மரசெக்கு எண்ணெய்


                     இப்போ எல்லோரும் எண்ணெயில் கலப்படம் வருது, அதனால் செக்கு எண்ணெய் வாங்குறது நல்லதுன்னு சொன்னாங்கன்னு நானும் யார் நல்லதாக தயார் செய்வார்கள்ன்னு தேடி தேடி செக்கு எண்ணெய்ன்னு போர்டு வச்சிருக்கவுங்க கிட்ட வாங்கி நல்லாயிருக்கா நல்லாயிருக்கான்னு சரிபார்த்து கொண்டு இருந்தேன்,  அப்போ ஒவ்வொருவரிடம் ஒரு மாதிரியாகவே இருந்தது,

     அப்போ எங்க வீட்டுக்கு பக்கத்துலேயே ஒரு செக்கு எண்ணெய் கடை வந்திருச்சு.. நான் மகிழ்ச்சியாகிவிட்டேன் அந்த கடைகாரர் எண்ணெய்யுடன் தேங்காய் பருப்பு வியாபாரமும் செய்து வருகிறார்... கடையில் நிறைய உலர் தேங்காய் பருப்புகளை குவித்து வைத்து மூடைமூடையாக விற்றுவந்தார். நான் வீட்டிலுள்ள எண்ணெய் தீர்ந்தவுடன் இனி இவரிடம் எண்ணெய் வாங்க வேண்டுமென முடிவெடுத்து அந்த கடைவழியே போதும் வரும் போதும் கடையை பார்த்து கொண்டே போய் வந்தேன் வீட்டில் தேங்காஎண்ணெய் தீர்ந்து போச்சுன்னு சொன்னாங்க உடனே நான் ஆகா இன்று நல்லதாக ஒரு தேங்கா எண்ணெய் வாங்க போகிறோம்ன்னு மகிழ்ச்சியாக வாங்க போனேன்.

அவரிடம்... அண்ணே... தேங்கா எண்ணெய் எவ்வளவு?  லிட்டர்ன்னு கேட்டேன்
அவர்... அண்ணே லிட்டர் ரூபாய் 260 /- உங்களுக்கு எவ்வளவு வேணும்ன்னார்
நான் : ஒரு அரைலிட்டர் தாங்க..
அவர் : அப்போ 130 ரூபாய் தாங்கன்னு வாங்கி கொண்டு
       ஒரு அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் அளந்து ஊற்றாமல் அப்படியே பாட்டிலில் நிறைத்து கொடுத்தார்...

    நான் பாட்டிலை வாங்கி எண்ணெய் கலரை பார்த்தேன் கலர் சற்று மஞ்சளாக இருப்பதாக எனக்கு தோன்றியது, வாசனை பார்த்தேன், எனக்கு வாசனையாகவும் தெரியவில்லை....

அவர் :  அண்ணே நம்மதான் தேங்காயை ஆட்டி எண்ணெய் எடுக்கிறோம் எண்ணெய் தரமா வாசனையா  நல்லாயிருக்கும்ன்னார்...

      அப்படியே நானும் சரின்னு சொல்லி வாங்கிட்டு வந்துவிட்டேன்.
பின்பு தேங்கா எண்ணெய்யை பயன்படுத்த இரண்டு நாட்களாகிவிட்டது...
எண்ணெயை பயண்படுத்தும் போது முகர்ந்து பார்த்தேன்... தேங்கா எண்ணெய்க்கு உள்ள  வாசனை எதுவுமே இல்லை, கையில் ஊற்றி தேய்த்தால் பிசு பிசுன்னு இருந்துச்சு... இது தேங்காயெண்னெய் போல் இல்லையேன்னு தோனுச்சு... ( ஒரு வேளை அவர் தேங்காயெண்ணெயுடன் விளக்கெண்ணையை கல்ந்திருக்கலாம் ) உடனே நான் கடைக்கு திருப்பி கொடுக்க கிளம்பினேன், வீட்டில் தடுத்து விட்டு வேறு எண்ணெய் வாங்கி கொள்ளலாம், இந்த எண்ணெயை விளக்கேற்ற பயண்படுத்தி கொள்வோம், நீங்க போனா சண்டை போடுவீங்க வேண்டாம்ன்னு சொல்லி தடுத்துவிட்டார்கள்...

முறையற்று தொழில் செய்தால் பணக்காரனாக வேண்டுமானால் ஆகலாம், ஆனால் மகிழ்வான மனுசனாக நிச்சயமாக வாழ முடியாது..

 எனக்கு அந்த கடைபக்கம் போகும் போதெல்லாம் சற்று மன உளைச்சளாகவே இருந்தது, இந்த கடைகாரன் நம்மளை ஏமாற்றி விட்டானேன்னு மனசுல இருந்துகிட்டே இருந்துச்சு.... எனக்கு எந்த கடையிலும் தரமான எண்ணெய் இருப்பதாகவே தெரியவில்லை...

எனக்கு இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்து, எண்ணெய்மில் வைத்து கடலை எண்னெய் தயார் செய்யும் உறவினரிடம் கலந்து பேசினேன்.

நான் : உண்மையிலேயே செக்கு எண்ணெய் ரூபாய் 250 க்கு மேல் 350 வரை விற்கிறார்களே அது சரியானதுதானா?

அதற்கு அவர் சொன்னார்...

  நாங்க கடலை எண்ணெய் தயார் செய்கிறோம் அது பற்றி சொல்கிறேன்னு சொல்லிவிட்டு சொன்னார்.
 ஒரு கிலோ  கடலை எண்ணெய் தயாரிக்க இரண்டரைகிலோ கடலை பருப்பு தேவை... இன்றைக்கு எண்ணெய் ஆட்டுகிற பருப்பு கிலோ சுமார் 60 ரூபாய் அப்படீன்னா ஒரு கிலோ எண்ணெய் த்யாரிக்க 2.5 *60= 150 ரூபாய் ஆகுது ஆட்டு கூலி கிலோவுக்கு 10 ரூபாய் வைத்து கொண்டால் கூட எண்ணெய் விலை ஒரு கிலோ 160 ஆகிறது,  பொதுவாக எள். கடலை, தேங்காய்  ஒரு கிலோவில் 40% எண்ணெயும், 60 % புண்ணாக்கும் கிடைக்கும், அதுனால அதில் .1.5 கிலோ புண்ணாக்கு கிடைக்கும். புண்ணாக்கு ஒரு கிலோ  40 ரூபாய் இருக்கிறது, அதில் 1.5 கிலோவிற்க்கு 60 ரூபாய் ஆகிறது, அதை எண்ணெய் விலையில் கழித்து கொண்டால், எண்ணெய் ஒரு கிலோ 100 ரூபாய் ஆகிறது, ஒரு கிலோ எண்ணெய் என்பது ஒரு லிட்டர் நூறு மில்லி எனவே ஒரு லிட்டர் எண்ணெய் விலை சுமார் 90 மட்டுமே ஆகிறது. அதற்கு சுமார் 30 % லாபமாக வைத்தால் கூட அதிக பட்சமாக 125 அல்லது 130 ரூபாய் தாண்டவேண்டிய அவசியமே இல்லை என்றார்.

சரி செக்கு எண்ணெய்க்கு என்றேன்,

 அவர் செக்கில் ஆட்டும் போது 10% எண்ணெய் குறைவாக கிடைக்கும் ஆனால் அதில் வரும் புண்ணாக்கில் சற்று எண்னெய் கூடுதலாக இருக்கும் எனவே அதன் புண்ணாக்கு சற்று விலை கூடுதலாக கிடைக்கும் . எப்படி பார்த்தாலும் இதுதான் சராசரியான கணக்கு என்றார்.

  இதுதான் உண்மை, இதில் செக்கு எண்ணெய் ஆயுளை கூட்டும் அதிக பலன் தரும் என்பதெல்லாம் பொய்யே.. மில் தயாரிப்பில் என்ணெய் சூடாகிவரும் அதுனால அது சரியானது இல்லை என்பது பொய் வாதம்,
 உடம்புக்கு சரியில்லைன்னா மட்டும் எண்ணெயை காயவைத்து தடவுன்னு மட்டும் சொல்லதெரியுது,  ஆனால் நாம் செக்கு எண்ணெய் என்கிற பேரில் ஏமாற்றப்படுகிறோம் என்றே எனக்கு மனதில் படுகிறது. உங்களுக்கு....






கருத்துகள் இல்லை: