடும்பத்துக்கு ஆகாது... எங்க வீட்ல எங்க தாத்தா காலத்துல இருந்தே வீட்ல குருவி கூடு கட்ட வாய்ப்பாக நாங்களே ஏதாவது செய்து வைப்போம். அதுனால எங்க வீட்ல எப்பவுமே ரெண்டு குருவி கூடாவது இருக்கும் ஆனா இப்போ நாங்க காரைவீடு கட்டின பிறகுதான் இல்லைன்னு சொன்னார்....

இதுதான் உண்மை சிட்டுகுருவி பல காலத்துக்கு முன்பே அழிய துவங்கியிருக்கு அதுனாலதான், சிட்டு குருவி இனத்தை காப்பாற்ற நம் முன்னோர்கள், சிட்டு குருவி வீட்ல கூடு கட்டினா நல்லதுன்னு சொல்லி நம்மை சிட்டுகுருவி இனத்தை காப்பாற்றும்படி செய்தார்கள்... முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல அவர்களுக்கு தெரியாதா சிட்டுகுருவிக்கும் நம்ம குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு... நமக்கு இப்படி சொன்னாத்தான் நாம் ஒழுங்கா கடைபிடிப்போம் தெரிஞ்சு சொல்லி வச்சிருங்காங்க....

சும்மா எதுனாலும் அறிவியல் வளர்ச்சியையே முழுசும் குற்றம் சொல்லிகிட்டு.... கொஞ்சம் கூட யோசிக்கிறதே இல்லை...

கருத்துகள் இல்லை: