பகுத்தறிவுவாதி என்பவன் முட்டாள்



பகுத்தறிவுவாதி என்பவன் முட்டாள்... 

பதிவு கொஞ்சம் பெரியதா போச்சு படிச்சு பாத்துட்டு கருத்தை சொல்லுங்கள்
இப்போ நான் பகுத்தறிவுவாதி போராளின்னு சொல்லி கொள்வது ஃபேஷனா போச்சு...
சரி பகுத்தறிவு அப்படின்னா என்ன? ஒரு விசயத்தில் நன்மை தீமை அல்லது உயர்வு தாழ்வு போன்ற அதன் தன்மைகளை சீர்தூக்கி எல்லாவற்றையும் பகுத்து ஆராய்ந்து தெளியும் அறிவுதான் பகுத்தறிவு... அதில் தெளிந்தவற்றில் எது சரியானதோ அதை பின் பற்றுகிறவர்தான் பகுத்தறிவுவாதி..
சரி, இப்போதைய பகுத்தறிவுவாதிகள் தங்களின் கொள்கை எதுவென்று சொல்கிறார்கள என்ன செய்கிறார்கள்ன்னு கொஞ்சம் யோசிப்போம்:
1) நாத்திகம் அல்லது இறைமறுப்பு.
2) சமுதாய வேற்றுமைகளை களைவது அதாவது ஜாதிகள் இல்லாமல் செய்வது,
3) பெண்களின் சமத்துவம்
இந்த மாதிரியான கொள்கைகளை முதலில் யாருடைய சிந்தனையிலிருந்து வந்தது?
தன்னை பகுத்தறிவுவாதியாக நினைத்து கொண்டு இருப்பவர்கள் சொல்கிறார்கள்.. ஈவெ ராமசாமிதான் பகுத்தறிவின் முன்னோடி நாங்கெல்லாம் பெரியாரிஸ்ட்டுகள் என்றும் சொல்லிகொண்டு இருக்கிறார்கள். அவரால்தான் நாம் இந்த நிலைமைக்காவது வந்திருக்கிறோம் என்கிறார்கள். இது உண்மையானதுதானா? சரிதானா?
ஆனால், உண்மையிலேயே இந்த சித்தாந்தத்தின் முன்னோடிகள் யார்? ஈவெராவுக்கு முன் பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உண்மையான ஆன்மீகவாதிகளான சிவவாக்கியரும், அய்யா வைகுண்டர், நாராயணகுரு போன்ற மனித மாமேதைகள்தான் இன்று தெய்வங்களாகவும் கடவுளின் அவதாரமாகவும் மக்களால் வணங்கப்பட்டு வருகிறவர்கள்தான். மக்களுக்கான அத்தனை விழிப்புணர்வுகளையும் சிந்தனைகளையும் தூண்டியவர்கள் எல்லாம் உண்மையான ஆன்மீகவாதிகளே..
வரலாறு தெரிந்த எந்த பெரியாரிஸ்ட்டாவது மறுக்க முடியுமா?
அப்படியானால், சிலர் ஈவெராவை கொண்டாடுகிறார்களே ஏன்? அவர் என்னதான் செய்தார்?
1) நாத்திகம் அல்லது இறை மறுப்பு :
இறைமறுப்புன்னா என்ன? அதாவது உலகில் அனேக மதங்கள் உள்ளன. அவைகள் யாவுமே கடவுள்ன்னு ஒருவர் உண்டு, அவரே நம்மை எல்லாம் வழி நடத்துகிறார் என்று சொல்கின்றன். கடவுளின் பெயர்கள் பலவாக சொன்னாலும் இறைவன் ஒருவனே என்பதை ஒத்து கொள்கின்றன. அப்படியிருக்க, இறைமறுப்பு நாத்திகம் என்கிற பெயரில் இந்துமதத்தவரை மட்டுமே குற்றம் சாட்டும் வேலையை செய்தார். இந்துமத எதிர்ப்பை மட்டுமே வளர்த்தார். இறைமறுப்பு என்றால் என்ன? செய்திருக்க வேண்டும் இறைவன் இல்லை என்பவர் இறைவன் இல்லவே இல்லை எல்லா மதங்களும் சொல்வது பொய் என்று சொல்லியிருக்க வேண்டுமல்லாவா? அதுதானே சரியானதாக இருக்கும்.. நியாமானதும் கூட.. அதை விடுத்து இந்துமதத்தை மட்டுமே குற்றம்சாட்ட காரணம் என்ன?
மேலும், இறைவன் அல்லது கடவுளை கற்ப்பித்தவன் முட்டாள் என்கிறார்...
ஒருவருக்கு ஒன்று தெரியவில்லை அல்லது அது பற்றி அவர் அறியவில்லை என்றால் அது இல்லையா? அல்லது அவருக்கு புரியவில்லையா? இதில் எது? சரி.. அது இருக்கலாம்தானே.. அது இருக்கும் வாய்ப்பு இருக்கத்தானே செய்கிறது. உதாரணமா, நியூட்ரான்கள் ஒரு சதுர சென்டி மீட்டருக்குள் சுமார் ஒரு லட்சம் கோடி ஒரு வினாடியில் கடந்து சொல்வதாக சொல்கிறார்கள். இது நம்பும்படியாக இருக்கிறதா? என்றால் என் போன்றவர்களுக்கு நம்பும்படியாக இல்லை.. ஆனால் அதை விஞ்ஞானிகள் உண்மை என்றும் அதன் சக்திகளை பயண்படுத்த முடியும்ன்னும் சொல்கிறார்கள் பயண்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால், நமக்கு அதை நாம் காண் முடியவில்லை அப்போ நாம் இதை நம்புவதா? அல்லது இல்லை என்று சொல்வதா? நம்ப மனமில்லையானால் அதை எப்படி காண்பது.. அது எப்படி? இருக்கிறது என்று அறிந்தவர்களை கேட்டு நீங்கள் அதை எப்படி? பார்க்கிறீர்கள் அது எப்படி இருக்கிறதுன்னு அவர்களை கேட்டு தெரிந்து கொள்வதுதானே சரி, அதை விட்டுவிட்டு அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பது சரியானதா? முட்டாள்தனமானதா?
அதுபோல்தான் ஈவேராவின் செயல், கடவுளை, நம்மை போன்ற ஒரு உருவமாக கற்பனை செய்து கொண்டு அது ஏதோ மேல்மாடியில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டும், அவர்களாகவே கடவுள் பற்றி ஒரு முடிவை வைத்துக்கொண்டு அது போல் இல்லை எனவே கடவுள் இல்லையென கூறி கொண்டு மறுப்பு தெரிவிப்பது சிறுபிள்ளைதனமானதுதானே? சொல்லுங்கள்.
ஐந்தறிவு மிருகங்கள் எல்லாம் கடவுள் தேடிக்கொண்டா இருக்கின்றன. (அதுகளும் எனக்கு தெரியாத வழியில் தேடிக் கொண்டு கூட இருக்கலாம்) எனவே, நாம் நியுட்ரான்கள் தேவைன்னு நினைச்சா பயன்படுத்தலாம், அல்லது தேவையில்லைன்னு நினைச்சா விட்டுவிடலாம். அது போலத்தான் கடவுளும் கடவுளின் சக்தியும். தேவைபடுவோர் பயண்படுத்தட்டும் தேவையில்லை என்போர்விட்டுவிடலாம்.
## "உருவ வழிபாட்டை, மூட நம்பிக்கைகளை மறுத்தவர்களும் எதிர்த்தவர்களும் ஆன்மீகவாதிகளே" ##
2) சமுதாய வேற்றுமைகளை களைவது அதாவது ஜாதிகள் இல்லாமல் செய்வது :
பல ஆயிரம் ஆண்டுகளாக ஜாதி வேற்றுமைகள் இருக்கத்தான் செய்கிறது. மறுக்கவே முடியாது. அதனால்தான் எல்லோரிடமும் அன்பாக இருங்கள் என எல்லா மதங்களுமே சொல்லி கொடுத்து வந்தாலும் எல்லா மதங்களிலுமே புல்லுருவிகளால் ஜாதி வேற்றுமைகள் பிரிவுகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன, இன்றும் கடைபிடிக்கப்பட்டே வருகின்றன என்பதையும் மறுப்பதற்க்கில்லை,
ஆனால், ஜாதிகளை ஒழிப்பதாக வேற்றுமைகளை களைவதாக சொல்லி ஈவேரா என்ன? செய்தார்.. உயர்ந்த ஜாதியாக தங்களை தாங்களே கூறிக்கொண்டு இருந்தவர்களை எதிர்க்கும் மனோபாவத்தையும் எதிரான உணர்ச்சிகளை மட்டுமே தூண்டினார்.. அதன் விளைவு இன்று FC யான அய்யர்கள், பிறாமனர்கள், உயர்ந்தவர்கள்ன்னு சொல்லி கொண்டு இருந்தவர்களுக்குள்ளும் ஒருவருக்கு ஒருவர் தாங்கள்தான் உயர்ந்தவர்கள்ன்னு சொல்லி கொள்ளும் மனோபாவமும், BC களான நாடார், செட்டியார், தேவர், நாயுடு எனச்சொல்லி கொள்ளும் பல ஜாதியினர்களில் ஒருவருக்கு ஒருவர் தாங்கள்தான் உயர்ந்தவர்கள்ன்னு சொல்லி கொள்ளும் மனோபவமும், SC என அழைக்கப்படும் ஆதி திராவிடர்கள், பறையர், பள்ளர் போன்ற சமுதாய மக்களும் ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் உயர்ந்தவர் தாழ்தவர்கள்ன்னு சொல்லி கொண்டு சண்டையிட்டு கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது, BC, SC, ST பிரிவு மக்கள் FC மக்களுக்கு இணையானவர்கள் சமமானவர்கள் என்பது போய் தங்களுகுள்ளாகவே ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி கொண்டார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. ஜாதி வேற்றுமைகள் ஒழியாமல் இன்று அதிகமான உக்கிரத்தோடு மற்றவர்களை கொலை செய்யும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.
ஆனால் ஆன்மீகம்தான் சுடுகாட்டு தோட்டி சிவனையும், குறத்தியான வள்ளியையும் கடவுள்ன்னு சொன்னது. எல்லா ஜாதியினரையும் ஆழ்வார்களாகவும், நாயண்மார்களாகவும் ஏற்றுக்கொண்டு கடவுளுக்கு இணையாக வணங்கி வருகிறது. ஜாதியினால் உயர்வு தாழ்வு இல்லை என்று சொல்கிறது.
ஆனால் ஆன்மீகத்தில் இந்த பகுத்தறிவுவாதிகள் போல் செயல்பட்ட சிலரால்தான் சில குளறுபடிகள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்
சமத்துவத்தை ஏற்ப்படுத்த என்ன? செய்திருக்க வேண்டும். ஆன்மீகவாதிகள் செய்தது போல் ஒரு ஜாதியினர், மற்றொரு ஜாதியினர் மீது அன்பு மரியாதை கொள்ள போதித்திருக்க வேண்டும்.
3) பெண்களின் சமத்துவம் :
பெண் இல்லாத சமூகம் சாத்தியமே இல்லை, ஆணுக்கு துணையாக அவன் வாழ்வில் சரிபாதியாகவும் பல இடங்களில் அவளே முதன்மையானவளாகவும் இருக்கும் இந்த வாழ்க்கை அமைப்பில் பெண் மதிக்கப்பட வேண்டியது மிகமிக அவசியம் என்பதை உணர்த்ததான் இந்து மதம் ஆணுக்கு நிகராக பெண்ணையும் வைத்து வணங்கி வருகிறது, மனைவி தவிர்த்து மற்ற பெண்களை தாயாகவும் சகோதரியாகவும் நினைக்கும் மனோபாவத்தையும் அன்பையும் சொல்லிகொடுத்து மக்களை நல்வழிப்படுத்தும் வேலையை செய்கிறது. இதற்க்கு மாறாக நடப்பவர்களை இறைவன் தண்டிப்பான் எனவும் சொல்லி நேர்மையானவர்களாக நீடித்து இருக்கும் வேலையை நமது ஆன்மீக முன்னோர்களால் வாழ்க்கைமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சரி.. இப்போ ஈவேரா என்ன செய்தார் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம் அதாவது தனது வளர்ப்பு மகளையே கூட எந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம், கணவன் வேறு ஒரு பெண்களுடன் தொடர்பு வைத்தால் அவனோடு போட்டியிட்டு நீயும் பல ஆண்களோடு தொடர்புகொள், அவனுக்கு நீயும் சரிநிகர் என்று சொல்லியும் நடந்தும் காட்டினார், இதுதான் ஆணாதிக்கத்தை ஒழிக்கும் வ்ழி என்று கூறினார், எவ்விததிலும் சரியானது இல்லை, தவறான பாதையில் செல்பவர்களை திருத்துவதுதான், சரியானதாக இருக்க முடியுமே தவிர ஏட்டிக்கு போட்டி மனநிலை சரியானதும் இல்லை, அதன் பின்விளைவுகளும் மிக மோசமானதே..
சரி, என்ன செய்திருக்க வேண்டும், யாரும் எந்த ஜாதியிலும் திருமணம் செய்யலாம், இதை மறுப்பதற்க்கில்லை சரியானதுதான் ஏற்று கொள்ள வேண்டிய ஒன்றுதான், ஆனால் நடப்பது என்ன? யாரும் எந்த ஜாதியிலும் திருமணம் செய்யலாம்- ஆனால் அடுத்த ஜாதியில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் அவர்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், அவர்கள் சம்மதம் தேவையில்லை என்கிற குதற்கமான மனோபாவம். அடுத்த ஜாதி பெண்களையே திருமணம் செய்ய வேண்டும் என்கிற மணோபாவமும், வளர்ப்பும், அப்போதுதான் சமத்துவம் உண்டாகும் என்கிற மடத்தனமான நினைப்பும்..
இந்த சமுதாயத்திற்க்கு உயர்வுதாழ்வு இல்லாத சமுதாய அமைப்பு வேண்டுமா? இல்லை அடுத்த ஜாதிபெண் வேண்டுமா? இதில் எது சரியானது? ஜாதியின் பெயரால் ஏற்றதாழ்வு தீண்டாமை இல்லாத வாழ்க்கைமுறைதானே. ஆனால் பகுத்தறிவு வக்கிரபுத்தி விரும்புவதென்ன.. அடுத்த சாதிபெண்களைதான். அதனால்தான் ஈவேராவும், அவருடன் கூடவே வாழ்ந்த அவருடைய தம்பிகளாக இருந்தவர்களும் அவரின் கொள்கைகளை தூக்கி கொண்டு திரிபவர்களிலும் ஒழுக்கமான நல்லவர்கள் இல்லை என்பது கண்கூடான விசயம்...
சரி இந்த சமுதாயம் ஏற்ற தாழ்வு இல்லாமல் இருக்க என்ன செய்திருக்க வேண்டும்? அல்லது என்ன செய்ய வேண்டும்.? ஒரு ஜாதியினர் மற்ற ஜாதியினரை மதிக்க வேண்டும். அந்த பழக்கத்தைதான் சமுதாயத்துக்கு சொல்லி கொடுத்து இருக்க வேண்டும். இதை ஆன்மீகம்தான் சொல்கிறது. ஆனால் எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கைகள் இருக்கவே செய்கின்றன என்பது உண்மைதான். அது நீக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபாடு இல்லை. ஆனால் இந்த பொய்யான போலியான் பகுத்தறிவுவாதிகளின் பாதை சரியானது இல்லை...

கருத்துகள் இல்லை: